கண்ணு பட போகுதய்யா

வலைப்பூவிற்கு கண்ணேறு பட்டுவிடாமல் இருக்க

திருஷ்டி பூசனி
இப்பம் எதுக்கு திருஷ்டி பூசணி. அது தான் ஏற்கெனவே திருஷ்டி கழிச்சாச்சேங்குறீங்களா. அதுவும் சரி தான் 🙁

]]>

ரஷ்யாவில் குழந்தைகள் விடுதலை

ரஷ்யாவின் ஒசெட்டா மாகாணத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் இன்று காலை ரஷ்ய துருப்புகள் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இன்று காலை வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று கேட்ட முதல் வெடிச் சத்தம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே ரஷ்ய துருப்புகள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்திருக்கிறது.

Continue reading

ஜர்னலிசத்தின் இன்னொரு பெயர் RSS

மெட்ரோ. இது இங்கிலாந்தின் பெரு நகரங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு தினசரி. இதில் சென்ற வாரம் எரிதத்தை தடுப்பதற்காக (Spam filter) ஐபிஎம் (IBM) நிறுவனம் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஐபிஎம் உருவாக்கிவரும் ஒரு புதிய மென்பொருள் எரிதத்தை முழுவதுமாக தடுத்து நிறுத்தும் திறன் படைத்தது என்று அறிந்ததும் எனது ஆவல் அதிகரித்தது.

Continue reading