என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்? – போஸ்ட் மார்டம்

குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள். சிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம். நான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். இப்போது இந்த சோதனையின் முடிவுகள்:

Continue reading

மன்னித்து விட்டோம்

sorry சொல்லும் சில புகைப்படங்களை பார்க்கையில் ‘அட!!! வித்தியாசமாக இருக்கிறதே’ என்று தோன்றியது. அடுத்த சில நாட்களிலேயே ‘எதற்கு வருந்த வேண்டும். நாம் செய்தது நியாயமே’ என்று சிலர் கிளம்ப ‘சபாஷ் சரியான போட்டி’ன்னு சொல்ல தோன்றாவிட்டாலும், இந்த போட்டியின் போக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது. இப்போது ‘appologies accepted‘ (மன்னித்து விட்டோம்) என்று ஒரு தளம் துவக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் இங்கே சில புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.

apologies accepted
இந்த தொடர் இயக்கம் ஒரு விதத்தில் ஒரு பார்வையாளனாக எனக்கு சுவாரசியமாக இருந்தாலும் இது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. எங்கும் இருப்பது போல் போல் இரு தரப்பிலும் கொள்கை பிடிப்புடைய சிலர் இருக்கவே செய்வார்கள். ஆனால் இதுக்கு பின்னாடி வியாபார எண்ணங்கள் யாரும் இருக்கிறது என்று ஒரு சின்ன சந்தேகம். sorryeverybody.com டி-சர்ட்களை பார்க்கையில் இந்த சந்தேகம் கொஞ்சம் வலுக்கவே செய்கிறது. அடுத்து என்ன? sorry சொல்லும் Coffe mugs, pens, paper weights, வாழ்த்து அட்டைகள் என்று வரிசையாக வந்தாலும் வரலாம். ]]>

தீராத விளையாட்டு OS

SP2 நிறுவியிருந்ததை பற்றி எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட சமர்த்தாக இந்த புதிய சேவைப்பொதி வேலை செய்ததில் எனக்கு பெரிய ஆச்சரியம். Continue reading

வணக்கம் WordPress

Nucleus/Blog:CMS க்கு குட் பை சொல்லி விட்டேன். சில/பல தொழில் நுட்ப காரணங்களாலும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் எனது தமிழ் வலைப்பதிவையும் WordPressக்கு மாற்றியிருக்கிறேன். பதிவுகளை நியூக்கிளியஸில் இருந்து WordPressக்கு கடத்தி வந்ததில் இன்னமும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வதாக உத்தேசம். புதிய தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன். நவன் பகவதி]]>