2005 தேர்தலுக்கான அறிவிப்பு வந்தாகி விட்டது. அறிவிப்பு வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, தினசரி என்று அனைத்து ஊடகத்தினையும் தேர்தல் ஜுரம் பிடுத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க தேர்தலில் வலைப்பதிவுகள் மிக முக்கிய வகித்தது (போன்ற தோற்றம் எழுந்தது) உண்மை. இங்கேயும் தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டுடன் வலைப்பதிவுகள் களத்தில் குதிக்க தயாராகி விட்டன. பிபிஸி போன்ற முன்னனி செய்தி நிறுவனங்கள் கூட தங்கள் வலைப்பதிவுகளுடன் தேர்தல் அல்வா கிண்ட துவங்கி விட்டன.
யாஹூவும் களத்தில் உடனே குதித்திருக்கிறது. பிரதான கட்சிகள் மூன்றிலிருந்தும் ஒவ்வொரு பிரமுகர் எழுதவதற்கான டயரி பக்கங்களை தாங்கி நிற்கிறது யாஹூ. கூடவே வாசகர்களிடன் ஒரு கணிப்பு நடத்தி வருகிறது. தற்போதைய (மாலை, ஏப்ரல் 6) நிலவரம் தொழிலாளர் கட்சி தான் மீண்டும் வரும் என்று தெரிவிக்கிறது.
Alastair Campbell போன்ற சில அரசியல்வாதிகளும் சொந்த வலைப்பதிவுகளுடன் கோதாவில் இறங்குகின்றனர். வரும் நாட்களில் மேலும் பல வலைப்பதிவுகள் தேர்தல் களத்தில் குதிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
பரப்பரப்பான அடுத்த சில வாரங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.