இயங்கு எழுத்துரு
இன்று அவனிடம் எனது வலைப்பதிவின் பக்கம் போய் பார் என்று சொன்னால், அவன் "ஒரே பூச்சி பூச்சியா தெரியுது"ன்னான். இவ்வளவுக்கும் அவன் எனது பதிவினை பார்க்க முயற்சித்தது சென்னையில் ஒரு பிரபல ப்ரௌசிங்க் செண்டரில் இருந்து. அவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே நம்ம உமரின் தேனீயை எனது வழங்கியில் (server) மேலேற்றி எனது ஸ்டைல்ஷீட்டில் தேவையான மாற்றம் செய்து விட்டு மீண்டும் ஒரு முறை முயற்சிக்க சொன்னால் "இப்போ தெளிவா தெரியுது"ன்னான். இந்த மாற்றத்தை செய்து முடிப்பதற்கு எனக்கு ஆனதென்னமோ 5 நிமிடங்கள் தான். அதன் பின் யோசிக்கையில் தான் புரிந்தது இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கும் (இந்தியாவிருக்கும்) பலர் எனது வலைப்பதிவின் முகப்புப் பக்கத்துடன் திரும்பி போய்விடுவதன் காரணம். விண்டோஸ் XP தவிர்த்து விண்டோஸ் 98 போன்ற மைக்ரோஸாஃப்டின் பழைய இயக்குதளங்களை உபயோகிப்பவர்களுக்கு இந்த இயங்கு எழுத்துரு அத்தியாவசியமாகிறது.மொசில்லாவில் படம் காட்டும் வலைப்பதிவுகள்
இதற்கு கொஞ்சம் தொடர்புடைய இன்னொரு விசயம். பாதுகப்பினை கருத்தில் கொண்டாவது அனைவரும் இண்டெர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக மொசில்லா குடும்பத்தை சேர்ந்த ஏதாவது ஒரு உலாவியினை (Web Browser) உபயோகிக்க வேண்டும் என்பது எனது அனுபவப் பாடம். எனது வலைப்பதிவினை இது வரை வாசித்தவர்களில் 2 பேர் தவிர்த்து அனைவருமே இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உபயோகிக்கிறார்கள். இதில் சிலருக்காவது மொசில்லாவின் பெருமைகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன. ஆனால் அனைவருமே இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே உபயோகிப்பதற்கு காரணம் என்ன?- விண்டோஸினை நிறுவும் போதே இது தானாகவே வந்திறங்கிவிடுகின்ற படியால், வேறொரு உலாவியினை நிறுவுவதற்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது. (அதனலேயே பலர் இண்டெர்நெட் எக்ஸ்புளோரரை தொடர்ந்து உபயோகித்து அது இலவசமாக தரும் ஸ்பைவேரையும், ஆட்வேரையும் அடிக்கடி anti-spywareகள் கொண்டு விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்).
- மற்றொரு முக்கிய காரணம் தமிழ் தளங்கள் சில மொசில்லாவில் சரியாக தெரியாதது.
1. மொசில்லாவில் வாசிக்க இயலாத வலைப்பதிவுகள்
இந்த வலைப்பதிவுகளை மொசில்லா கொண்டு வாசிப்பது என்பது சோழர் கால கல்வெட்டினை படிப்பதை விட கடினமாயிருக்கிறது. உதவாக்கரை – http://www.shankarkrupa.tk/பாரி – http://paari.blogspot.com/
என் மன வானில – http://www.poetraj.blogspot.com/
RajiniRaja – http://rajiniraja.blogspot.com/
ரசிகனின் குரல் – Voice of Rajinifans – http://rajinifans.blogspot.com/
http://ciththan.blogspot.com/
இந்த பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் எல்லாம் கொஞ்சம் தேவலாம். பதிவினை சுலபமாக வாசிக்க முடிகிறது. தலைப்புகள் தான் நர்த்தனமாடுகின்றன.
2. பதிவினை படிக்க முடிகிறது. ஆனால் தலைப்புகள் சரியாக தெரிவதில்லை
அகரதூரிகை – http://arunviews.blogspot.com/
Manaosai – http://manaosai.blogspot.com/
தமிழ் நண்பர்களே – http://knrjafarhome.blogspot.com/
enathu paarvai – http://paarvai.blogspot.com/
WEBTIME – http://webtime.blogspot.com/
கரும்பலகை – http://rchandra.blogspot.com/
என்றென்றும் அன்புடன், பாலா – http://balaji_ammu.blogspot.com/
வந்தே மாதரம் – http://karthikvidhya.blogspot.com/
3. பதிவினை படிக்க முடிகிறது. தளத்தின் பெயர் மற்றும் பதிவுகளின் தலைப்புகள் சரியாக தெரிவதில்லை
ஜான் வலைப்பூக்கள் – http://johnbosco.blogspot.com/
கொஸப்பேட்டை டாட் காம் – http://kosappettai.blogspot.com/
கேவிஆர் பக்கங்கள் – http://kvraja.blogspot.com/
ப்ரியமுடன் பிகேபி – http://pkp.blogspot.com/
Perinpamweb .கவிதைகள் – http://perinpamweb.blogspot.com/
நாட்டாமை – http://naattaamai.blogspot.com/
4. தளத்தின் பெயர் மட்டும் சரியாக தெரிவதில்லை
பாலாவின் படக் களஞ்சியம் – http://baalaaphoto.blogspot.com/
புரியாத புதிர்கள்: http://baaladaevan.blogspot.com/
எழிலுலா – http://ezhilulagu.blogspot.com/
நிழல்கள் – http://www.nizhalkal.blogspot.com/
என் மனவானில் மின்னியவை – http://www.singai_ismail.blogspot.com/
இறுதி இறை வேதம் – http://goodpage.blogspot.com/
நல்லநிலம் – http://muthuraman.blogspot.com/
திரை விமர்சனம் – http://vimarsanam.blogspot.com/
எழுத்தென்னும் தவம் – http://thavam.blogspot.com/
http://paranee.yarl.net/
விழித்திருப்பதனால் வாழ்பவன் குறிப்புகள் – http://sudalai.blogspot.com/
சுந்தரவடிவேல் – http://sundaravadivel.blogspot.com/
நினைவுகள் – http://www.kgans.blogspot.com/
நிழல்கள் – http://nizhalkal.blogspot.com/
எண்ணங்கள் – http://manakkurangu.blogspot.com/
nera nirvagam – http://neranirvagam.blogspot.com/
இதழ்களின் இணையம் – http://www.natkeeran.ca/AJLinks/TMag/tamilzines.html
நினைவுத்தடங்கள் – http://ninaivu.blogspot.com/
பி.கு:
1. நான் உபயோகப்படுத்தியது ‘மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்’ உலாவி.
2. பட்டியல் ஒன்றில் உள்ளவர்கள் தங்கள் தளத்தை கொஞ்சம் செப்பனிட்டால் (எனக்கு மட்டுமாவது) பெரிதும் உதவியாயிருக்கும்.
நவன்,
நானும் உங்களை மாதிரி explorerஐ விட்டுத்தொலைக்கலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணிட்டிருக்கேன். ஆனா இந்த மாதிரி பிரச்சனைகளால அடிக்கடி explorerக்கு போகவேண்டியிருக்கு. நான் தமிழா அப்படிங்கற mozilla அடிப்படையிலான browser உபயோகிக்கறேன். நீங்க பொறுமையா இந்த பட்டியல் போட்டதுக்காகவாவது இந்த வலைப்பதிவுகளை எப்படி சரிபண்றது அப்படின்னு கண்டுபிடிக்கனும். mozillaவிலயே பிரச்சினைன்னா bug ஒண்ணு போட்டுரனும்.
[1]
இல்லைங்க. இது மொசில்லாவில் உள்ள பிரச்சனையா என்று எனக்கு சரியா எனக்கு தெரியவில்லை. W3C மற்றும் CSS/CSS2 specs நன்றாக அறிந்த ஒருவர் இதைப்பற்றி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி வார்ப்புருவிலோ அல்லது stylesheeலயொ சின்ன மாற்றங்கள் செய்தால் போதும்.
(HTML/Stylesheets இதெல்லாம் எனக்கு அவ்வளவா பரிச்சயமில்லையென்றாலும்) யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னால் முடிந்தளவிற்கு ஆலோசனை வழங்கமுடியும் என்று நம்புகிறேன்.
நவன்,
என் தமிழ்ப் பதிவு http://kichu.cyberbrahma.com/ – IE-யில் சரியாகத் தெரிகிறது. ஆனால் Firefox-ல் சில பகுதிகள் முழுமையாக தமிழ் எழுத்துக்கள் தெரிவதில்லை.
இன்னொரு பிரச்னை:
WordPress-ல் முயற்சி செய்தேன் Firefox-ல் தெரியவேயில்லை. அதன் சுட்டி:
http://kichu.cyberbrahma.co…
என்னுடையா ஆசையெல்லாம், இந்த இரண்டு வகை உலாவீயிலும் நன்றாகத் தெரியவேண்டும் என்பதுதான்.
Stylesheet-இலும் template-டிலும் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை எனக்கு விளக்கினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்!
[3]
S.K. மொசில்லாவில் படம் காட்டுவது உங்கள் பதிவினை பற்றிய description (sub-title) மட்டும் தான்.
In your stylesheet (/skins/custom/custom.css), the styles for .pageSubTitle are currently defined as below
.pageSubTitle {
color: #fff;
letter-spacing: 4px;
text-align: center;
vertical-align: middle;
border: 0px;
padding-right: 6px;
padding-top: 6px;
padding-bottom: 4px;
padding-left: 6px;
font: 109% Arial, Helvetica, sans-serif;
}
‘letter-spacing: 4px;’, எனற வரியினை மட்டும் நீக்கிவிட்டீர்களென்றால் மொசில்லாவில் தெளிவாக தெரியும்.
[4] வண்டி நிறைய நன்றி!
அப்படியே WordPress – ல் இயங்கும் http://kichu.cyberbrahma.co…
இந்த பூவையும் Mozilla/Firefox-ல் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்று சொல்ல வேண்டுகிறேன்!
அன்புடன்
எஸ்.கே
[5]
உங்கள் WP stylesheetஐ பார்த்த பின் அதில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.
I have made some changes to your "/wordpress/print.css" and you can download the file from http://tamil.navakrish.com/… . Replace the css file on your wordpress installation with this file and then give it try. Let me know if you still have problems.
Mozilla does not like "text-align: justify" and "letter-spacing" tags.
ஆஹா… போட்டுட்டாஞய்யா போட்டுட்டாஞ்ய! மொதோஓஓஓ ஆளா லிஸ்டுல வந்துட்டயே ராசா! ("ம்ம்ம், சரி வுடு. இஸ்கூலு, காலேஜுலதான் கடைசிப் பேரு, இப்போவாவது ஒழுங்கா மொதல்ல வந்தியே!")
ஹீ, ஹீ. கண்டுக்காதீங்க. அது நானும் என் மனசாட்சியும் பேசிக்கொண்டது. இப்போ அலைன்மெண்ட் இடப்பக்கமா மாத்திட்டேன், ஜஸ்டிஃபிகேஷன்ல இருந்து. இப்போ சரியாகத் தெரிகிறதா?
க்ருபா
இப்போ சூப்பரா இர்க்கு க்ருபா. ரொம்ப டாங்க்ஸூ.
கிச்சு அண்ணாவுக்கு பொறுமையாக விளக்கி இருக்கிறீர்கள். அவரின்மூலம் நானும் அறிந்துகொண்டேன் மிக்க நன்றி நவன்.
நானும் பயர் பாக்ஸ்தான் நுழைத்திருந்தேன். ஆனால் பல தளங்களின் எழுத்துரு சரியாகத் தெரியாததால் வெளியேற்றிவிட்டு மீண்டும் பழையபடி ஜன்னலுக்கே தாவ நேர்ந்தது.
நவன்
இன்னும் எனது மனஓசையின் தலைப்பு சரியாகத் தெரியவில்லையா..?
நட்புடன்
சந்திரவதனா
சந்திரவதனா, இன்று தான் சோதித்து பார்த்தேன். வலைப்பதிவின் தலைப்பு சரியாகத் தெரிகிறது. ஆனால் இரண்டான் நிலை தலைப்புகள் (ஒவ்வொரு பதிவிற்குமான தலைப்பு) சரியாக இல்லை.
பார்க்க: http://tamil.navakrish.com/images/manaosai.png