உங்கள் கணினி பாதுகாப்பானதா – பாகம் 4

பாகம் 1 2 3 4 5

ஸ்பைவேர் ப்ளாஸ்டர் (Spyware Blaster)

நோய் வராமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்வோம் இல்லையா. அது போல ஸ்பைவேர் தாக்காமல் இருப்பதற்கு தேவையான தடுப்பு/எதிர்ப்பு சக்தியை உங்கள் கணினிக்கு வழங்குவது தான் ஸ்பைவேர் ப்ளாஸ்டரின் வேலை.
பதிவிறக்கம் செய்ய வழங்குபவர்கள் உரிமம் இங்கே சொடுக்குங்கள் Javacool Software தனி நபர் உபயோகத்திற்கு இலவசம்

ஸ்பைவேர் ப்ளாஸ்டரின் முக்கிய அம்சங்கள்

  • ஆக்டிவ்-எக்ஸ் (ActiveX) மூலம் உங்கள் கணினியில் தானாக நிறுவிக்கொள்ளக் கூடிய ஸ்பைவேர், ஆட்வேர், புரொஸர் ஹைஜேக் முயற்சிகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும்
  • ஸ்பைவேர் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்று ஒற்று பார்க்க கூடிய ‘கூக்கி'(cookies)களை தடுத்து நிறுத்தும்.
  • தீச்செயல்கள் புரியும் இணைய தளங்களுக்கு உங்கள் உலாவி செல்வதை தடுக்கும்.

இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுவது மிகவும் எளிது.

உபயோகிப்பது எப்படி

ஸ்பைவேர் ப்ளாஸ்டரை எப்படி உபயோகிப்பது என்று சில படங்களுடன் விளக்கியுள்ளேன். இந்த மென்பொருளை இயக்கியவுடன் தோன்றும் முகப்புப் பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
sp_main
முகப்புப் பக்கம்
முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதன் பாதுகாப்பு தரவு பட்டியலை புதுப்பிக்க வேண்டியது. அதற்கு "Download Latest Protection Updates" என்பதை சொடுக்குங்கள். இதனை செய்வதற்கு நீங்கள் இணையத்துடன் உங்கள் கணினியை இனைத்திருக்க வேண்டும். இதனை நீங்கள் சொடுக்கியவுடன் ஸ்பைவேர் ப்ளாஸ்டர் தனது பாதுகாப்பு பட்டியல்களை புதிப்பித்துக் கொள்ளும்.
sp_update
அப்டேட் ஆகிவிட்டது
அடுத்ததாக "Enable Protection for All Unprotected Items" என்பதை சொடுக்குங்கள்.
sp_protected
பாதுகாப்பு அம்சங்கள் செயல்பாட்டில் உள்ளது
இப்பொழுது உங்கள் கணினியில் ஸ்பைவேர் ப்ளாஸ்டர் வழங்கும் பாதுகாப்பு செயல்படுத்தப் பட்டு விட்டது. வாரத்திற்கு ஒரு முறை இதனை அப்டேட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது தவிர ஸ்பைவேர் ப்ளாஸ்டர் வேறு சில மேம்படுத்த பட்ட செயல்களையும் அளிக்கிறது.
sp_snapshot
System Snapshot
"System Snapshot" என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியின் தற்போதைய நிலையை சேமித்து வைத்துக் கொள்ளலாம். பின்னாளில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் நீங்கள் சேமித்து வைத்த நிலைக்கு உங்கள் கணினியை மீண்டும் கொண்டும் வருவது இதன் மூலம் சாத்தியம்.
sb_tools
Tools
கணினியில் நல்ல பரிச்சயம் உள்ளவர்கள் இந்த "Tools" பக்கத்தில் கிடைக்கும் முன்னேறிய கட்டுப்பாட்டுகளை உபயோகிக்கலாம். … தொடரும்]]>

One thought on “உங்கள் கணினி பாதுகாப்பானதா – பாகம் 4

  1. Pingback: தாமிரபரணித் தென்றல் » உங்கள் கணினி பாதுகாப்பானதா? - பாகம் 2

Comments are closed.