திருவிழா ஜோரா நடந்திட்டிருக்கும் போது எப்போதோ படித்த ஸ்லாஷ்டாட் (Slashdot) பதிவு இன்று நியாபகத்திற்கு வந்து ‘இந்த முறை எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியை எழுப்பியது.
அமெரிக்காவில் வாக்கெடுக்க பயன்படும் இயந்திரங்கள் (Diebold, ES&S, Sequoia என்ற முக்கிய தயாரிப்புகள்) அனைத்தும் விண்டோஸ் இயக்குதளத்தை கொண்டு இயங்குபவை. இதில் Diebold இயந்திரத்தில் கடந்த சில வருடங்களில் பல பிரச்சனைகள் நேர்ந்திருக்கின்றன. Diebold இயந்திரங்களால் கடந்த சில வருடங்களில் நேர்ந்த குளறுபடிகளை www.computerworld.com பட்டியலிட்டிருக்கிறது.
techtarget.com நேற்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையினை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.
techtarget.com தளத்தில் இருந்து
The most popular tabulation software — GEMS, made by Diebold –came under scrutiny in 2002 when Bev Harris, an investigative journalist, found a copy of the source code on an unsecured Diebold Web site. The application runs on a standard Windows PC and requires a password to access vote data. Harris discovered vote data tored in an unprotected Microsoft Access database where anyone with physical access to the machine could tamper with the results — no password needed.
ஏற்கெனவே இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு நடக்கிற இந்த தேர்தலில் தொழில்நுட்பத்தால் ஏதும் பிரச்சனை நடக்காமல் இருந்தால் சரி.
நான் குறிப்பிட்ட ஸ்லாஷ்டாட் பதிவில் பெரும்பாலானோர் கேட்டிருந்த கேள்வி – “இவ்வளவு குழப்பாமான/பாதுகாப்பில்லாத இயந்திரத்திற்கு பதில் இந்தியா செய்திருப்பது போல ஒரு எளிமையான, அதே நேரம், பாதுகாப்பான இயந்திரத்தை அமெரிக்காவால் ஏன் சிந்திக்க முடியவில்லை?” அங்கேயே ஒருவர் செல்லியது போல அமெரிக்காவின் விண்வெளி பேனாவும் ரஷ்யாவின் பென்சிலும் தான் நியாபகத்திற்கு வருகிறது.
அமெரிக்காவில் ஜியார்ஜ் புஷ் அதிருப்தியாளர்களை விட இங்கே அதிகமாக டோனி பிளேர் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவுகள் விரைவிலேயே வரவிருக்கும் இங்கிலாந்து தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.