ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 1

தவிர இப்போதெல்லாம் ஒரிஜினலாய் மென்பொருள் செய்யும் மைக்ரோசாப்ட் கூட பல குறைகளை உள்ளடக்கியேதான் மென்பொருள் செய்கிறது!இன்னுமொரு பெரிய விசயம்..முக்கியமானதும்கூட…கள்ள வட்டு தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள்.ஒரிஜினலையே நகைக்கும் வண்ணம் உள்ளன போலிகள்!
அதே தான் நானும் சொல்கிறேன். இந்த ஒரிஜினல்/பைரேட்டட் என்று மென்பொருள்களிடையே எதற்கு பேதம் இருக்க வேண்டும். எல்லாமே ஒரிஜினலா இருந்தா எப்படி இருக்கும். அட… அதுக்கு தானங்க நம்ம ஓபன் சோர்ஸ் ஸாஃப்ட்வேர் இருக்கு. திருட்டு மென்பொருள்களை தேடுவதில் செலவழிக்கும் நேரத்தை நல்ல ‘திறந்த நிரல்’ மென்பொருட்களை தெரிந்து/புரிந்து கொள்ள செலவழிக்கலாமே. உதாரணமாக MS Office பற்றி சொல்வதற்கு பதிலாக ஓபன் ஆஃபிஸ் (Openoffice.org) எங்கேயிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று எழுதுங்கள். கூடவே அதனை உபயோகிப்பது எப்படி என்றும் விளக்குங்கள். அதே மாதிரி Adobe Photoshopஇற்கு மாற்றாக கிம்ப் (Gimp) பற்றி எழுதுங்கள். Dreamweaver க்கு பதிலாக மொசில்லா கொண்டே எப்படி HTML பக்கங்கள் உருவாக்கலாம் என்று எழுதுங்கள். இது மாதிரி ஒவ்வொரு மென்பொருளுக்கும் சமமான (அல்லது அதை விட சிறப்பான) திறந்த நிரல் செயலிகள் கிடைப்பதை பற்றி எழுதுங்கள். இன்னும் நிறைய விசயம் சொல்லிட்டே….. போகலாம். இந்த விவாதத்தை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்ற விரும்பவில்லை. ]]>