பாகம் 1 2 இந்த ‘சேவைபொதி 2’இனை இன்னமும் நிறுவாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்த புதிய சேவைப்பொதியினை நிறுவிய பின் சில மென்பொருட்களின் பாதிக்கக்கூடும். புதிய சேவைப்பொதியுடன் ஒருங்கினைந்து வேலை செய்வதில் பிரச்சனை உள்ள மென்பொருட்களின் பட்டியலை மைக்ரோஸாஃப்ட் நிறுவணம் வெளியிட்டிருக்கிறது. முதலில் இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் உபயோகிக்கும் மென்பொருள் பாதிப்பிற்குள்ளாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தானியங்கி முறைப்படி விண்டோஸ் அப்டேட் செய்பவரானால் உங்கள் கணினியில் தானாகவே இந்த புதிய சேவைப்பொதி வந்து இறங்கிக்கொள்ளும். இதனை தவிர்க்க வரும்பினால் மைக்ரோஸாஃப்ட் அதற்கு ஒரு ஒட்டு வழங்குகிறது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் இந்த சேவைப்பொதியினை நிறுவுவதை 4 மாதங்கள் வரை தள்ளிப் போடலாம். “உங்கள் கணினியில் பாதிக்கப்பட்ட மென்பொருட்கள் எதுவுமே நிறுவியிருக்கவில்லை என்றால் இந்த சேவைப்பொதியினை உடனே நிறுவிக்கொள்ளலாம்” என்பது தான் எனது கருத்து. ஆனால் நிறுவுவதற்கு உங்கள் கணினியில் இருக்கும் தரவினை (data) ஒரு காப்பு நகல் (backup) எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இது வரை இந்த சேவைப்பொதியினை நிறுவியிருக்கவில்லை என்றால் http://www.windowsupdate.com என்ற தளத்திற்கு சென்று விண்டோஸ் அப்டேட் செய்வதன் மூலம் புதிய சேவைப்பொதியினை இறக்கிக்கொள்ளலாம். இந்த சேவைப்பொதியினால் கிடைக்கும் முக்கிய முன்னேற்றங்களாக நான் கருதுபவை:
I. கணினி பாதுகாப்பு
பாதுகாப்பினை பொருத்த வரை முக்கிய முன்னேற்றங்களாக நான் கருதுபவை- முன்னேறிய பயன்பாடுள்ள தீயரண் (Improved Firewall)
- பாதுகாப்பினை கண்காணிப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையம் (Security Centre)
- இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் ‘பாப்-அப்’களை தடுப்பதற்கான ஏற்பாடு (Pop-up blocker for IE. Pop-up – மேல்மீட்பு?)
பாதுகாப்பு மையம்
உங்கள் கணினியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்கு இந்த பாதுகாப்பு மையம் உதவும். இந்த உண்மையில் கடைநிலை பயனாளர்களுக்கு பெரிதும் உதவியாயிருக்கும். கணினியை கரைத்து குடித்த வல்லுனர்களுக்கும் சில நேரங்களில் உதவியாய் இருக்கலாம்.
- உங்கள் கணினியில் தானியங்கி முறைப்படி விண்டோஸ் அப்டேட் ஆகும் செயல்பாடு இயக்கத்தில் இல்லாமலிருந்தால்.
- உங்கள் ‘தீயரண்’, செயல்பாட்டில் இல்லாமலிருந்தால்.
- உங்கள் ஆண்டி-வைரஸ் அப்டேட் செய்யப்பட்டு நாளாகியிருந்தால்.
தீயரண்

பாப்-அப்களை தடுக்கும் செயல்பாடு
என்னைப் பொருத்த வரை இது மிகவும் உபயோகமான பயன்பாடு. இதன் மூலம் ஸ்பைவேர், ப்ரொஸர் ஹைஜேக் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைந்துவிடும்.II. செயல்பாட்டில் தெரியும் முன்னேற்றங்கள்
நான் பார்த்த வரை செயல்படும் விதத்தில் உடனே கண்டுகொண்ட முன்னேற்றங்கள்- கம்பியில்லா தொடர்பின் உருவமைப்பு மேலாண்மை (Wireless network configration)
- புளூடூத் (Bluetooth)

சுட்டிகள்]]>
எனக்கு இப்போது நேரம் இல்லை. ஆனால் இதை அப்புறம் படித்து தெரிந்துகொள்ளவேண்டும். வேண்டுமென்றே நான் சேவைப்பொதி 2 சம்பந்தமாக இதுவரை அதிகம் வாசிக்கவில்லை. எனவே முழுக்க தமிழிலேயே வாசித்து புரிந்துகொள்வது எப்படி இருக்கிறதென்று பார்க்கிறேன்.
நல்ல முயற்சி
pop up’s equivalent tamil name can be "Thulli"??
‘துள்ளி’…. ம். பொருத்தமா தான் இருக்கு.