வலைப்பதிவராய் ஒரு வருடம்

இந்த வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது.

இந்த ஒரு வருடத்தில் 117 பதிவுகளும் அதற்கு 263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் 8 templates, 2 weblogging software என்று சில உபரி statisticsஉம் நினைவிற்கு வருகிறது.

இன்னொரு புறம் பார்த்தால் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் ஓரிரு பதிவுகளை தவிர உருப்படியாக ஏதும் எழுதியதாக நினைவுக்கு வரவில்லை. இந்த ஒரு வருடத்தில் பள்ளி/கல்லூரி நாட்களில் படிக்காத தமிழினை கொஞ்சம் எழுதிப் பழகியிருக்கிறேன் என்பது மட்டும் கொஞ்சம் மகிழ்வாக இருக்கிறது. Continue reading

வெண்ணையை விடமாட்டேன்

டில்பர்ட், Calvin and Hobbes எல்லாவற்றிற்கும் முன்பாக நான் இரசித்த முதல் கேலிச்சித்திரம்/கார்ட்டூன் அமுலின் வெண்ணெய் விளம்பரங்கள் தான்.

அடுத்ததாக அமுல் வாயில் அகப்படவிருக்கும் அவல் யார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்த நாட்கள் உண்டு. நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அமுல் இணையதளத்தில் அமுலின் பிரபல விளம்பரங்களை பார்க்க நேர்த்தது.

Continue reading

Lt Gen Jagjit Singh Aurora

General Jagjit Singh Aurora

Lt Gen Niazi, Commander of the Pakistani Forces in East Pakistan (Now Bangladesh) signing the surrender document for Lt Gen Jagjit Singh Aurora. Watching the ceremony are Vice Admiral N Krishnan (FOC-in-C Eastern Naval Command), Maj Gen K V Krishna Rao (GOC, 8 Div – Behind the Vice Admiral), Air Marshal H C Dewan (AOC-in-C, Eastern Command) , Lt Gen Sagat Singh (GOC, IV Corps), Maj Gen J F R Jacob (Chief of Staff, Eastern Army Command) and Maj Gen Gandharv Nagra (GOC, 101 Communication Zone)

கடந்த இரு நாட்களாக இந்திய ஊடகங்களில் இந்த புகைப்படத்தை அடிக்கடி பார்த்திருக்கக் கூடும். செவ்வாயன்று காலமான ஜெனரல் ஜகஜித் சிங்க் அரோராவின் பெயரை வரலாற்றில் உறுதி செய்து விட்ட படம் இது. கூடவே கீழேயிருக்கும் ஒரு முக்கிய ஆவணத்தின் நகலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Continue reading

Excuses for not voting

– உண்மையிலேயே இன்னைக்கு எலக்க்ஷனா? இதுவும் அரசாங்கத்தின் இன்னொரு பொய்யுன்னுல்லா நினைச்சுட்டு இருந்தேன்!.
– “None of the above” அப்படிங்கிற ஆப்ஷனே கொடுக்கலை? வேற எதுல குத்துறதுன்னு தெரியலை.
– என்னது தேர்தலா? இன்னைக்கா? என் டிவி பொட்டி ரிப்பேருங்க. பத்திரிக்கையிலயும் விளையாட்டு பக்கம் மட்டும் தான் பாக்குறது. நிசமாவா சொல்றீங்க இன்னைக்கு தேர்தலுன்னு?
– ஓட்டு போட்டு என்ன பிரயோசனம். எப்படியும் labour party தான் ஜெயிக்கப் போகுது. பின்ன என் ஓட்டு மட்டும் அதை மாத்த போகுதா என்ன?
– எனக்கு பதிலாக ஓட்டு போடுவதாக உறுதியளித்த எனது நாய் என்னை ஏமாற்றி விட்டு வாக்கு சீட்டை விழுங்கிவிட்டது.
– ஹி..ஹி.. ஆடி மாசம் வந்தா தான் எனக்கு 18 வயசு ஆகுது.
– இன்னைக்கு தலைக்கு குளிச்சிருக்கேன்.

More excuses here

சுனாமி உதவி

Cheque for two rupees

இரண்டு ரூபாய் நஷ்ட ஈடு. That is what Charity gets.

BBC News: Two rupee tsunami aid

Bureaucracy ஓரிவருக்கு மட்டும் அளித்திருக்கும் பரிசா? அல்லது அந்தமான் இந்தியாவின் ஒதுக்கப்பட்ட பகுதியாக இருப்பதன் எடுத்துக்காட்டா?

Indic Developer Challenge

Microsoft Indic Developer Challenge

மைக்ரோஸாஃப்ட் இந்திய மொழிகளில் மென்பொருட்களை உருவாக்குவதற்காக கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஒரு போட்டியினை அறிவித்துள்ளது. பாஷா இந்தியா தளத்தில் இது பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்.

இந்த அறிவிப்பை பார்த்தவுடன் இது போன்ற ஒரு போட்டியினை திறமூல ஆர்வலர்கள் ஏன் நடத்தக் கூடாது என்று தோன்றியது.

– மென்பொருட்களை தமிழாக்கம் செய்வது
– புதிய மென்பொருட்களை உருவாக்குவது
– தமிழில் உதவி பக்கங்கள் எழுதுவது
– மென்பொருட்களுக்கான கையேடுகள் எழுதுவது
– கல்லூரிகளில், பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியினில் அமைந்த இணையதளம், மாணவர்களுக்கான வலைவாசல்

என்று பல தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தலாம்.

இதனை எடுத்து செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் குழுக்கள் தயாராக இருந்தால் அவர்களுக்கு என்னாலான பங்களிப்பினை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பொதுவாகவே M$ மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நமது பாடத்திட்டங்களின் நடுவே இது போன்ற போட்டிகள் மாணவர்களின் பார்வையினை பிற தொழில் நுட்பங்களின் பக்கம் திருப்ப உதவி செய்யக் கூடும். Any takers?