உதவி தேவை: லினக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்

முதலிலேயே சொல்லி விடுகிறேன், இணையத்தில் தமிழ் என்பது நான் மிக சமீபத்தில் கண்டு கொண்ட விடயம். அதனால் இது சம்பந்தமாக என்னென்ன முயற்சிகள் நடந்திருக்கின்றன் என்று தெரியவில்லை. (US) நவனுடைய வலைப்பதிவை பார்த்த பின் தான் நான் ‘முரசு அஞ்சல்’ ‘ஈ கலப்பை’ எல்லாவற்றையும் கண்டுபிடித்தேன். அதனால் நான் தேடி கண்டுபிடிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது. வெங்கட்டின் தளம் இப்போது வேலைநிறுத்தம் செய்து வருவதால் அவர் இது வரை என்ன எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. அது தவிர நான் கூகிளில் தேடியதில் எனக்கு கிடைத்த சுட்டிகளில் லினக்ஸ் கல்விக்கு உதவும் வகையில் கிடைத்த சுட்டி http://www.digitalq.net/tam_linux.htm இது தவிர வேறு பல தகவலகள் இணையத்தில் இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. அடுத்ததாக தமிழா! குழுவினர் லினக்ஸ் செயல் விளக்கம் மாதிரி ஏதாவது கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. லினக்ஸ் அறிமுகத்தில் இருந்து தொடங்கி புதிதாக லினக்ஸ் பக்கம் வருபவர்களுக்கு ஒரு செயல் விளக்கம் மாதிரி ஏதாவது எழுத முடியுமா என்று யோசிக்கிறேன். என்னால் கலைச்சொற்கள் எல்லாம் உபயோகித்து சுத்தமான தமிழில் எழுத முடியும் என்று தோன்றவில்லை. கூடுமான வரைக்கும் சுத்த தமிழில் எழுத முயற்சித்தாலும் நிறைய பேச்சு வழக்கில் தான் என்னால் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

 • இதற்கு உதவியாக ஏற்கெனவே கிடைக்கும் கட்டுரைகள் மற்றும் இது போன்ற வேறு முயற்சிகளுக்கான சுட்டிகள் கொடுத்தால் உதவியாயிருக்கும். (I don’t want to reinvent the wheel).
 • என்ன மாதிரி விடயங்கள் தேவைப்படுகின்றன என்றும் சொன்னால் நல்லது.
]]>

10 thoughts on “உதவி தேவை: லினக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்

 1. அன்பு நவன் பகவதி அவர்களுக்கு,

  நல்ல பல தகவல்களைக்கொண்டவற்றுக்கு கிறுக்கல்கள் எனப் பெயர் வைத்தது என்னவோ போல் இருந்தது.அனைத்தும் பயனுள்ள தகவல்களே.இந்த லினக்ஸ் சம்பந்தமான கட்டுரை தலைப்பும் பயந்தரத் தக்க வகையில் அரிய தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.வாழ்த்துக்கள் நவன்.

 2. aagaa… aavaludan ethir paarkiren. kalluri padikkum bothu electronics solli koduthe.. ippo linux. vaalzhthukkal maple!

 3. முத்தமிழ்: இங்கே வந்திருந்ததற்கு மிக்க நன்றி. என்னை விட பெரிய பெரிய ஆளுங்களே ‘கிறுக்கல்கள்’னு பேர் வைச்சிருக்காங்க.

  கணபதி: ‘notepad’இல் இருந்து வெளியேற ‘:q!’ உபயோகிக்கிறவங்களுக்கெல்லாம் இங்கே புதுசா ஒன்னும் இருக்காது. 😆

 4. அன்பு நம்பரே,,

  நிண்டோஸ் 2000 செர்வரின் ஆக்டிவ் டைரக்ட்ரியை எப்படி லைனக்ஸுடன் இனைப்பது என்று சொன்னீர்களானால் பயனுள்ளாதாக இருக்கும்

 5. நவன்….தெரியாத்தனமா என்னை லைனக்ஸில் தூக்கி பொறுப்பாளரா போட்டுட்டாங்க.. இன்னமும் விண்டோசும் பாத்துகிட்டுதான் இருக்கேன்.. எனக்கு ஒரு சந்தேகம் லைனக்ஸில்.. நான் ஒரு டிஸ்க்லெஸ் கிளையண்ட் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.. அதற்கு என்னபன்ன வேண்டும். என்னிடம் நிறைய பி1 மெசின்கள் நிறைய உள்ளன.. அவைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா? நன்றி

 6. [7]

  செல்வகுமார்,

  இதற்காக உருவானது தான் லினக்ஸ் டெர்மினல் செர்வர் திட்டம் (Linux Terminal Server Project – LTSP). http://www.ltsp.org/ போய் பாருங்களேன்.

  அதே போல் இதுவும் உங்களுக்கு உதவியாய் இருக்கலாம்.
  http://etherboot.sourceforg

  டெபியன் லின்க்ஸிலும்(http://www.debian.org) இதற்காக சில பாக்கேஜ்கள் கிடைத்து வந்தன. அவற்றின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவைல்லை.

 7. [8] நானும் LTSP வழியாகத்தான் முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய நெட்வொர்க் கார்டு சரியாக எடுத்துகொள்ளவில்லை. என்னுடைய கார்டு இண்டெல் 82557 மாடல். அதில் இ இரோம் உள்ளது.ரோமில் என்ன மாதிரியான பூட்டிங்கொடுக்கவேண்டும். மேலும் டிஎப்டிபி செர்வர் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.. லாக் பார்க்கும்போது அச்செஸ் இல்லை என்று பிழை வருகிறது…

 8. செல்வகுமார்,

  http://etherboot.sourceforg… முயற்சி செய்து பார்த்தீர்களா. http://etherboot.sourceforg… என்ற முகவரியில் ‘Etherboot’ எப்படி உபயோகிப்பது என்று பல விளக்கங்களும் கிடைக்கின்றன.

  So far, I have n’t had an opportunity to try remote booting in Linux. All the diskless clients I set up were under Novell NetWare and Sun Solaris (for Jumpstart).

  ஆயினும் நீங்கள் இது வரை என்னென்ன முயற்சித்தீர்கள் என்று எனக்கு விளக்கமாக ஒர் அஞ்சல் அனுப்பினால் என்னால் ஏதும் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

Comments are closed.