ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3

….ஓபன் சோர்ஸ் ஜிபிஎல் லில் squid பிராக்ஸி கிடைத்தது.. ஆனால் நான் எதிர்பார்த்த அந்த வசதிகள் கிடைக்கபெறவில்லை.
Squid வழங்கும் வசதிகள் போதவில்லை என்றால் வேறு பல மென்பொருட்கள் உள்ளன. உதாரணம் Smoothwall Express – http://smoothwall.org/ மற்றும் IPCOP – http://www.ipcop.org/. இவை இரண்டுமே பிராக்ஸி என்பதை தாண்டி தீயரண் சேவைகளையும் அளிக்கின்றன. இவை வழங்கும் பிராக்ஸியில் வேறு பல செயல்பாடுகளும் உண்டு. நீங்கள் என்னென்ன வசதிகளை தேடினீர்கள் என்று தெரிந்தால் வேறு சில மென்பொருட்களையும் பரிந்துரைக்க முடியும்.
ஓப்பன் சோர்ஸுக்கு சப்போர்ட் கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் சிலல குழுமங்கள் வழியாகத்தான் கிடைக்கும்.
நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி விட்டீர்கள். இந்த குழுமங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு மைக்ரோஸாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆதரவை விட சிறந்தது.
இன்றைக்கும் எல்லா அலுவலங்களிலும் பனம் செலவழித்து நிலையான ஒரு ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் வாங்கவே விரும்புகின்றனர்.. கோடிகனக்கில் பிஸினஸ் பன்னும்போது சில் ஆயிரங்கள் போவதை பற்றிய கவலை இல்லை.
இதற்கு புள்ளி விபரங்களுடன் என்னால் மறுப்பு கூற முடியும். கோடிகள் முதலீடு செய்த நிறுவனத்திற்கு பணம் ஒரு பொருட்டு அல்ல. ஆனால் அவர்களும் லினக்ஸ் பக்கம் சாய்வதற்கு காரணம் அது சிறப்பானது/பாதுகாப்பானது என்பது தான்.
இலவசங்கள் என்றைக்கும் தற்காலிகமே… இதோ ரெட்காட் லினக்ஸ்… இதுநாள் வரை இலவசமாக இருந்தது இன்று ஏன் எண்டர்பிரைஸ் செர்வர் என்கிற பெயரில் காசாக்கினார்கள் என்று சொல்லமுடியுமா? எல்லாம் ஓப்பன் சோர்ஸால் வந்த வினை. வருசத்திற்க்கு ஏகப்பட் ரிலீஸ்.. அதானல் அவர்கள் கட்டனமாக்கிஉள்ளார்கள்.
நீங்கள் ஓபன் சோர்ஸ் இயக்கத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. GPL உரிமத்தின் கீழ் வெளிவரும் எந்த ஒரு மென்பொருளையும் யாரும் விலைக்கு விற்க முடியும் (சில கட்டுப்பாட்டுகளின் கீழ்). அப்படி விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தான் ரெட் ஹாட். அவர்கள் லினக்ஸினை உருவாக்குகிறவர்கள இல்லை. பல்வேறு ஆர்வலர்கள் எழுதும் நிரல்களை பொட்டலம் கட்டி லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூசன் என்ற பெயரில் வெளிவிடும் இலாப நோக்குள்ள நிறுவனம் தான் ரெட் ஹாட். ஆனால் லினக்ஸின் அடிப்படையான ஆனை மூலம் என்றுமே இலவசம் தான். இந்த பொட்டலத்திற்கு தான் காசு. * http://www.kernel.org/ – லினக்ஸின் மூலமான கெர்னல் * http://www.kde.org/ – கே டி ஈ * http://www.gnome.org/ – ஜினோம் * http://www.koffice.org/ – கே ஆஃபிஸ் * http://www.openoffice.org/ – ஓபன் ஆஃபிஸ்
* http://www.mozilla.org/ – மொசில்லா * http://www.xfree86.org/ – XFree86 server * http://www.samba.org/ – சம்பா சர்வர் * http://www.apache.org/ – அபாச்சி வெப் சர்வர் * http://www.sendmail.org/ – Mail server இது போன்று வெவ்வேறு குழுக்கள் உருவாக்கும் மென்பொருட்களை பொட்டலம் கட்டி உங்களுக்கு ஒரே தட்டில் வழங்குவது தான் ரெட் ஹாட். குழுமங்களில் விடைகளை தேட நேரமும் பொறுமையும் இல்லாதவர்கள் இதனை போன்ற நிறுவனங்கள் வழங்கும் லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூசன்களை வாங்கும் போது இவர்களிடமிருந்து சப்போர்ட்டையும் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம். முற்றிலும் இலவசமான ஒரு லினக்ஸ் டிஸ்ட்ரிபியூசன் வேண்டுமா.. டெபியன் லினக்ஸ் பக்கம் போய் பாருங்கள் – http://www.debian.org/
"களவும் கற்று மற" அதற்காக.. குறுக்கு வழியில் மென்பொருளை இறக்கவேண்டுமென்று சொல்லவில்லை.. ட்ரையல் வேர் என்று சொல்கிறார்கள்..
அதே தான் நானும் சொல்கிறேன். ட்ரையல் வேர் உபயோகியுங்கள். அதன் நம்பகத்தன்மையை சோதித்த பின்பு. ‘களவும்’ என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் நீங்கள் அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நாமும் நம்பித்தானே இறக்குகிறோம்.. கடைசியில் நாள் முடிந்துபோனவுடன் நல்ல படியாக நீக்கினால் கூட ஏதாவது ஒன்றிரண்டு சர்வீசுகள் தொடர்ந்து கனினியில் தங்கி தொல்லை கொடுத்துகொண்டுதான் இருக்கிறது.
நீங்கள் ஸ்பைவேர்கள் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் கொடுத்தான் நான் வாங்கினேன் என்ற வாதம் கேட்கவும் பொழுது போக்கவும் நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இது போன்ற ட்ரையல் (ஸ்பைவேர்) சாஃப்ட்வேர்கள் நிறுவும் முன்பு அதன் உரிமத்தை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்தாலே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியும். ஒரு மென்பொருளை நிறுவுவதற்கு முன்பு அதன் லைசன்ஸில் எழுதியிருப்பதை வாசித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அநேகமாக எல்லா ஸ்பைவேர் வகை மென்பொருளும் அதன் லைசன்ஸில் தெளிவாக குறிப்பிடும் விடயம் "உங்களை பற்றிய விபரங்களை எங்கள் நிறுவனத்திற்கு இந்த மென்பொருள் அனுப்புவதற்கு நீங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறீர்கள்" என்பதாக தான் இருக்கும். இந்த லைசன்ஸிற்கு நீங்கள் உடன்பட்டு ஸ்பைவேரை நிறுவியபின் எந்த நாட்டின் சட்டமும் உங்களை காப்பாற்ற முடியாது. இதற்கு உதவியாக ஒரு சுட்டி http://www.spywareguide.com/product_search.php
அவர்கள் அப்படி செய்யும் போது நாமும் நம்மைப்பற்றி காட்ட வேண்டாமா? நல்லவனக்கு நல்லவன் …கெட்டவனுக்கு கெட்டவன்.. எல்லாரிடத்திலும் நல்லவனாக இருந்தால் ஆபத்து.. //
எப்படி..? புரியவில்லை.
நவன் மறுப்பு சொல்லவேண்டும் என்று நான் இங்கு உரைக்கவில்லை.. நான் பட்ட அனுபவங்கள் இவை.. ஒரு நல்லவர்… தப்பு செய்றவன பாத்து. " தம்பி அதுமாதிரி செய்யாத" அப்படின்னு சொல்றது அவர் கூற்றிலிருந்து நோக்கினால் சரியே..
நான் ஏற்கெனவே எழுதியதை மெய்பிக்க வேண்டும் என்று இந்த பதிலை எழுதவில்லை. இதனை தாண்டி வேறொரு உலகம் இருக்கிறது என்று மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தான் எழுதுகிறேன். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த விடயத்தை நான் மீண்டும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் மண்னிக்கவும்.
அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று அறிவோமானால் உண்மை வெளிவரும்
ஏன் செய்கிறான் ஏன்று யோசித்து தான் இந்த மாற்று மென்பொருட்களை அறிமுகப்படுத்த சொல்கிறேன்.
மென்பொருள்கள்… தனிப்பட்ட முறையில் கேட்டு பெற்றுகொள்ள நான் ஆசைபடுகிறேன்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள் Smile .உங்களை போன்ற கணினி வல்லுனர்கள் தான் புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு நல்ல பாதையை காண்பிக்க வேண்டும். அப்படியில்லத பட்சத்தில் … சூப்பர் ஸ்டாரோட ஃபேமஸ் பேட்டி (சமீபத்தில் கொடுத்தது அல்ல.) தான் நியாபகத்துக்கு வருகிறது. ஒரு வேளை MS Windows, Office XP, Access, SQL Server, இவற்றை கற்று தேர்ந்தால் தான் வியாபார உலகத்தில் சம்பாதிக்க முடியும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியும். அதற்காக இந்த மென்பொருட்கள் எல்லாமே குப்பை என்று நான் சொல்ல வரவில்லை. என்னோட கேள்வி என்னவென்றால் இதற்கு காசு கொடுக்க முடியாது என்றால் ஏன் அதை கட்டி மாரடிக்கனும். புதியர்களும் இளைஞர்களும் கற்க வேண்டியது மென்பொருளை பற்றிய அடிப்படைகளை தானே அன்றி ஒரு குறிப்பிட்ட மென்பொருளை அல்ல.
 • Newcomers and students should not waster their energy in mastering an individual product. Instead they should learn the core skills which they can apply in any given software.
 • Don’t focus on individual products like Oracle/SQL Server/Access, MS Word, MS Excel. Instead try to learn how to use a database, word processor, spreadsheet.
 • If you know how to use a word processor then you can easily switch to MS Word or Open Office or any other ‘XYZ Word’ when the need comes.
நிறுவனங்கள் இன்று எழும் நாளை வீழும். ஆனால் கணினியின் அடிப்படை தேவைகள் நிலைத்திருக்கும். Wordstar கொண்டு 15 வருடங்களுக்கு என்ன் செய்தோமே அதே தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் wordstarக்கு பதில் MS Office. இது வரைக்கும் இந்த பதிலை யாராவது படித்திருந்தால் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. அப்புறம் இரண்டாவது முறையாக இந்த விவாதத்தை நான் முடித்துக் கொள்கிறேன். (சில எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்தப்பட்டது.) ]]>

6 thoughts on “ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3

 1. 😀 உண்மையில் பயந்தரத்தக்க விவாதம் அது. ஆனாலும் ஓப்பன் சோர்ஸ் பற்றிய பெரிய கட்டுரையாக நீங்கள் வரைந்திருந்தால் பலருக்கும் பயனளித்திருக்கும். நீங்களும் நானும் மட்டும் பேசி கள்ள மென்பொருளை ஒழித்துவிடமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை!

  அடுத்தது, ஒரு விவாதத்தினை நிர்வாகி அனுமதி பெற்று முழுமையாகப் படைத்தால் படிப்பவர்க்கு நன்கு புரியும். முதலும் விட்டு கடைசியும் விட்டு இடையில் போட்டதால் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை.

  வாழ்த்துக்கள். 😆

 2. சரி, இந்த விவாதம் எங்கு நடைபெற்றது?

 3. மூர்த்தி: இதனை ஒரு கட்டுரையாக தான் எழுத நினைத்திருந்தேன். ஆனால் தற்போது நேரமின்மையால் முடியவில்லை. அதனால் தான் என் தரப்பு கருத்துகளை மட்டும் *எனது வலைப்பதிவில்* …

  //நீங்களும் நானும் மட்டும் பேசி கள்ள மென்பொருளை ஒழித்துவிடமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை!//

  மென்பொருள் திருட்டை ஒழிப்பதால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இலாபமும் கிடையாது. அது அந்தந்த மென்பொருட்களை உருவாக்குகிறவர்கள்/விற்பவர்களின் பிரச்சனை.

  எனது விருப்பம் எல்லாம் நம்மவர்கள் இது போன்ற திறந்த நிரல் மென்பொருட்களை அறிந்திருப்பது மிக முக்கியம். முதல் நிலை… என்னென்ன மாற்று மென்பொருட்கள் கிடைக்கின்றன என்று தெரிவது. இரண்டாவது நிலை அவற்றை உபயோகிக்க அறிந்து கொள்வது.

 4. //முதலும் விட்டு கடைசியும் விட்டு இடையில் போட்டதால் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை.//

  பத்ரி: இந்த விவாதம் நடைபெற்ற தளம் முத்தமிழ்மன்றம்.
  http://www.muthamilmantram….

  ஆனால் இதனை பார்வையிட நீங்கள் அந்த தளத்தில் கணக்கு துவங்கவேண்டும். 🙁

 5. அந்தக்கவிதை நான் எழுதியதா, அவன் எழுதியதா…?,
  அதைப்பற்றி நாந்தானே முன்னால சொன்னேன்…
  அமைதிப்படைன்னா அப்படித்தான்…
  மடக்கியெழுதனதெல்லாம் கவிதையா?

  போன்ற விவாதத்தையே படித்துவந்த எனக்கு – வித்தியாசமான விவாதம். புதியன பழ தெரிந்துகொள்ள முடிந்தது.

Comments are closed.