வந்ததும் வராததுமாய்

13 January – 09:00 மணி

Heathrowஇல் இருந்து cricklewood போவதற்கு டாக்ஸி ட்ரைவர் ஏன் இப்படி சந்து பொந்தெல்லாம் சுத்துகிறான்? North circular road வழியாக போனால் விரைவாக போயிருக்கலாமே.?

ஏழு மணி நேரம் தோஹாவில் ட்ரான்ஸிட்டில் இரவை கழித்த களைப்பில் தூக்கம் வருகிறது. சிறிது நேரம் கண்ணை மூடுகிறேன்.

“நண்பா Cricklewood வந்துவிட்டோம். நீ எங்கே இறங்க வேண்டும்.”

விழித்துப் பார்க்கிறேன். வீட்டின் அருகே வந்து விட்டது புலனாகியது. இதோ Natwest Bank.

“வலது பக்கம் திரும்புப்பா. ” சொல்லிவிட்டு முழிக்கிறேன். வீட்டிற்கு இடது புறமல்லவா திரும்ப வேண்டும்.

கூடுதலாக இரண்டு மைல்கள் சுற்றி வீடு வந்து சேர்கிறேன்.

11:00 மணி

சாப்பிட்டு விட்டு வந்திருந்த அஞ்சல்களை பார்வையிட்டு படுத்த உடன் தூக்கம் வந்தது.

விழிக்கையில் அதிகாலை 3:00 மணி. மதியம் படுத்தவன் இரவு சாப்பாடை கூட மறந்து தூங்கியிருக்கிறேன். அகோர பசி. ஃப்ரிஜ்ஜில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லையே?

நல்ல வேளை வந்ததும் ஒரு pint பால் வாங்கி வைத்திருந்தேன். காலை breakfast பால்.

14 January – காலை 9:00 மணி

அலுவலகத்தில் எனது அறைக்குள் நுழைய முற்படுகிறேன். இந்த electronic lockஇற்கு pass code என்ன? C1289x தானே? Access denied!!! ஏன் என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறது?

அட சே! தினமும் உபயோகிக்கும் pass codeஐ எப்படி மறந்து போனேன்? நான்காவது முயற்சியில் சரியான code நினைவுக்கு வருகிறது.

Telephoneஇல் எனக்கு சம்பந்தமேயில்லாத 14 voice messages! மின்னஞ்சலை திறந்தால் “You have 2483 new messages” என்றது. அதில் 2479 எரிதங்கள்.

எரிதங்களை அழித்து முடிப்பதற்குள் ஒரு clientஇடமிருந்து phone call. Server வேலை செய்யவில்லை. இத்தனை நாளாக ஒழுங்காக வேலை பார்த்து வந்த வழங்கி எனது வருகைக்காக காத்திருந்தது போலும். 🙂

-o0o-

மாலை நான்கு மணிக்கு(ம்) clientஇன் பிரச்சனை தீர்க்க ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அலுவலகம் பூட்டும் போது வழக்கமாக இயக்கப்படும் security alarm சத்தம் போல் கேட்கிறதே? அது என்ன சத்தம் என்று யோசித்து தெளிவடைய விடாமல் clientஇன் கேள்விகள்.

அதன் பின் 1 மணி நேரம் கணினியுடன் போராடி விட்டு எனது அறையை விட்டு வெளியேறியதும் security alarm அலறத் துவங்கியது. அப்போது தான் புரிந்தது ‘என்னை அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு அனைவரும் வாரயிறுதியை கொண்டாட போய்விட்டார்கள்’ என்று.

‘இது வரை இல்லாத மீசையுடன் வந்ததால் என்னை அடையாளம் தெரியாமல் அனைவரும் மறந்து விட்டார்களா?’

“இருக்காதே? காலையிலிருந்து ஒரு பத்து பேரிடமாவது நேரிலும் டெலிஃபோனிலும் பேசியிருப்பேனே?”

அலுவகத்தை திறந்து பூட்டும் நண்பனை தொடர்பு கொண்ட போது… “நீ திங்கட்கிழமை தான் வருவாய் என்று சொன்னார்கள். இன்றே வந்துவிட்டாயா? சரி சரி… வந்து திறந்து விடுகிறேன்.”

ஒரு மணி நேரத்திற்கு பின் (கடுப்புடன்?) வந்து திறந்து விட்டான். புண்ணியவான்.

இரவு 9:00 மணி

அடுத்த முறை ஊருக்கு போகும் போது (திரும்பி வரும் பட்சத்தில்) இரண்டு வாரத்தில் திரும்பி விட வேண்டும். (கட்டாயம் Qatar airwaysஇல் போகக் கூடாது)

எப்படியும் திங்கட்கிழமைக்குள் தெளிந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன்.

2 thoughts on “வந்ததும் வராததுமாய்

  1. அப்போ , ஊருக்கும் போகும் முன் ப்ரிஜ்ஜில் வைச்சுட்டு போனீர்களே அந்த யானை எங்கே? இதுக்குத்தானே ஜெட் லாக் என்று சொல்வார்கள்? தமிழில் என்ன?

  2. //ஊருக்கும் போகும் முன் ப்ரிஜ்ஜில் வைச்சுட்டு போனீர்களே அந்த யானை எங்கே?//

    இருந்துச்சு. 3 அழுகின தக்காளியும் 4 காஞ்சு போன Tortilla wrapsஉம்.

    ஜெட் லாக் எல்லாம் நேரத்துக்கு தூங்கி நேரத்துக்கு எந்திரிக்கிறவங்களுக்குத் தான வரும். என்னை மாதிரி இராக்கோழிகளுக்கு வருமான்னு தெரியலை. (இது வரைக்கும் வந்ததில்லை).

    வரும் போது மும்மொழி கொள்கையோட பார்த்த மூனு திரைப்படம் (மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம்) அப்புறம் ட்ரான்ஸிட்டுன்னு சொல்லி தோஹா ஏர்போர்ட் ப்ளாட்ஃபார்ம்ல இராத்தூங்காம ஏழு மணி நேரம் உட்கார்ந்திருந்தது தான் காரணமுன்னு நினைக்கிறேன்,

Comments are closed.