இப்பொழுது தான் பார்த்தேன். யாஹூ 360 உபயோகிக்க விரும்புவோர் இனியும் பிறரின் அழைப்புக்காக காத்திருக்க தேவையில்லை. சோதிக்க/உபயோகிக்க விரும்புவோருக்கான சுட்டி இதோ: Yahoo! 360° – Home
—-o0o——–o0o——–o0o——–o0o—-
உங்கள் வலைப்பதிவுகளை நிறுத்தி வைப்போம் என்று சிலர் குறும்பாக சொல்லி வைக்க அதனை வாசித்த பலரும் ஆடிப்போயிருப்பதாக தெரிகிறது. தன் “Hard Disk Drive”ஐ அழிச்சுத் தொலைச்ச hackerஐ பற்றி இரு மாதங்களுக்கு முன்பு படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
அதற்காக இணைய தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் இருங்கள் என்று நான் சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு பயப்படாமல் இருந்து விட்டால் அதனால் விளையும் பின் வளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாதலாததால், உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வழிமுறையும் சொல்லி விடுகிறேன்.
இந்த வழிமுறையினை பின் பற்றுவதால் இணைய தீவிரவாதிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், Ad-ware, Spyware, Virus, Identity theft போன்ற பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதற்காக உங்கள் மேலதிகாரி எனக்கு நன்றி செலுத்தவும் கூடும் – அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க போவதால்.
உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த தீயரண் (Firewall) எல்லாம் தேவைப்படாது. இணைய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு சுலபமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு உங்களுக்கு அதிகம் செலவாகாது. அதே நேரத்தில் அகலப்பாட்டை, ராஜாபாட்டை என்று நீங்கள் எந்த வகையான இணைப்பு வைத்திருந்தாலும் இது வேலை செய்யும்.
இது பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் செயல் விளக்கம் இங்கே.
பி.கு: இணையத்தில் உள்ள பிற தொழில் நுட்பங்களை போன்று இதுவும் சிலரால் தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.