தீராத விளையாட்டு OS

SP2 நிறுவியிருந்ததை பற்றி எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட சமர்த்தாக இந்த புதிய சேவைப்பொதி வேலை செய்ததில் எனக்கு பெரிய ஆச்சரியம். ஆனா இன்னைக்கு நடந்தது என்ன? கணினியை தொடக்கினால் “New updates are ready to install” என்று ஒரு சேதி காத்திருக்கிறது. அது என்ன புதிய அப்டேட் என்று பார்த்தால் SP2.

What is wrong???
என்ன இது மதுரைக்கு வந்த சோதனையாக உள்ளதே. நான் ஏற்கெனவே நிறுவிய சேவைப்பொதிக்கு என்ன ஆயிற்று என்று தேடிப் பார்த்தால் அதுவும் இன்னமும் இயக்கத்தில் தான் இருக்கிறது.
Already installed this :(
இதே பிரச்சனை வேறு யாருக்காவது நேர்ந்திருக்கிறதா? இப்போதைக்கு இந்த updateஐ நான் ஓட்ட போவதில்லை. இதுவும் SP2 வில் உள்ள பலரும் அறிந்த பிரச்சனைகளில் ஒன்றா என்று கொஞ்சம் தேடிப் பார்க்க வேண்டும். அதன் பின் பார்த்துக் கொள்ளலாம்.]]>

One thought on “தீராத விளையாட்டு OS

  1. இது விண்போஸ் இயங்கு தளத்தின் தலையெழுத்து.
    நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்

Comments are closed.