பகுதியில் வரப்போவதெல்லாம் என்னுடைய நினைவில் இருப்பதற்காக நான் சேகரித்து வைக்கும் சில விசயங்கள் மற்றும் என்னுடைய உளறல்கள் (பேத்தல்ஸ்) தான். அதனால இதையெல்லாம் யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க. இன்னைக்கு (மதுரைத்திட்டத்தில்) கொன்றைவேந்தனில் அகப்பட்டது.
மோன மென்பது ஞான வரம்பு
– கொன்றைவேந்தன்
என்னளவில் இது எவ்வளவு பொருந்துகிறது என்று யோசித்து பார்த்தேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. யார்கிட்டேயும் போய் சகஜமாக பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். இதுக்கு காரணம் சின்ன வயதில் இருந்த கூச்ச சுபாவம் தான். ஆதனாலேயே பல நேரங்களில் தனிமையில் இருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டேன். தவறிப்போய் கூட்டத்தில் இருந்தாலும் அமைதி காத்து, பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசுவது என்பது இயல்பாகவே பழகிவிட்டது. இதனாலேயே யாரிடமும் போய் எந்த ஐயத்தையும் நிவர்த்தி செய்ததில்லை. அது தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி. பலர் அகம்பாவம் பிடித்தவன் என்று நினைத்த/நினைக்கின்ற நிலை இருந்தாலும், இதனால் எனக்கு கிடைத்த நன்மைகள் நிறையவே உண்டு. அதில் முக்கியமானது, தானாகவே அனைத்து விசயங்களை தேடி கண்டுபிடிக்கும் மன உறுதியினையும் பக்குவத்தையும் வளர்த்துக் கொண்டது தான். (ஒரு குரு மூலமா கத்துட்டிருந்தா இன்னும் சீக்கிரமா சில விசயங்களை தெரிந்திருபேனோ என்னமோ?) ஆனால் கொன்றைவேந்தன் சொல்ற மோனம் என்பது மனதிற்குள் ஏற்படுகின்ற அமைதி என்று நினைக்கிறேன். ‘மன சம்பந்தமில்லாத மௌன நிலை’ எல்லாம் நம்ம அளவுக்கு ரொம்ப பெரிய விசயம். வெளி பார்வைக்கு மௌனமாக இருந்தாலும் மனசு என்னமோ அமைதியா இருக்க மாட்டேங்குதே. அதையும் தேடலாம். எங்கே போயிட போகுது. உள்ளே தானே இருக்குன்னு சொல்றாங்க. ]]>
ஹ்ம்ம்ம்…
Hi,
Can you give me Linux material or sites in Tamil..
Thanks,
M.Muralidharan