என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்?

கேள்வி??????
வலைப்பதிவர்களுக்கு ஏழு கேள்விகள்!!!. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.

சோதனைக்கு நீங்கள் தயாரா?

Continue reading

தேர்தல் இயந்திரங்கள்

அமெரிக்க ஓட்டெடுப்பு இயந்திரம் இந்திய வாக்கெடுப்பு இயந்திரம்திருவிழா ஜோரா நடந்திட்டிருக்கும் போது எப்போதோ படித்த ஸ்லாஷ்டாட் (Slashdot) பதிவு இன்று நியாபகத்திற்கு வந்து ‘இந்த முறை எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியை எழுப்பியது.

அமெரிக்காவில் வாக்கெடுக்க பயன்படும் இயந்திரங்கள் (Diebold, ES&S, Sequoia என்ற முக்கிய தயாரிப்புகள்) அனைத்தும் விண்டோஸ் இயக்குதளத்தை கொண்டு இயங்குபவை. இதில் Diebold இயந்திரத்தில் கடந்த சில வருடங்களில் பல பிரச்சனைகள் நேர்ந்திருக்கின்றன. Diebold இயந்திரங்களால் கடந்த சில வருடங்களில் நேர்ந்த குளறுபடிகளை www.computerworld.com பட்டியலிட்டிருக்கிறது.

techtarget.com நேற்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையினை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.

techtarget.com தளத்தில் இருந்து

The most popular tabulation software — GEMS, made by Diebold –came under scrutiny in 2002 when Bev Harris, an investigative journalist, found a copy of the source code on an unsecured Diebold Web site. The application runs on a standard Windows PC and requires a password to access vote data. Harris discovered vote data tored in an unprotected Microsoft Access database where anyone with physical access to the machine could tamper with the results — no password needed.

ஏற்கெனவே இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு நடக்கிற இந்த தேர்தலில் தொழில்நுட்பத்தால் ஏதும் பிரச்சனை நடக்காமல் இருந்தால் சரி.

நான் குறிப்பிட்ட ஸ்லாஷ்டாட் பதிவில் பெரும்பாலானோர் கேட்டிருந்த கேள்வி – “இவ்வளவு குழப்பாமான/பாதுகாப்பில்லாத இயந்திரத்திற்கு பதில் இந்தியா செய்திருப்பது போல ஒரு எளிமையான, அதே நேரம், பாதுகாப்பான இயந்திரத்தை அமெரிக்காவால் ஏன் சிந்திக்க முடியவில்லை?” அங்கேயே ஒருவர் செல்லியது போல அமெரிக்காவின் விண்வெளி பேனாவும் ரஷ்யாவின் பென்சிலும் தான் நியாபகத்திற்கு வருகிறது.

அமெரிக்காவில் ஜியார்ஜ் புஷ் அதிருப்தியாளர்களை விட இங்கே அதிகமாக டோனி பிளேர் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவுகள் விரைவிலேயே வரவிருக்கும் இங்கிலாந்து தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.

]]>

Fighting comment abuse and spam

இதற்கு ஒரு சின்ன வேலை செய்திருக்கிறேன். This is just an idea. மற்றவர்களின் ஈடுபாட்டினை பொருத்து தான் மேற்கொண்டு தொடரலாமா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

http://navakrish.com/abuse_report/ போய் பார்த்துட்டு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.

போன பதிவிற்கு வந்திருந்த பின்னூட்டங்களை பார்க்கையில் இதனால் பாதிக்கப்பட்டவன் நான் ஒருவன் மட்டும் இல்லை என்று தெரிக்கிறது.

]]>

Time to start a IP blocklist for Tamil Blogs?

இதை என்னென்ன சொல்றது. ஒரு ‘Mr. X’ நேத்து என்னோட லினக்ஸ் பதிவுக்கு வந்து 30 நிமிசம் செலவு செய்துட்டு அப்புறம் ரொம்ப ஆக்கப்பூர்வமா யோசிச்சு மூனு கமென்ட் எழுதிட்டு போயிருக்கார்.

Continue reading

எழுதுவதற்கு ஒன்றும் இல்லாத போது…..

வலைப்பதிவின் பெயரையாவது மாற்றி வைக்கலாம்.

‘கிறுக்கல்’னு *ரொம்ப பேர்* பேர் வைக்காங்கன்னு *ரொம்ப பேர்* வருத்தப்பட்டதனால ‘எனது கிறுக்கல்கள்’ன்னு இது வரைக்கும் நான் கூப்பிட்டுட்டிருந்த என்னோட வலைப்பதிவிற்கு இன்னையிலருந்து ‘தாமிரபரணித் தென்றல்‘னு புதுப்பெயர் சூட்டிட்டேன்.

பெயர் காரணம்???

பெரிசா ஒன்னும் கிடையாது. க்ரியேட்டிவா ஏதாவது யோசிக்கலாம்னா ஒன்னும் மாட்டலை :wink:.

நிறைய பேர் சொந்த ஊர் பெருமையை பேசுறதை பார்த்திருக்கேனா… சரி நாமளும் நம்ம ஊரு பெருமையை பேசுற மாதிரி ஏதாவது பேர் வைப்போமுன்னு தான்.

]]>

Microsoft GDI vulnerability

‘தேங்காய்ல பாம் வைப்பாளோ’ன்னு உதயகீதம் படத்தில ஒரு காமெடி வருமே. அது மாதிரி யாருமே எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Continue reading

உதவி.uthawi

uthawi

ஐரோப்பாவில் இருக்கும் சில நண்பர்களின் முயற்சியில் ‘உதவி’ என்னும் இணையத்தளம் நடந்து வருகிறது. இலங்கையில் சரியான பொருளாதார வசதி இல்லாமல் தவிக்கும் ‘சிறுவர் இல்லங்களுக்கு’ தங்கள் முயற்சியால் பல உதவிகளை செய்து வருகிறது ‘உதவி’.

Continue reading