குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள். சிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம். நான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். இப்போது இந்த சோதனையின் முடிவுகள்:
- குருஜியாக தேர்வானோர் : 23 பேர்
- கவன ஈர்ப்பு வலைப்பதிவராக தேர்வானோர்: 12 பேர்
- சுட்டி வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்
- நறுக் வலைப்பதிவராக தேர்வானோர்: 11 பேர்
- சமூக பதிவராக தேர்வானோர்: 3 பேர்
- சின்ன சின்ன விசயங்களை கூட அந்தரங்கம் என்று பொத்தி வைக்கும் நமது பழக்கம்.
- அனைவருமே சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறார்கள்
- தங்களை ஒரு சிந்தனையாளராகவோ, அல்லது சமூக நலனில் அக்கரை உள்ளவராகவோ காட்டிக்கொள்வதில் தான் அனைவரும் முனைகிறார்கள். தங்கள் வாழ்க்கையை பிறருக்கு தெரிவிப்பதால் பிறருக்கு தங்களது பிம்பம் கலைந்து விடுமோ என்ற பயம்.
- இயல்பாகவே நமது சமூகத்தில் வளர்ந்தவர்களுக்கு உள்ள சங்கோஜம்.
கண்ணன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். மதியம் இரண்டு மணி நேரம் தூங்கி விட்டபடியால் எனக்கு தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்தேன். பதினைந்து நிமிட போராட்டத்திற்கு பின் இனியும் தாங்காது என்று எழுந்து கொண்டேன். இன்றைக்கு காலையில் ரமேஷுடன் ஃபோனில் பேசியதை பற்றி சொன்னேன் அல்லவா. மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்யலாமா என்று ஒரு யோசனை. இந்த நேரம் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பான். அவனையும் எழுப்பி விடுவதற்கு மனது வரவில்லை. போன மாதம் வாங்கின சிகரெட் பாக்கெடில் இன்னமும் ஒரு சிகெரட் மீதம் இருந்தது நியாபகம் வந்தது. அதனை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகே சென்று புகைக்க துவங்கினேன். பார்லிமெண்டில் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்ய முயற்சி செய்து வருவதாக இன்று காலையில் படித்தது நினைவுக்கு வந்தது. நாளைக்கு காலையில் ஆறு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டுமே. இப்பொழுது தூக்கம் வேறு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் தீபாவளிக்கு வாங்கின சட்டைத் துனி இன்னமும் தைக்காமல் அப்படியே உள்ளே இருக்கிறது. மறக்காமல் அதனை நாளை தைக்க கொடுக்க வேண்டும். அப்புறம் கேட்க மறந்துட்டேன். உங்க வீட்டிலே தீபாவளி எல்லாம் எப்படி? சிறப்பு தானே? சரி சரி.. நேரம் ஆகுது. சிகெரட் வேற முடிந்து விட்டது. நான் தூங்கப் போறேன். காலையிலே பார்ப்போம். குட் நைட்.ஹி.. ஹி.. இது சும்மா ஒரு சாம்பிள் என்று நினைத்து நான் முயற்சி செய்தது. ]]>
நவன்,
அந்த சொந்தக் கதை முதலில் என் பழைய ப்ளாக்ஸ்பாட் வலைப்பதிவில் எழுதியது, ஒரு மறுபதிப்பாக இருக்கட்டும்னு அங்கே போட்டு வைத்தேன். அதில் சில படங்கள் காணாமல் போயிருந்தன. மேலும் மறுமொழிகளுக்கு ப்ளாக்ஸ்பாட்டுக்குப் போகணும், அதுக்கு தொடுப்புக் கொடுக்கவேண்டியிருந்தது. இன்று உங்க புண்ணியத்தில் தள்ளிப்போட்டிருந்த வேலையை செய்துவிட்டேன்.
டாங்க்ஸ்:)
சுவாரசியமான அலசல். ஒரிஜினலிலும் போய் கேட்டுப் பார்த்தேன்; அதே விடைதான் இன்றும் வருகிறது 😉
எனவே, சிறப்பான மொழியாக்கமும் கூட 🙂
காசி: அந்தத் தொடரை சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன். இன்னமும் அனைத்து பதிவுகளையும் வாசிக்கவில்லை. இன்று எனது வழங்கியின் statisticsஐ ஆராய்ந்து இந்த பதிவை எழுதும் போது வலைப்பதிவில் ‘வாழ்க்கை குறிப்பு்’ என்றவுடன் உங்களது அந்தத் தொடர் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. அதற்கு காரணம் நான் படித்த அந்த சில பதிவுகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு தான்.
நிச்சயமாக பலருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு படைப்பாக அது நெடுங்காலத்திற்கு விளங்கும். பாராட்டுக்கள்.
பாலாஜி: நன்றி. அது என்ன ‘விடை’ என்று சொல்லவேயில்லையே??? 🙂