Author Archives: நவன் பகவதி
தலை பத்து வார்த்தைகள்
Merriam-Webster இணைய தளத்தில் இந்த வருடம் தேடப்பட்ட தலை பத்து வார்த்தைகள். Merriam-Webster’s Words of the Year 2004
1. blog
2. incumbent
3. electoral
4. insurgent
5. hurricane
6. cicada
7. peloton
8. partisan
9. sovereignty
10. defenestration
2005ல் வெளிவரவிருக்கும் ‘Merriam-Webster Collegiate Dictionary, 11ஆம் பதிப்பில்’ முதன் முறையாக ‘blog‘ என்ற வார்த்தையும் நுழையவிருக்கிறது. (மூலம்: சி.என்.என். )
Blog noun [short for Weblog] (1999) : a Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by the writer
சென்ற வருட தலை பத்து வார்த்தைகளில் முதல் வார்த்தை ‘democracy’.
One Night in Bhopal
போபால் பேரழிவு நடந்து 20 வருடங்கள் கழித்து இப்போது தான் இந்திய அரசாங்கம் பாதிக்கப் பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டின் நிர்பந்தத்தினால் தான். ஆனாலும் முழுவதுமாக இழப்பு ஈடு செய்யப்பட்டிருக்கிறதா?
20 வருடங்களுக்கு பின் இன்றும், அடுத்த தலைமுறையையும் இந்த நிகழ்வு பாதித்து வருகிறது.
யூனியன் கார்பைடு (தற்போது Dow Chemicals) நிறுவனம் மற்றும் இந்திய அரசாங்கம் இரண்டுக்கும் நடுவில் பாதிக்கப்பட்டிருப்பது என்னமோ போபால் வாசிகள் தான்.
இணையத்தில் இது சம்பந்தமாக வாசித்துக் கொண்டிருந்ததில் 20 வருடங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தினை பற்றி பல தகவல்கள் கிடைத்தது.
பிபிஸி இன்று இரவு 9:00 மணி(GMT)க்கு ‘One Night in Bhopal‘ என்ற நிகழ்ச்சியை (BBC Oneஇல்) ஒளிபரப்பவிருக்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
Twenty years ago the world’s most devastating industrial disaster struck the Indian city of Bhopal. Thousands were killed instantly, and thousands more injured, when an American owned factory leaked poisonous gas into the night.
This film combines drama and documentary to tell the extraordinary stories of five people from the city, and to reveal why the catastrophe happened and how it could have been avoided.
அடுத்ததாக இப்போது படிக்க நினைக்கும் புத்தகம் ‘Javier Moro’ & ‘Dominique Lapierre’ (‘Freedom at midnight’ புகழ்) எழுதிய “Five Past Midnight in Bhopal“.
விண்டோஸ் RG – புதிய வெளியீடு
என்ன உங்கள் விண்டோஸ் கணினி அடிக்கடி தொல்லை தருகிறதா? கவலையை விடுங்கள். உங்களுக்காக புதிய மேம்படுத்தப் பட்ட விண்டோஸ் இயக்குதளம் இப்போது தயார்.
இதன் சிறப்பம்சங்கள், இது எப்படி இயங்குகிறது… போன்ற தகவல்கள் http://www.hallikainen.org/windoze/winrg.swf என்ற பக்கத்தில் கிடைக்கிறது.
எச்சரிக்கை: இந்த பக்கத்தை பார்வையிட உங்கள் உலாவியில் Flash Plugin இருக்க வேண்டும்.
You are a detatched intellectual
நான் யாருன்னு கேட்ட போது எனக்கு கிடைத்த விடை. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கனுமா? http://similarminds.com/leader.html போய் கேட்டு பாருங்க. அப்படியே *என்ன* விடை கிடைச்சதுன்னும் (முடிஞ்சா) சொல்லுங்களேன்.
Linux PR: SolarPC Announces the $100 Personal Computer
100 டாலருக்கு தனியாள் கணினி (Personal Computer) என்ற செய்தியை படித்த போது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. டிசெம்பர் மாதம் முதல் வெளிவர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். SolarPC தளத்தில் இதைப் பற்றி மேலும் ஏதும் செய்திகள் கிடைக்குமா என்று தேடிய போது கணினியுடன் என்னென்ன வன்பொருட்கள் வருகின்ற போன்ற செய்திகள் கிடைக்கவில்லை.
என்னுடைய அனுமானம் இந்த 100 டாலருடன், மானிடர் மற்றும் கீ போர்ட் போன்றவற்றிற்கான விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.
தற்போது இந்தியாவில் விலை குறைந்த கணினிகளின் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது? லினக்ஸ் கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? இது குறித்த தகவல்கள் தேடிக் கொண்டிருக்கிறேன். விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.
Free WordPress Hosting
WordPress கொண்டு வலைப்பதிவு துவங்கவோ அல்லது WordPressக்கு உங்கள் வலைப்பதிவை மாற்றவோ நினைத்தால்… கீழ்கண்ட தளங்கள் இலவசமாக WordPress கொண்டு உங்கள் வலைப்பதிவை இயக்கத் தயார் என்கிறார்கள்.
http://www.blogsome.com/
http://www.wordpressblogs.com/
ஆவல் இருப்பவர்கள் சோதித்துப் பார்க்கலாம். (இதனை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். எனது பரிந்துரை அல்ல. பின்னாளில் அவர்கள் சேவை திடீரென்று நின்று போனால் நான் பொறுப்பல்ல)
ஒரு பட்டியல்
இன்றைக்கு ஒரு திடீர் சோதனை செய்ததில் என் கணினியின் Windows partionஇல் ஒளிந்துக் கொண்டிருந்த மென்பொருட்கள்
விண்டோஸ் – Windows XP Professional
* ஓப்பன் ஆஃபிஸ்
* ஃபயர்ஃபாக்ஸ் (with extenstions DOM Inspector, Web Developer, Linkification, Chatzilla)
* மொசில்லா
* மொசில்லா தண்டர்பேர்ட்
* Outlook express
* எ கலப்பை
* Filezilla
* யாஹூ மெஸ்ஸஞ்சர
* 7-zip
கேளிக்கைகளுக்கு
* Winamp
* Realplayer
பாதுகாப்பிற்கு
* AVG Anti-virus personal edition
* Spybot S&D
* Lavasoft Adaware
* Spyware Blaster
* Google Desktop Search
* Picasa
* Gimp
(இது தவிர வேற கொஞ்சமும் இருந்தது. ஆனா அதெல்லாம் தொழில் முறையில் உபயோகமாகும் கருவிகள்)
ஒரு காலத்தில ‘குப்பைத் தொட்டியையும், வாஷ் பேசினையும்’ தவிர கண்ணில படுற எல்லாம் என் கணினியில் இருக்கனும். மென்பொருளை உபயோக்கிறேனா? பயனுள்ளதா? அதோட லைசன்ஸ் என்ன சொல்லுதுன்னெல்லாம் கவலைப்படாத காலம். இப்பம் நிறைய குப்பை சேர விடுவதில்லை. (ஆனா லினக்ஸ் partition – அது குப்பைத் தொட்டியை விட கேவலமா இருக்கு.).
உங்கள் கணினியில் எப்படி…?
Stinking Cigar – எனது பார்வையில்
“In Italy mum’s affection for her children is measured in calories” – இத்தாலிய நண்பன் ஒருவன் சொன்னது.
‘தனது தாய் அன்பு காட்ட வேண்டாம். ஒரு பார்வையாவது பார்க்கமாட்டாளா?’ என்ற 16 வயது குழந்தையின் ஆதங்கத்தை ‘Stinking Cigar‘இல் பதிவு செய்திருக்கிறார் அருண் வைத்யநாதன். பலர் ஏற்கெனவே சொன்னது போல் படம் நெடுக சின்ன சின்ன விசயங்களை பார்த்துப் பார்த்து செய்திருப்பது தெரிகிறது.