ஏதாவது வில்லங்கமா தான் இருக்குமுன்னு.
"நவநீ ஃப்ரியா இருக்கியா. ஒரு அஞ்சு நிமிசம் பேச டைம் இருக்குமா." அம்மாவோட குரல்ல இருந்த தொனியை கேட்ட உடனே புரிஞ்சு போச்சு, இன்னைக்கு எப்படியும் ஒரு பஞ்சாயத்து இருக்குன்னு. "சரிம்மா நான் கூப்பிடுறேன். நீங்க கட் பன்னுங்க"ன்னு சொல்லிட்டு வீட்டு நம்பர் அடிச்சா நான் எதிர்பார்த்தது அப்படியே நடந்துச்சு.
"நவநீ. ரெண்டு மூனு பொன்னு வீட்டிலே இருந்து ரொம்ப நெருக்குறாங்க. என்ன சொல்லட்டும்."
"என்னம்மா நான் தான் சொல்றேன்னு சொல்லிருக்கேன்ல. அதுக்குள்ளே என்ன அவசரம். டிசம்பெரிலே எப்படியும் ஊருக்கு வரலாம்னு நினைச்சுட்டிருக்கேன். ஊருக்கு வர்ரேன்னோ இல்லையோ, டிசெம்பரிலே கண்டிப்பா சொல்றேன், என்ன மாதிரி பொன்னு பாக்கனும்னு"
"அதில்லடா. நல்ல குடும்பம். அவங்களா வர்ரப்பம் என்ன சொல்றது. ஒரு பொன்னு பி.ஈ. படிச்சிருக்கு. இன்னொரு பொன்னு எம்.எஸ்.சி. நீ என்ன சொல்ற."
ஒரு பத்து நிமிஷம் வழக்கமான சால்ஜாப்பெல்லாம் சொல்லி பார்த்தேன். ஒன்னும் பலிக்கல. இந்த தடவை அம்மாவின் பேச்சில் வழக்கத்துக்கு அதிகமாகவே கண்டிப்பு இருந்த மாதிரி தோனுச்சு.
கடைசியா வேற வழியே இல்லாம "எனக்கு இஞ்சினியரிங், மாஸ்டர்ஸ் படிச்ச பொன்னெல்லாம் வேண்டாம்மா." (அப்பாடி ஒரு வழியா இன்னைக்கு தப்பிச்சுரலாம்).
இது வரைக்கும் கல்யாணத்தை பத்தி என்ன கேட்டாலும் வாய தொறக்காம கல்லூளிமங்கனா இருந்தவன், இன்னைக்கு இது வேண்டாம்னு சொல்றான். இதே ஒரு பெரிய முன்னேற்றம் என்று தோன்றியிருக்கும்னு நினைக்கேன். "அப்பம் வேற என்ன படிச்சிருக்கனும். சொல்லு"
டேய் நவநீ… மாட்டிக்கிடாதடா. ஒரு கேள்விக்கு கிடைச்ச பதிலை வச்சே அடுத்த தூண்டில் போட ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே. உஷார். ஏதாவது சொல்லி தப்பிக்கிற வழியை பாருன்னு மனசு சொன்னத கேட்டு புத்திசாலித்தனமா "பொன்னு எல்.கே.ஜி படிச்சிருக்கனும்" அப்படின்னேன்.
"இந்த காலத்திலே எல்லாரும் எல்.கே.ஜி. படிச்சுட்டு தான் வர்ராங்க. அதுக்கு மேலே என்ன படிச்சிருக்கனும்னு சொல்லு".
"அதை டிசெம்பர் மாசம் சொல்றேன். அது வரைக்கும் அமைதியா இருங்க"ன்னு சொல்லி மறுபடியும் ஒரு க்ரேட் எஸ்கேப். அது சரி. டிசெம்பருக்கு இன்னும் நாலு மாசம் தான் இருக்கா என்ன?
]]>
என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙂
//என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙂 //
இங்கே ஒருத்தன் சுதந்திரம் பரி போகுதேன்னு புலம்புட்டிருக்கான். அனுதாபங்களுடன் சிரிப்பா?
tension aagadhey machi.. ellam ponnu pudichu engagement aagira varaikkum thaan kuzappum..
appuram navanee maariye poyiduvaan 🙂
(Anubavam pesudhu)
[3]
🙁 சே… இந்த குடும்பஸ்தர்களோட அட்வைஸ் தொல்லை தாங்க முடியலைப்பா