100 டாலருக்கு தனியாள் கணினி (Personal Computer) என்ற செய்தியை படித்த போது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. டிசெம்பர் மாதம் முதல் வெளிவர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். SolarPC தளத்தில் இதைப் பற்றி மேலும் ஏதும் செய்திகள் கிடைக்குமா என்று தேடிய போது கணினியுடன் என்னென்ன வன்பொருட்கள் வருகின்ற போன்ற செய்திகள் கிடைக்கவில்லை.
என்னுடைய அனுமானம் இந்த 100 டாலருடன், மானிடர் மற்றும் கீ போர்ட் போன்றவற்றிற்கான விலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.
தற்போது இந்தியாவில் விலை குறைந்த கணினிகளின் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது? லினக்ஸ் கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? இது குறித்த தகவல்கள் தேடிக் கொண்டிருக்கிறேன். விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.
AMDயின் பெர்சனல் இண்டெர்நெட் கம்யூனிகேடர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? http://www.amdboard.com/pic.html
இந்தியாவில் டாடா வி.எஸ்.என்.எல் இந்த டப்பாவை விற்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்கள். இது மானிட்டரும் சேர்ந்து $185. ஆனால் என் கணிப்பில் இது இந்தியாவில் வேலை செய்யப்போவதில்லை. இந்த டப்பாவில் மாடம் மட்டும்தான் உண்டு. ஈதர்நெட் கார்ட் கிடையாது. யு.எஸ்.பி போர்ட் மட்டும்தான் இதில் உண்டு. டி.எஸ்.எல் இணைப்பு கொடுக்க தடவ வேண்டும். கேபிள் இண்டெர்நெட்டிற்கும் தடவல்தான். காசும் $100க்கு மிக அதிகம்.
ராஜேஷ் ஜெயின், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுன்வாலாவின் டெநெட் ஆராய்ச்சித் துறையினர் இணைந்து ஒரு டப்பா செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இது $100க்கு அருகில் இருக்கும் (மானிட்டரும் சேர்த்து) என்று எதிர்பார்க்கிறார்கள். இதில் ஈதர்நெட், யு.எஸ்.பி போர்ட் என பலவும் உண்டு.
மேற்படி மெஷின் லினக்ஸில்தான் இயங்கும்.
ஏதேனும் உருப்படியான தகவல் வந்ததும் அறிவிக்கிறேன்.
அடுத்த மாதம் வரும் போது இது சம்பந்தமாய் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ராஜேஷ் ஜெயின் பற்றிய தகவலுக்கு நன்றி பத்ரி.