பாகம் 1 2 3 4 5
ஸ்பைவேர்களை விரட்டியடிப்பதற்கு உதவும் சில செயலிகளை பற்றி சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். இந்த வேலைக்கு உதவும் மென்பொருட்களை பற்றிய அறிமுகம் இந்தப் பதிவிலும் தொடர்கிறது.
இங்கு பரிந்துரைக்கப்படும் மென்பொருட்கள் எல்லாமே தனி நபர் உபயோகத்திற்கு இலவசமாக கிடைப்பவை. அதாவது நான் கடைசியாக அவற்றை பரிசோதித்த போது இலவசமாக கிடைத்தன. ஏதாவதொரு மென்பொருளின் உபயோகத்திற்கான உரிமத்தில் மாற்றம் நேர்ந்திருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.
மென்பொருள்
|
குறிப்புகள்
|
உங்கள் உலாவி ஒட்டுன்னிகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?
(DO YOU HAVE PARASITES?)
http://aumha.org/a/noads.htm
|
- ‘Adware, Spyware, Scumware, Diallers, Hijackers’ ஆகியவற்றால் உங்கள் உலாவி பாதிக்கப்பட்டருக்கிறதா என்று இந்த இணைய தளத்திற்கு சென்று சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.
- இது இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு மட்டுமே பொருந்தும்.
- இதை செய்வதற்கு நீங்கள் எந்த மொன்பொருளை பதிவிறக்கம் செய்யவோ, நிறுவவோ வேண்டாம்.
- இதே வேலையை இன்னொரு இனைய தளத்திலும் செய்கிறார்கள் http://www.doxdesk.com/parasite/
|
ஸ்பைபாட் (Spybot-S&D)
|
- ஆட்-அவேர் போன்ற செய்லபாடுகளை கொண்டது இது.
- ஸ்பைவேர்களை தேடிக்கண்டுபிடிப்பதுடன் அவற்றை நீக்கவும் செய்யும்.
- ஆட்-அவேருடன் இதனையும் உபயோக்க பரிந்துரைக்கப் படுகிறது
- ஸ்பைபாட் (Spybot-S&D)
|
ஆட்டோ ஸ்டார்ட் எக்ஸ்புளோரர்
(Autostart Explorer) |
- நீங்கள் ஒவ்வொரு முறை கணினியை துவக்கும் போதும் கூடவே தொடங்கி விடும் மென்பொருட்களை இது பட்டியலிட்டு காட்டுக் கொடுக்கும்.
- இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மென்பொருட்கள் உங்கள் கணினியில் தானாகவே தொடங்கினால் கண்டு கொள்ளலாம்.
- இதே வைலையை செய்யும் இன்னொரு மென்பொருள்:
|
ஸ்பைவேர்
கார்ட்
(Spyware Guard)
|
- ஸ்பைவேர்களின் தாக்குதல்களை உடனுக்குடன் கண்டுபிடுத்து உங்களுக்கு தெரிவித்து விடும் இந்த மென்பொருள்.
- இது ஒரு முழுமையடைந்த மென்பொருள் அல்ல. அதனால் இதனை வல்லுனர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன்.
|
விண்டோஸ் மெஸ்ஸஞ்சர் மூலம் வரும் விளம்பரங்கள்
|
|
மெஸ்ஸஞ்சர் மூலம் வரும் விளம்பரங்களை உங்கள் கணினி ஏற்றுக்கொள்ளுமா என்று அறிய
|
|
பயனுள்ள சுட்டிகள்
|
|
ரொம்ப… ரொம்ப… ரொம்ப… முக்கியமான விசயம்!!
இது போன்ற மென்பொருட்கள் கொண்டு உங்கள் கணினியை சுத்தம் செய்யும் போது அதன் செயல்பாடு முற்றிலுமாக பாதிப்பிற்குள்ளாகலாம். அதே போல் உங்கள் தரவினையும் நீங்கள் இழக்க நேரிடலாம். அதனால் உங்கள் தரவினை பின் சேமித்த பின்பே (backup your data) இந்த மென்பொருட்களை இயக்குங்கள்.
முற்றும் (இப்போதைக்கு…)
Disclaimer
- இந்த தொடரில் நான் வழங்கியுள்ள சுட்டிகள் எல்லாமே பிறருக்கு உதவியாயிருக்கும் என்பதால் மட்டுமே.
- இதல் குறிப்பிடப்பட்டுள்ள ‘மென்பொருட்கள், அதனை உருவாக்கியவர்கள், விநியோகிப்பவர்கள்’, இவற்றிற்கும்/இவர்களுக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.
- இதில் குறிப்பிடபட்டுள்ள மென்பொருட்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையானது. உபயோகிக்கும் உரிமத்தை தெளிவாக வாசித்த பின்பே அவற்றை உபயோகப்படுத்துங்கள்.
]]>
Pingback: தாமிரபரணித் தென்றல் » Blog Archive » மென்பொருள் உரிமம்
இந்த தொடர் மிகவும் பயனுள்ளது. சிறப்பான முறையில், எளிய நடையில் எழுதி வந்தீர்கள். நன்றி! மேலும் இதுபோன்ற கணினி கட்டுரைகள், செய்திகள் தொடர்ந்து உங்கள் வலைப்பதிவில் இடம்பெற வேண்டும் என்பது என் கோரிக்கை.