முற்றுப்புள்ளி

‘க்ரேட் ______ காலரி’ என்று சில பிரபலங்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்களாக அடையாளம் காட்ட முயன்றிருப்பது தான் அது. இது போல் வேறு எந்தெந்த சாதிக்காரர்கள் செய்திருக்கிறார்களோ தெரியவில்லை. அனைவரும் இது மாதிரி ஆரம்பித்து விட்டால் அப்புறம் ‘நீ பெரியவனா? நான் பெரியவனா?’, ‘உன் சாதி உயர்ந்ததா? என் சாதி உயர்ந்ததா?’ என்ற சண்டைகள் இனையத்திலும் தொடர நேரிடலாம். இனி வரும் காலங்களில், இனையம் மூலம் உலக மக்களிடையே உள்ள பிரவினைகளை அழிந்து விடும் நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், இது போன்ற தளங்கள் மூலம் காலா காலத்திற்கும் இந்த சாதி பிரிவினைகளை தொடரும் அபாயமும் இருப்பதாக படுகிறது. இது போன்ற தளங்களை படித்தவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் அங்கீகரிக்கலாகது. தொடக்கத்திலேயே இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேண்டு(டா)மென்று தான் இந்த இடுகையில் அந்த தளத்திற்கான சுட்டியினை வழங்கவில்லை. நான் சுட்டி வழங்க போய் என்னால் கூகிளில் அந்த தளத்திற்கான ராங்க் ஏறிவிடக்கூடாது பாருங்கள். ]]>

4 thoughts on “முற்றுப்புள்ளி

  1. இன்னும் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்

  2. நான் சொல்ல வந்தது என்னன்னா, இனையத்திலும் சாதி அடிப்படையிலான விஷயங்கள் வேண்டாம் என்பது தான். மத்தபடி இதை பத்தி இன்னும் விளக்கமா எழுதி யாருடைய உணர்ச்சிகளையும் தூண்டிவிடுறதோ அல்லது புன்படுத்துவதோ தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  3. சுட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று பாலாவினுடைய ஆங்கில வலைப்பதிவை பார்த்த பின் சுட்டிகளை இங்கே வழங்கினால் இந்த பதிவினை படிப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் clarity கிடைக்கும் என்று தோன்றுகிறது.

    நான் இந்த பதிவினை எழுத காரணமாய் இருந்தது: http://www.saivaneri.org/pi

    பாலாவினுடைய பதிவு: http://bsubra.blogspot.com/

  4. I presume all ‘folks’ will have a ‘supremacy’ site. By quoting them alone, I was doing injustice 😐

    But, I do agree with this post.

Comments are closed.