ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 2

திருட்டு மென்பொருள் தேடுவதற்கு என தனியாக நான் நேரம் செலவழிப்பதில்லை.கண்களில் மாட்டும் இணைப்புக்களை சேமித்து வைத்திருப்பேன்.இதுபோல யாருக்கும் உதவும் என்றால் வெளியிடுவேன். நான் சொல்லியது உங்களை மனதில் வைத்து அல்ல. புதியவர்களை பற்றிய எனது சிந்தனை அது. புதியவர்கள் ஒரு படத்தை எடிட் செய்யவேண்டுமென்றால் ஃபோடோஷாப் மட்டும் தான் வழி என்று நினைப்பதற்கு பதில் அதற்கு மாற்றாக கிடைக்கும் கிம்ப் பற்றி அறிந்திடல் வேண்டும். அது போல தான் நான் கூறிய மற்ற உதாரணங்களும். MS Office வாங்கி உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு செலவழிப்பது வீண் என்று நினைத்தல் ஓபன் ஆஃபிஸ் உபயோகியுங்கள் என்று தான் சொல்கிறேன்.

ஆனால் ஏற்கெனவே ஜன்னலில் இருப்பவர்களை இழுப்பது அவ்வளவு எளிதென்று தோன்றவில்லை.
ஓப்பன் சோர்ஸ் என்றால் உடனே லினக்ஸ் என்று நினைத்து விட வேண்டாம். ஓபன் ஆஃபிஸ், மொசில்லா, கிம்ப் என்று சொல்லிய உதாரணங்கள் எல்லாமே விண்டோஸ் இயக்குதளங்களிலும் கிடைக்கின்றன/இயங்குகின்றன. இது தொடர்பாக இதுவே எனது கடைசி பதிவு. தங்களது நேரத்திற்கும் பதில்களுக்கும் நன்றிகள். ]]>