Troll – ஒரு விளக்கம்

Troll என்ற சொல்லுக்கு விக்கிப்பீடியா அளிக்கும் விளக்கம்:

1. A person who makes posts (on newsgroups or other forums) that are solely intended to provoke responses from others, or to cause annoyance or offense. 2. A post that is intended to incite controversy or cause offense. (Many posts may inadvertently cause strife as collateral damage, but they are not trolls.)
ஆங்கில குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் இது போன்ற மறுமொழிகள் வருவது சகஜம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சில சமயம் இது போன்றவர்களையும் அவர்களது மறுமொழிகளையும் “கோமாளிகளின் சேஷ்டைகளாக” எடுத்துக் கொள்வதுண்டு. சிலர் நகைச்சுவையாக மறுமொழி அளிப்பதும் உண்டு. ஆனால் எந்த ஒரு சமூகத்திலும் ஆபாசமாக பேசுவதென்பது ஏற்புடையது அல்ல. அதிலும் நமது கலாச்சாரத்தில் கட்டுப்பாடுகள் நிறையவே உண்டு. இணையத்தில் தமிழ் மொழியின் உபயோகம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் சிலர் கட்டுப்பாடில்லாத இந்த இணைய உலகத்தை தவறாக உபயோகிக்க துவங்கியுள்ளது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. குடும்பத்தில் அம்மா அப்பா உட்பட அனைவருக்கும் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த நான் முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சில சமயம் வரும் ஆபாச மறுமொழிகள் என்னை யோசிக்க வைக்கின்றன. இன்று இன்னொரு நாள். எனது வலைப்பதிவில் இன்னொரு மறுமொழி. இந்த முறை வந்திருப்பது மலேசியாவில் இருந்து.
Author : உண்மைவிளம்பி (IP: 219.95.191.243 , 219.95.191.243) E-mail : unmai@unmai.com URI : Whois : http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=219.95.191.243 Comment: நீங்கள் கீழே பார்க்கும்படியாகத்தான் என் கணினியில் தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும். நன்றி…. … இதற்கு பின் வந்த தரக்குறைவான வார்த்தைகள் நீக்கப்பட்டது.
எனது முந்தைய பதிவிற்கு மறுமொழி அளித்திருந்தவர்களையும் என்னையும் உசுப்பேத்தி விட இந்த மலேசிய நண்பர் முயற்சித்திருப்பதன் விளைவாய் இன்று முதல் எனது வலைப்பதிவிற்கு வரும் மறுமொழிகள் எனது மட்டுறுத்துதலுக்கு (comment moderation) பின்பு தான் பிரசுரமாகும். நன்றி. பின் சேர்க்கை: http://www.navakrish.com/abuse_report/ என்ற முகவரியில் இது போன்ற IP முகவரிகளை வெளியிடுவதும் தொடரும்.]]>

2 thoughts on “Troll – ஒரு விளக்கம்

  1. இறைவா… நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று 😉 எதிரிகளை நவன் பார்த்துக் கொள்வார் 😛

Comments are closed.