போபால் பேரழிவு நடந்து 20 வருடங்கள் கழித்து இப்போது தான் இந்திய அரசாங்கம் பாதிக்கப் பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டின் நிர்பந்தத்தினால் தான். ஆனாலும் முழுவதுமாக இழப்பு ஈடு செய்யப்பட்டிருக்கிறதா?
20 வருடங்களுக்கு பின் இன்றும், அடுத்த தலைமுறையையும் இந்த நிகழ்வு பாதித்து வருகிறது.
யூனியன் கார்பைடு (தற்போது Dow Chemicals) நிறுவனம் மற்றும் இந்திய அரசாங்கம் இரண்டுக்கும் நடுவில் பாதிக்கப்பட்டிருப்பது என்னமோ போபால் வாசிகள் தான்.
இணையத்தில் இது சம்பந்தமாக வாசித்துக் கொண்டிருந்ததில் 20 வருடங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தினை பற்றி பல தகவல்கள் கிடைத்தது.
பிபிஸி இன்று இரவு 9:00 மணி(GMT)க்கு ‘One Night in Bhopal‘ என்ற நிகழ்ச்சியை (BBC Oneஇல்) ஒளிபரப்பவிருக்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
Twenty years ago the world’s most devastating industrial disaster struck the Indian city of Bhopal. Thousands were killed instantly, and thousands more injured, when an American owned factory leaked poisonous gas into the night.
This film combines drama and documentary to tell the extraordinary stories of five people from the city, and to reveal why the catastrophe happened and how it could have been avoided.
அடுத்ததாக இப்போது படிக்க நினைக்கும் புத்தகம் ‘Javier Moro’ & ‘Dominique Lapierre’ (‘Freedom at midnight’ புகழ்) எழுதிய “Five Past Midnight in Bhopal“.