நரியுடன் ஓர் உலா – 2

ஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.

சென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..

கோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ரொம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

Firefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.

10 thoughts on “நரியுடன் ஓர் உலா – 2

 1. நவன் நல்லா வந்திருக்கு, (இன்னும் ஒலி கேட்கவில்லை)
  உடனே ஒரு பெட்டிஷன்:)
  ப்ளாக்ஸ்பாட் டெம்ப்ளேட்டில் தமிழ்மணம் மதிப்பீடு/மறுமொழி எண்ணிக்கை பகிர்ந்துகொள்ளும் ஜவாஸ்க்ரிப்ட் துண்டை எப்படி சேர்ப்பது என்று ஒரு படம் பண்ணமுடியுமா?
  என்ன செலவானாலும் பரவாயில்லை:P

 2. நவன், நன்றாக வந்திருக்கிறது. ஆனால், இது புதிய பயனர்களுக்கு சற்று வேகமாக இருக்குமென நினைக்கிறேன். கொஞ்சம் நிறுத்தி, சற்று இடைவெளி விட்டு விளக்கிச் சென்றீர்களென்றால் அருமையாக இருக்கும். அப்படியே, இன்னும் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டையும் அதிகப்படுத்துங்களேன்.

 3. அருமை..அருமை. மிகவும் நல்ல விளக்கப்படம். மொசில்லாவில் கலப்பை உழவில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர். எழுத்துக்கள் கலங்களாகத் தெரிகிறது. அதனாலேயே நான் இன்னும் பயன்படுத்த தயங்குகிறேன். மற்றபடி மொசில்லாதான் மற்ற உலாவிகளைவிட பெஸ்ட்.

 4. நவன்,

  பொறுத்து செய்யுங்க. (வேற என்ன சொல்லமுடியும்:-))

 5. நவன்,

  நெருப்பு நரியில் விகடன் டாட்காம், மற்றும் தட்ஸ்தமிழ் டாட்காம் எழுத்துருக்கள் சரியாக வருவதில்லை.

  இரண்டு நாட்களுக்கு முன் தான் காசியாரின் ஆலோசனைப்படி இன்டிக் லங்குவேஜை நிறுவினேன். …
  என்ன பண்ணினால் இந்த எழுத்துருக்கள் சரியாக தெரியும்னு சொல்லுங்களேன்!

  it works fine in IE. i have uninstalled and re-installed these fonts.. still no luck.

 6. ராதா: முதலில் கொஞ்சம் இதை விட கொஞ்சம் வேகம் குறைவாக தான் சொல்லியிருந்தேன். ஆனால் கேப்பின் அளவு அதிகமாக தோன்றியதால் அங்கங்கே கத்திரித்து கடைசியில் இப்படி ஆகி விட்டது.

  மூர்த்தி, kannadi: நன்றி.

  பாண்டி: இங்கே ஃபயர்ஃபாக்ஸில் இரண்டு தளங்களும் நன்றாக தெரிகிறதே.

  இந்த encodingகளை முயற்சித்து பாருங்களேன்.

  vikatan.com -> Western (Windows – 1252)
  thatstamil.com -> Western (ISO-8859-1). Also download and install this font: http://www.thatstamil.com/Shree802.ttf

 7. //ப்ளாக்ஸ்பாட் டெம்ப்ளேட்டில் தமிழ்மணம் மதிப்பீடு/மறுமொழி எண்ணிக்கை பகிர்ந்துகொள்ளும் ஜவாஸ்க்ரிப்ட் துண்டை எப்படி சேர்ப்பது என்று ஒரு படம் பண்ணமுடியுமா?//

  காசி: மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

  //என்ன செலவானாலும் பரவாயில்லை:P//

  ( ‘Recorded delivery’ல Invoiceஉம் அனுப்பியிருக்கிறேன். மறக்காம payment அனுப்பிடுங்க. 🙂 )

Comments are closed.