Bhutan – World's largest book

‘இது வரை பிரசுரமானதிலேயே பெரிய புத்தகம் இது தான்’ என்ற சாதனையை படைத்திருக்கும் புத்தகம் – ‘Bhutan’. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் இந்த புத்தகம், பூட்டான் நாட்டின் கலாசாரத்தை காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.

எம்மாம் பெரிய புக்
புத்தகத்தை காணோமேன்னு தேடாதீங்க.
சுவத்தில ஆளுசரத்துக்கு சாத்தி வைச்சிருக்கு பாருங்க.
அது தான் நான் சொன்ன புக்.

நானும் ஒரு பிரதி வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள் யாராவது வாங்கி் பரிசளிக்கும் போது நான் வாங்கி வைச்சிருக்கிற காப்பி வேஸ்டாயிடுமேன்னு விட்டுட்டுட்டேன் (ஹி.. ஹி.. விலை $10,000 தான் 🙁 ). நன்றி: http://www.kottke.org/04/10/bhutan-book

]]>

5 thoughts on “Bhutan – World's largest book

  1. எனக்கு நின்றுகொண்டு புத்தகம் படிப்பது பிடிக்காதாகையால் வாங்கவில்லை.:D
    என் நண்பர்களை நிற்கவைப்பது பிடிக்காதாகையால் உங்களுக்கு அனுப்பவில்லை. 😛

  2. காசி, அப்படியெல்லாம் தப்பா நினைச்சிடாதீங்க. நான் படுத்துட்டே படிப்பேன்.

    நீங்க ‘கொடாக்கண்டன்’னா நான் விடாக்கண்டன் 😈

  3. கொடாக்கண்டனையும் கொடுக்க வைத்துவிடுவீங்க போல 🙄

  4. எங்கே பாலா, கொடாக்கண்டரைத் தான் ஆளையே காணோமே?

Comments are closed.