பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்

நுழைவுத்தேர்வில் தேர்வாகியும் குறைந்த வயது என்று காரணம் காட்டி என்னை சேர்க்க மறுத்தது பள்ளி தலைமை. அப்புறம் என்ன செப்டம்பர் பிறந்த என்னை ஏப்ரல் மாதம் பிறந்ததாக ஒரு (பொய்) சான்றிதழ் தயார் செய்து என்னை அந்த வருடமே பள்ளியில் சேர்த்து விட்டனர் எனது பெற்றோர். அதன் பின் அனைத்து படிவங்களிலும் பிறந்த நாள் ‘ஏப்ரல் 25’ என்று எழுதி எழுதி எனக்கு உண்மையான பிறந்த நாளே நினைவில் இல்லாமல் போய்விட்டது. வீட்டில் வேறு ஆங்கில நாள் படி பிறந்த நாள் கொண்டாட மாட்டார்கள். பிறந்த நட்சத்திரம் என்றோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட்டங்கள். அப்புறம் கல்லூரி வேலை என்று வளர்ந்த பின்னும் இன்னமும் எனக்கு பிறந்த நாள் நினைவில் இருப்பது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கால கட்டத்தில் வெவ்வேறு நாளை பிறந்த நாளாக கூற இப்போழுது செப்டெம்பர் 25 முதல் செப்டெம்பர் 28 வரை தினமும் யாராவது ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

இன்று

இது நாள் வரைக்கும் இந்த குழப்பம் எனக்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தேன். நாளை இணையத்தின் பிறந்த நாள் என்ற செய்தியை படிக்கும் வரை. இன்றைக்கு இனையத்தின் ’35’ஆவது பிறந்த நாள் என்று படித்த போது, "என்ன இது, போன வருடம் தானே இணையத்திற்கு 20 வயது என்று சொன்னார்கள். ஒரு வருடத்தில் 15 வயது கூடி விட்டதா?" என்று பெரிய குழப்பம். அப்புறம் தான் கூகளாண்டேஸ்வரர் புண்ணியத்திலே விஷயம் தெளிவாயிற்று. உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இணையத்தின் தொடக்கம் என்பது ஆர்பாநெட் (ARPANET) தான் என்று. இந்த ஆர்பாநெட் துவங்கியது 1969, செப்டெம்பர் 1 அன்று. இதனை மனதில் கொண்டு தான் இணையத்திற்கு 35 வயது என்று ஒரு பிரிவினர் வாழ்த்துகின்றனர். "ஆனால் உண்மையிலேயே இணையத்தின் தொடக்கம் என்பது என்பது TCP/IP அறிமுகமான அன்று தான். அப்படி பார்க்கையில் 1983, ஜணவரி 1 தான் ஆர்பாநெட் TCP/IPக்கு மாறிய நாள். ஆகவே ஜணவரி 1 தான் இணையத்தின் பிறந்த நாள்" என்பது இன்னொரு பிரிவினரின் வாதம். பிறந்த நாள் எதுவாய் இருந்தால் என்ன. ஏப்ரல் 25 அன்றும், செப்டெம்பர் மாதத்திலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் நண்பர்களுக்கு பிராய்சித்தம் செய்வதற்கு பதிலாக நானும் இனி வருடம் இரண்டு முறை இணையத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். Happy Birthday INTERNET! இந்த குழப்பம் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்]]>

3 thoughts on “பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்

 1. Dear Navani[Navan]

  My advance birthday wishes for you.
  Site is so nice which needs lot of perseverance and motivation and I am really proud that you possess all of them. All the best in your future endeavours buddy.

  Take care
  Jothikannan

 2. வாடா ஜோதி,

  எனக்கு "ஜே ஜே" படம் பார்க்கும் போது உன் நியாபகம் தான்டா வந்தது. ஏன்னு புரியும்னு நினைக்கிறேன்.

 3. Da gunda…I went thru your comments after a long lull of 5 years 🙂 but couldnt understand the meaning… 🙂 take care

Comments are closed.