யூனியன் கார்பைடு கெஸ்ட் ஹவுஸிற்கு வந்து சேர்ந்ததும் ஆண்டர்சென் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு வைத்து அவரைக் கைது செய்கிறார் ஸ்வராஜ் பூரி.
ஸ்வராஜ் பூரி இன்றும் சொல்வது
“நான் செய்வது சரியென்று திடமாக நம்பினேன். அந்த மூன்று நாட்களும் நான் நகரத்தில் நரக அவஸ்தையை பார்த்திருந்தேன்.”
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்க அரசின் தலையீட்டால் ஆண்டெர்சன் பெயிலில் விடுவிக்கப் படுகிறார். உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பியவர் அதன் பின் இந்தியா பக்கமே வரவில்லை.
மூன்று வாரங்கள் கழித்து யூனியன் கார்பைடு வெளியிடும் பத்திரிக்கைச் செய்தியில் இன்னும் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகிறது.
“மூச்சுத் தினறல் பிரச்சனைகள் சாதாரண இருமல் மருந்து கொண்டு வைத்தியம் செய்ததில் சரியாகி வருகிறது. அனைவரும் இன்னும் மூன்று வாரங்களுக்குள் குனமாகிவிடுவார்கள்.” – யூனியன் கார்பைடின் மூத்த மருத்துவ அதிகாரி.
ஆனால் அவருக்குத் தெரியும். விச வாயுவை சுவாசித்தவர்கள் இன்னும் பல வருடங்களுக்கு அதன் பாதிப்பில் இருந்து மீள மாட்டார்கள் என்று.
கேன்சர், மாதவிடாய் பிரச்சனைகள், கருச்சிதைவுகள், மரபுனு குறைபாடுகள், கை கால் நடுக்கும், கவனமின்மை, மறதி, பக்கவாதம், நோயெதிர்ப்பு சக்தியில் குறைபாடு, அரைகுறை பார்வை என்று இன்று வரை போபால் வாசிகளின் பிரச்சனைகள் எக்கச்சக்கம்.
மெஹபூப்புன் மகன் இம்ரான் மூன்று வருடங்கள் கழித்து இறந்து போனான். கணவர் சாந்த் கானும் விச வாயுவின் பாதிப்பால் நோய்வாய்பட்டு 1999இல் இறந்து விட்டார்.
“விச வாயுவினால் எனது குழந்தைகள், கணவர், வீடு, வாழ்க்கை, என்று அனைத்தையும் இழந்தேன். தீராத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன். எதற்கு இந்த தண்டனை. எப்போதோ செய்த பாவத்திற்கு அல்லா இப்போது தண்டத்திருக்கிறாரா?” – மெஹபூப்
1984ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 20,000 பேர் விச வாயுவின் பாதிப்பினால் இறந்திருக்கிறார்கள் . இன்றும் தினமும் ஒரு உயிரை பலி வாங்கி வருகிறது.
யூனியன் கார்பைடு கடைசி வர தவறுக்கு பொறுப்பேற்கவில்லை. அவர்கள் தரப்பில் “போபால் தொழிற்சாலை எங்களது இந்தியக் கிளை தான் நடத்தி வந்தது. அந்த விபத்துக்கு காரணமும் சில விஷமிகள் தான். எங்களது கவணக்குறைவு அல்ல.” என்றே சாதித்து வருகிறார்கள்.
ஆனால்…..விபத்து நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் MIC சேமித்து வைக்கப்படும் டேங்கினால் இது போன்ற பேரழிவு ஏற்படலாம் என்று கார்பைடு நிறுவனத்திற்கு அறிக்கை கிடைத்திருந்தது.
…the potential of a runaway reaction in the MIC storage tank .Real potential for a serious incendent exists.
ஆனால் இந்த அறிக்கை போபாலுக்கு அனுப்பப் படவில்லை. இந்தியர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை.
கும்கும் சக்ஸேனா. ஒரு காலத்தில் தன்னை கார்பைடு ஊழியர் என்று சொல்வதில் மிகவும் பெருமைப் பட்டவர். 1985இல் போபாலிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். இன்று அமெரிக்காவில் டாக்டராக பனி புரிகிறார். போபால் ஆஸ்பத்திரியில் அந்த விபத்து நடந்து போது பெரும் உதவி புரிந்தவர்.
சுமந்த் தே. 1985இல் தொழிர்சாலை மூடியதில் வேலை இழந்த பின், சொந்தமாக ஒரு சிறிய வொர்க்ஷாப் நடத்துகிறார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்ற அவரது நம்பிக்கை தகர்ந்து போனது.
சாஹீத் நூர்… அவரது தாய் தந்தையை இழந்ததற்கு நஷ்ட ஈடு கிடைத்தது. ஆனால் அது எப்போதோ காலியாகிவிட்டது. இன்று விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.
அந்த இரவு எனது குடும்பத்தின் மூன்று தலைமுறையை அழித்தது. எனது அப்பா ஒரு பட்டதாரி. இன்று எனது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு கூட செல்வதில்லை. எங்கள் வாழ்க்கைத் தரம் 50 வருடங்கள் பின் நொக்கி சென்றுள்ளது. இதனை சரி செய்வதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.
ஸ்வராஜ் பூரி… இன்றும் போபாலில் தான் வேலை பார்க்கிறார். மூச்சுத்தினறலால் அடிக்கடி அவதிப்படுகிறார்.
“அந்த இரவின் நினைவுகள் என்னை இன்னமும் அடிக்கடி வந்து துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. என்னுடைய ஆசையெல்லாம் அந்த காலக் கட்டத்தில் ஆண்டெர்சன் போபாலில் வசித்திருக்க வேண்டும். நாங்கள் அனுபவித்த துயரங்களை அவரும் அனுபவித்திருக்க வேண்டும்.”
ஆண்டர்சென்… அதன் பின் இந்தியா வரவேயில்லை. நீதியிடமிருந்து தப்பித்து ஓடும் fujitive. ஃப்ளோரிடாவில் தனது வீட்டில் பெரும்பாலான நாட்கள் வசித்து வருகிறார். இந்திய அதிகாரிகள் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வெகு நாட்களாக கோரி வருகிறார்கள். அவர் மீதான குற்றச்சாட்டு படுகொலை.
யூனியன் கார்பைடு, “எங்களது இந்திய நிறுவனத்தின் பங்குகளை விற்று போபாலில் ஆஸ்பத்திரி கட்டினோம். நஷ்ட ஈடு வழங்கிவிட்டோம் இந்தியாவிற்கு. பல அரிய பாடங்கள் கற்றுக்கொண்டோம் இந்த துயர சம்பவத்திலிருந்து.” என்று தங்களது கறையை கழுவிட்டதாக கூறி வருகிறார்கள்.
$470 மில்லியன் டாலர்கள் நிவாரனத்தொகையாக முடிவு செய்து யூனியன் கார்பைடு இந்திய அரசாங்கத்திடம் மே 1989இல் வழங்கியது. ஆனால் அந்த தொகையும் மக்களுக்கு சென்ற ஆண்டு தான் (விபத்து நடத்து 19 ஆண்டுகள் கழித்து) வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நஷ்ட ஈடு 320 பவுண்டுகள்.
1984இல் இருந்து கணக்கு போட்டால் மாதம் ஒன்றுக்கு 1.25 பவுண்டு தான் நிவாரனத்தொகையாக கிடைத்திருக்கிறது. (இந்த நஷ்ட ஈடு கிடைப்பதற்கும் பலர் உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருந்தது.)
ஆனால் பிரச்சனை இதோடு முடியவில்லை. 1985இல் மூடு விழா நடத்தி விட்ட தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்குகளில் இன்னமும் பல விசத்தன்மையுள்ள கெமிக்கல்கள் பாதுகாப்பின்றி கிடக்கின்றன. ஒருவரும் அதனை சுத்தம் செய்யவில்லை.
மக்கள் குடிக்கும் நீரிலிருந்து எங்கும் நகரெங்கும் விசம் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் (இப்போது Dow Chemicals என்றழைக்கப்படும்) யூனியன் கார்பைடு அந்த இடத்தை சுத்தம் (decontominate) செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
தொடர்புடைய சுட்டிகள்:
– Amnesty International சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.
– போபால் பேரழிவின் பின்னனியில் எடுக்கப்பட்ட திரைப்படம் Bhopal Express
– Greenpeace இணைய தளம்
– http://www.bhopal.net/
– யூனியன் கார்பைடின் பிரச்சாரம் இங்கே: http://www.bhopal.com/
– Online Petition against Dow chemicals
Pingback: தாமிரபரணித் தென்றல் » வலைப்பதிவராய் ஒரு வருடம்
Hi,
The article on Bhopal tragedy is really fantastic.We expect more articles like this from you.
Congrats!
Pingback: தாமிரபரணித் தென்றல் » டிசெம்பர் 03, 1984