இந்த நாள்

வேலைப்பளு குறைவாக இருக்கும் சில நாட்களில் என்ன செய்றதுன்னு தெரியாம தலைமுடியை பிய்க்கத் தோனும். வேறு சில நாட்கள் மதிய உணவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் கழியும். இன்று அப்படி ஒரு நாள்.

காலை 10 மணி வரை எல்லாம் நல்லா தான் போயிட்டிருந்தது. திடீரென்று Network Outage. என்ன ஏதுன்னு பார்த்தா ஒரு IPCOP தீயரண்(Firewall)இல் இருந்த ஹார்ட் டிஸ்க் டுமீல் ஆயிருந்துச்சு. கையில் வேற backup server ஏதும் இல்லாததால் அதே கணினியில் ஹார்ட் டிஸ்கை மட்டும் மாற்றி விட்டு மீண்டும் நிறுவ முடிவு செய்து, தேவையான மென்பொருள் இருந்த குறுந்தகடை தேடினால், அதுவும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, கடைசியில் Routerஉடன் நேரடியாக ஒரு மடிக்கணினியை இணைத்து, IPCOPஐ பதிவிறக்கம் செய்து, அதை புதிய ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றி, அடுத்த அரை மணி நேரத்தில் இணைய இணைப்பு எல்லாருக்கும் கிடைக்கும் படி செய்து விட்டாலும், மற்ற Patchesயையும் Add-onsகளையும் நிறுவி முடிக்க மாலை வரை இழுத்து விட்டது.

வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டால் வேலை செய்த களைப்பு தெரியாது. மாறாக புத்துனர்ச்சி தான் இருக்கும். ஆனால் இன்று இவ்வளவு நேரம் பிடித்தும் வேலை முழுவதுமாக முடிந்த பாடில்லை. பழைய தீயரணில் இருந்த அளவிற்கு இன்னமும் இந்த புதிய தீயரணில் பாதுகாப்பை வலுப்படுத்தவில்லை என்பது உறுத்திக் கொண்டே இருக்க, கடுப்பை மறக்க கொஞ்ச நேரம் இணையத்தில் உலாவியதில் இந்த புதிய JibJab வீடியோ கண்ணில் பட்டது.

இப்போது வந்திருக்கும் “Second Term”ஐ பார்த்ததும் கொஞ்சம் ரிலாக்ஸான உணர்வு. மீண்டும் ஒரு முறை பழைய “This Land”ஐ பார்த்ததும் அது வரை இருந்த களைப்பு பறந்தோடி விட்டது. Laughter is the best medicine.

ஒரு கொசுறு செய்தி. வடிவேலு மாதிரி இந்த பாடலிலும் கிளிண்டன் ஹில்லரியிடம் அடி வாங்குகிறார்.

Second Term:: JibJab

இது வரைக்கும் பார்க்கலைன்னா நீங்களும் JibJab.comக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுங்க.