இன்னுமொரு விக்கி

தமிழ் மொழியில் ஏற்கெனவே சில விக்கிகள் இயங்கி வருவதை அறிந்திருப்பீர்கள். விக்கி என்பது ஒரு கட்டுப்பாடற்ற இணையதள வடிவம்.

விக்கி பற்றி அறிந்திராதவர்களுக்காக:

விக்கி என்பது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு இணைய தள வடிவம். விக்கி கொண்டு தகவல்களை பதித்து வைக்கும் போது ஒருவர் எழுதியதில் இருக்கும் பிழைகளை இன்னொருவர் திருத்துவதோ அல்லது அதனை மேம்படுத்துவதோ சாத்தியமாகிறது. மேலும் சிறு சிறு பதிவுகளாக கட்டப்படும் இத்தகைய தளங்கள் நாளடைவில் என்சைக்ளோபீடியோக்களை போல ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையை எட்டும் சாத்தியம் உள்ளது.

தமிழ் மொழியில் இயங்கும் சில விக்கிகள்:

 • தமிழ் லினக்ஸ் விக்கி
  தமிழில் லினக்ஸ் மற்றும் திறமூல செயலிகளைப் பயன்படுத்தவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ள விக்கி. தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் இயங்கும் இந்த விக்கியில் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
 • வலைப்பதிவர்களுக்கான விக்கி
  தமிழ் வலைப்பதிவர்களுக்காக இயங்கும் இந்த விக்கியில் வலைப்பதிவு தொழில்நுட்பங்களையும், வலைப்பதிவர்கள் சந்திக்கும் சவால்களையும் சேகரிக்கிறார்கள்.
 • விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள்
  விக்கிபீடியாவின் தமிழ் பகுதியில் அனைத்து தலைப்புகளின் கீழும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அன்மைக் காலங்களில் விக்கிபீடியா தளம் வேகப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தளம் பல நேரங்களில் மிக மெதுவாக இயங்கலாம்.

இன்னுமொரு விக்கி

தமிழில் கணினி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பதித்து வைப்பதற்காக இன்று இன்னுமொரு விக்கியினை உங்கள் முன் அறிமுகம் செய்கிறேன்: http://wiki.thamizhkanini.org

கணினி தொடர்பான எந்த ஒரு விபரத்தையும் இங்கே இணைக்கலாம். விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், உங்களுக்கு தெரிந்த கணினி மொழிகள், புதிய பயனர்களுக்கான உதவி பக்கங்கள், கணினி வாங்குவது எப்படி, கணினியினை ‘பாதுகாப்பாய் பயன்படுத்துவது எப்படி’, என்று எந்த தகவலை வேண்டுமானாலும் பதியலாம்.

இப்போதைக்கு நான் இது வரை எனது வலைப்பதிவுகளில் கணினி தொடர்பாய் எழுதியிருந்த இடுகைகளை இணைத்துள்ளேன். நீங்கள் பதம் பார்க்க சில பக்கங்கள் இதோ:

என்னாலான சிறு துரும்பினை கிள்ளிப் போட்டிருக்கிறேன். நேரமும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றால் நீங்களும் இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.

5 thoughts on “இன்னுமொரு விக்கி

 1. நல்ல முயற்சி நவன்.
  நிறைய செய்யலாம்.

  வெகு விரைவில் முழுமூச்சாய் இணைந்துகொள்கிறேன்

 2. நன்று நவன். வாழ்த்துக்கள். உங்களது விக்கியும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பில் விக்கிப்பீடியா என்று சொல்லி இருக்கிறீர்களே? விக்கிப்பீடியா அந்தக் கலைக்களஞ்சியத்தைத் தானே குறிக்கும். அங்கே இருக்கிற தமிழ்விக்கியையும் உங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாமே.

 3. நன்றி மயூரன், செல்வராஜ்.

  செல்வராஜ்: விக்கிபீடியாவினை இயக்கும் அதே மென்பொருளான Mediawikiஐ தான் நிறுவியிருக்கிறேன். அது தானாகவே விக்கிபீடியா என்று தலைப்பில் சொல்கிறது. வேறு பெயர் இனி தான் சூட்ட வேண்டும்.

  விக்கிபீடியாவின் தமிழ்விக்கியினை ஏற்கெனவே இந்த பதிவினில் சுட்டியிருக்கிறேனே. விக்கியில் இனிமேல் தான் தொடுப்பு கொடுக்க வேண்டும்.

 4. //விக்கிபீடியாவினை இயக்கும் அதே மென்பொருளான Mediawikiஐ தான் நிறுவியிருக்கிறேன்.//

  “Powered by MediaWiki” என்ற சுட்டியைக் காணோமே என்று பார்த்தேன்! 🙂

Comments are closed.