உதவி.uthawi
ஐரோப்பாவில் இருக்கும் சில நண்பர்களின் முயற்சியில் ‘உதவி’ என்னும் இணையத்தளம் நடந்து வருகிறது. இலங்கையில் சரியான பொருளாதார வசதி இல்லாமல் தவிக்கும் ‘சிறுவர் இல்லங்களுக்கு’ தங்கள் முயற்சியால் பல உதவிகளை செய்து வருகிறது ‘உதவி’.
உதவி இணையத்தளத்தில் இருந்து
இலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. உதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல. சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.
இந்த இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் படைத்த சில படைப்புகளும் இங்கே படிக்க கிடைக்கின்றன. கோ.பிரசாத் (10ஆம் வகுப்பு) கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடை காண்பது எப்போதோ????
கன்றிழந்து தாயிழந்து கனத்தவுயிரிழந்து
நின்று உயிர் வாழ்கிறார் நிற்க ஒரு கேள்வி
என்று தணியுமிந்த சமாதான தாகம் சொல்?
தந்தையினை இழந்தவர்கள், தாயைப் பிரிந்தவர்கள்
சந்தையிலே செல்விழுந்து சவங்களாய் கிடந்தவர்கள்
கந்தை துணியோடும் கால் வேறு கை வேறாய்
மந்தைகளாய் மரணித்துப் போனவர்கள்
வந்து விடுகிறேனென்று வாய் நிறையக் கூறிவிட்டு
சந்திகளெல்லாம் சடலமானவர்கள்
நொந்துருகி துயரத்தால் நொடியில் உடைந்தவர்கள்
அந்த நாள் தொட்டு அதிகரிக்கக் காணுகின்றோம்.
பள்ளிக்குச் செல்லும் பாலப் பருவமதில்
துள்ளித் திரியுமந்த துயரமறியா காலமதில்
வள்ளிக் கிழங்குண்டு வாழ்ந்த வரலாறிப்போ
கொள்ளிவால் பேய்கள் குடிகொண்ட காலமாச்சே
பேயாட்டம் போடும் யுத்த அரசியல்
பாராட்டப்படுகின்றது பாரறியும் சபை தன்னில்
மாறாட்டமில்லாது தமது மனம் திறந்து
கூறட்டும் சமாதனம்தான் வேண்டும் என்று
மேகங்கள் கூடி மின்னலிடி தோன்றி
இல்லங்கள் மீது தென்றல் அலை மோத
வெறியடங்கி யுத்தம் முடிந்துவிட
உண்மையான சமாதானம் மலர்வதெப்போ?
நாம் வாழ்வதெப்போ?
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)
சிறுவர்களின் படைப்புகள் முழுவதையும் http://www.uthawi.net/tam/kids.htm என்ற பக்கத்தில் படிக்கலாம்.
உதவியில் நீங்களும் பங்கேற்க விரும்பினாலோ அல்லது மேலதிக தகவல்கள் பெற விரும்பினாலோ இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நிதியுதவி செய்யமுடியாதவர்களும் இந்த சிறார்களின் படைப்பினை பாராட்டி ஒரு வரி அவர்களுக்கு எழுதலாமே.
தொடர்பு கொள்ள
uthawi
Postfach 1226
59884 Eslohe
Germany
மின்னஞ்சல்: mail@uthawi.net
தொலை நகல்: +49 (0) 6913303065681
இணையத்தளம்: http://www.uthawi.net