Ambassador Classic in London :: இலண்டனில் ஓடும் அம்பாஸிடர் டாக்ஸிகள்
பெட்டகம்
வந்ததும் வராததுமாய்
13 January – 09:00 மணி
Heathrowஇல் இருந்து cricklewood போவதற்கு டாக்ஸி ட்ரைவர் ஏன் இப்படி சந்து பொந்தெல்லாம் சுத்துகிறான்? North circular road வழியாக போனால் விரைவாக போயிருக்கலாமே.?
ஏழு மணி நேரம் தோஹாவில் ட்ரான்ஸிட்டில் இரவை கழித்த களைப்பில் தூக்கம் வருகிறது. சிறிது நேரம் கண்ணை மூடுகிறேன்.
“நண்பா Cricklewood வந்துவிட்டோம். நீ எங்கே இறங்க வேண்டும்.”
விழித்துப் பார்க்கிறேன். வீட்டின் அருகே வந்து விட்டது புலனாகியது. இதோ Natwest Bank.
“வலது பக்கம் திரும்புப்பா. ” சொல்லிவிட்டு முழிக்கிறேன். வீட்டிற்கு இடது புறமல்லவா திரும்ப வேண்டும்.
Continue reading
ஹைய்யா… (ஐயோ!)
இன்னும் 48 மணி நேரம் தான் இருக்கு. ஊருக்கு போறதுக்கு பொட்டி கட்ட ஆரம்பிச்சாச்சு.” ஒரு மாதம் விடுப்பு (!).
ஒரு வருசமா நிம்மதியா இருந்த எனது வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் இனி ஒரு மாதம் போதாத காலம்.
ஐயோ பாவம் (?).
Nokiaவின் பார்வையில்
என்னுடைய புதிய Nokia 6230ல் இருந்த காமிராவுடன் கொஞ்ச நேரம் விளையாடியதில்
பாதுகாப்பா இல்லைன்னா…
USATODAYயில் வந்திருக்கும் ஒரு நல்ல கட்டுரை. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றும் கூட.
கணினி பாதுகாப்பு விசயத்தில் அசட்டையாக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று விளக்குகிறது இந்த கட்டுரை.
Simply connecting to the Internet — and doing nothing else — exposes your PC to non-stop, automated break-in attempts by intruders looking to take control of your machine surreptitiously.
While most break-in tries fail, an unprotected PC can get hijacked within minutes of accessing the Internet. Once hijacked, it is likely to get grouped with other compromised PCs to dispense spam, conduct denial-of-service attacks or carry out identity-theft scams.
Those are key findings of a test conducted by USA TODAY and Avantgarde, a San Francisco tech marketing and design firm. The experiment involved monitoring six “honeypot” computers for two weeks — set up to see what kind of malicious traffic they would attract. Once breached, the test computers were shut down before they could be used to attack other PCs.
தொடர்ந்து படிக்க: USATODAY.com
ஆயுசு ஆயிரம்
டிசெம்பர் 03, 1984 – தொடர்கிறது
யூனியன் கார்பைடு கெஸ்ட் ஹவுஸிற்கு வந்து சேர்ந்ததும் ஆண்டர்சென் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு வைத்து அவரைக் கைது செய்கிறார் ஸ்வராஜ் பூரி.
ஸ்வராஜ் பூரி இன்றும் சொல்வது
“நான் செய்வது சரியென்று திடமாக நம்பினேன். அந்த மூன்று நாட்களும் நான் நகரத்தில் நரக அவஸ்தையை பார்த்திருந்தேன்.”
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்க அரசின் தலையீட்டால் ஆண்டெர்சன் பெயிலில் விடுவிக்கப் படுகிறார். உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பியவர் அதன் பின் இந்தியா பக்கமே வரவில்லை.
மூன்று வாரங்கள் கழித்து யூனியன் கார்பைடு வெளியிடும் பத்திரிக்கைச் செய்தியில் இன்னும் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகிறது.
டிசெம்பர் 03, 1984
மறதி… சில நேரங்களில் மனிதனுக்கு கிடைத்த வரம். மீதி நேரங்களில் மனிதனின் தவறுகளுக்கு முழுக் காரணம். காலம் எப்போதும் நமக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நாம் அவற்றை கவனிக்கிறோமா?
நேற்று பிபிஸி ஒளிபரப்பிய “One Night in Bhopal” பார்த்தேன். டாக்குமெண்டரியாகவும் இல்லாது ட்ராமாகவும் இல்லாது இரண்டையும் சரி விகிதத்தில் கலந்து படைத்திருந்தது எனக்கு புதிது.
போபால் விச வாயு சம்பவத்தை சின்ன வயதில் செய்தியாக கேட்டதும், படித்ததும் மறந்து பல நாட்கள் ஆகி விட்டது. நேற்று “One Night in Bhopal” பல பழைய விசயங்களை தொட்டுச் சென்றது.
MSN Spaces
மைக்ரோஸாஃப்டும் கோதாவில் இறங்கி விட்டது.
சில நாட்களாக ஜப்பானில் மட்டும் கிடைத்து வந்த MSN Spaces என்னும் மைக்ரோஸாஃப்டின் ‘வலைப்பதிவு சேவை’ இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது.