பாகம் 1 2 3 4 5
சமீபத்தில் ஒரு நன்பர் என்னிடம் வந்தார் .
"எனது கணினி அடிக்கடி மெதுவாக இயங்குகிறது. அது கூட பரவாயில்லை. முக்கியமான நேரங்களில் வேலை செய்யாமல் தகராறு செய்கிறது. நேற்று கூட இப்படி தான். அலுவலகத்தில் முக்கியமான ஒரு சந்திப்பின் போது எனது புதிய திட்டத்தினை விளக்கி காட்டுவதற்காக ஒரு பவர்பாயிண்ட் ப்ரெஸண்டேசன் செய்து வைத்திருந்தேன். சரியான நேரம் பார்த்து காலை வாரி விட்டது. கொஞ்சம் என்ன ஏதுவென்று பார்த்து சொல்லுங்களேன்" என்றார்.
நான் வழக்கமாக கேட்கும் முதல் கேள்வி. "உங்கள் கணினியில் வைரஸ் ஏதும் இருக்கிறதா?" என்பது தான்.
அவர் தனக்கு தெரிந்து வைரஸ் ஏதும் இருப்பதாக தெரியவில்ல என்று சொல்ல, சரி என்னவாகத்தானிருக்கும் என்று பார்த்தால், அவர் சொல்லியது போலவே அவர் ஆண்டி-வைரஸ் (anti-virus) நிறுவியிருந்தார். வைரஸ் ஸ்கேன் செய்து பார்த்தால் F-Secure எந்த பிரச்சனையுமில்லை என்றது. ‘சரி விண்டோஸ் அப்டேட் செய்து வந்திருக்கிறாரா?’ என்று பார்க்கலாம் என்று இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்தால் அது தானாகவே ஏதோ ஒரு இனைய தளத்தை திறந்தது. பார்ப்பதற்கு ஒரு தேடு தளம் போலிருந்தது.
நீங்கள் தான் இந்த தளத்தை உங்கள் ‘ஹோம் பேஜாக’ வைத்திருக்கிறீர்களா?
இல்லை. அது தானாகவே மாறிவிட்டது. அதை மாற்றவும் முடியவில்லை. நான் ஹோம் பேஜிற்கு வேறு முகவரி கொடுத்தாலும் அது தானாகவே திரும்பவும் இந்த தளத்திற்கு மாறி விடுகிறது
சரி தான். அவரது ‘ப்ரொஸர் ஹைஜேக்’ செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்து போயிற்று. விண்டேஸ் அப்டேட் தளத்திற்கு சென்றால் அவர் கணினி வாங்கிய தினத்திலிருந்து விண்டோஸ் அப்டேட் செய்யவேயில்லை என்று புரிந்தது. சரி ஸ்பைவேர் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் கணினி முழுவதும் ஏராளமான ஸ்பைவேர். இது எல்லாம் போதாது என்று அவரது ஆண்டி-வைரஸ் ஆண்டி-வைரஸாக இல்லாமல் ஒரு பேக்-டோர் (back-door) எனும் வகையை சேர்ந்த ‘ட்ரோஜான் ஹோர்ஸாக’ மாறியிருந்தது.
அப்புறம் என்ன அவரிடம் அனைத்தையும் விளக்கி கூறி, இந்த கணினியில் ஒழிந்திருக்கும் சாத்தான்களையெல்லாம் விரட்டி அடிப்பதற்கு பதில் ஹார்ட் டிஸ்கை ‘ஃபார்மட்'(format) செய்து மீண்டும் விண்டோஸை நிறுவுங்கள் என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன்.
வரும் முன் காக்க
சரி இந்த மாதிரி பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன? இந்த ஸ்பைவேர் மற்றும் இத்தியாதி இத்தியாதி ஸாஃப்ட்வேர் எல்லம் எப்படி பரவுகிறது? இதை வருமுன் தடுக்க முடியாதா?
ஓரளவிற்கு இதனை தடுப்பது சாத்தியம் தான். அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ…
- உங்களுக்கு அறிமுகமில்லாத தளத்தில் இருந்து எந்த ஒரு மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
- அதை விட முக்கியம் எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் நம்பும் ஒருவர் பரிந்துரைத்தால் ஒழிய உங்கள் கணினியில் நிறுவாதீர்கள். (நீங்கள் நம்பும் அந்த நபரே சுலபமாக ஏமாறக்கூடியவராயிருந்தால் நான் பொறுப்பல்ல)
- யாரேனும் உங்களுக்கு ஏதாவது ஒரு மென்பொருளை பரிந்துரைத்தாலும் நீங்கள் ஒரு முறை அந்த மென்பொருளின் நம்பகத்தன்மையை சோதித்து விடுவது நல்லது. ஒரு மென்பொருளை நிறுவுவதிற்கு முன்பு அது ஸ்பைவேரா இல்லையா என்பதை http://www.spywareguide.com/product_search.php என்ற முகவரியில் உள்ள தேடுபொறியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
- ஒரு மென்பொருளை நிறுவுவதற்கு முன்பு அதன் லைசன்ஸில் எழுதியிருப்பதை வாசித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அநேகமாக எல்லா ஸ்பைவேர் வகை மென்பொருளும் அதன் லைசன்ஸில் தெளிவாக குறிப்பிடும் விடயம் "உங்களை பற்றிய விபரங்களை எங்கள் நிறுவனத்திற்கு இந்த மென்பொருள் அனுப்புவதற்கு நீங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறீர்கள்" என்பதாக தான் இருக்கும். இந்த லைசன்ஸிற்கு நீங்கள் உடன்பட்டு ஸ்பைவேரை நிறுவியபின் எந்த நாட்டின் சட்டமும் உங்களை காப்பாற்ற முடியாது.
- ‘ஓபன் சோர்ஸ்’ (open source) ஸாஃப்ட்வேர் தவிர்த்து இலவசமாக கிடைக்கும் எந்த மென்பொருளையும் சந்தேகத்துடனே பாருங்கள்.
- சில மென்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக உபயோகிக்கும் உரிமையை உங்களுக்கு வழங்கும். *அந்த காலம் முடிவடைந்த பின் அது ஸ்பைவேராகவோ அல்லது அட்வேராகவே மாறும்* வகையில் எழுதப்பட்டிருக்கும். அதற்குள் அந்த மென்பொருள் உபயோகித்து நீங்கள் பழகியிருப்பீர்கள். வேறொரு மென்பொருளை தேடும் பொறுமை இல்லாது அந்த மென்பொருளையே தொடர்ந்து உபயோகிக்க தொடங்குவீர்கள்.
- நீங்கள் உபயோகிப்பது ஸ்பைவேர் என்று அடையாளம் கண்டு கொண்டு அதை உங்கள் கணினியில் இருந்து நீக்கினாலும் அதனுடன் உங்கள் கணினியில் வந்திறங்கிய ஸ்பைவேரும் வெளியேரிவிடும் என்று நம்பாதீர்கள்.
- ஸ்பைவேர் மற்றும் ப்ரௌஸர் ஹைஜேக் பரவுவதற்கு பல நேரங்களில் முக்கிய காரணமாயிருப்பது இனைய தளங்களில் ஒளிரும் பேன்னர் (banners) வகை விளம்பரங்களால் தான். ஆகவே எந்த ஒரு பேன்னரையும் க்ளிக் செய்வதை தவிருங்கள்.
- அதே போல் தான் உங்களுக்கு வரும் எரிதமும் (spam messages). அவற்றை திறப்பதையே தவிருங்கள். முக்கியமாக அதில் இருக்கும் சுட்டிகளையே படங்களையோ க்ளிக் செய்யாதீர்கள்.
- நீங்கள் இனையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு pop-up மெஸ்ஸேஜ் தோன்றி உங்களிடம் ‘yes or no’ இந்த இரண்டில் ஏதாவது தேர்ந்தெடுங்கள் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ‘yes’ என்பதை தேர்ந்தெடுக்காதீர்கள்.
- அப்புறம் மிகவும் முக்கியமான விடயம். P2P வகை மென்பொருட்கள் எல்லாம் ஸ்பைவேராகவே அல்லது அட்வேராகவோ இருக்க வாய்ப்பு அதிகம். அதனால் திருட்டு விசிடி மாதிரி திருட்டு தனமாய் மென்பொருட்கள், பாடல்கள் மற்றும் படங்களை பதிவிறக்கம் செய்யலாமே என்ற ஆசையில் இலவசமாக கிடைக்கும் P2P மென்பொருட்கள் எதையும் நிறுவும் முன் ஒன்றுக்கு நூறு முறை யோசியுங்கள்.
இந்த குறிப்புகளை நீங்கள் புரிந்துகொண்டு இதன் படி நடந்தாலும் உங்கள் கணினி எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பாதீர்கள். இவ்வளவையும் மீறி உங்கள் கணினி தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அப்படி உங்கள் கணினி தாக்கப்பட்டால் அதிலிருந்து எப்படி மீள்வது என்று இன்னொரு பதிவில் பார்ப்போம். அது வரை கணினியை பற்றி ஓரளவிற்கு தெரிந்த உங்கள் நன்பர்களின் உதவியை நாடுங்கள்.
நல்லா எழுதறீங்க தலைவா…தொடர்ந்து எழுதுங்க..
நன்றி சாகரன். 😀
டெக்னிகல் டெர்ம்ஸ் எல்லாம் முடிஞ்ச வரைக்கும் தமிழில் எழுத ஆசை தான். ஆனால் எனக்கு தெரிந்த தமிழை வைத்துக்கொண்டு இது தான் முடிகிறது.
பார்போம், இன்னும் கொஞ்சம் நாளான பின் ஏதும் முன்னேற்றம் தெரிகிறதா என்று.
நவன், சரளமான நடையில் நன்றாக எழுதுகிறீர்கள். உங்கள் பதிவுகள் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி.
//சரளமான நடையில் நன்றாக எழுதுகிறீர்கள். உங்கள் பதிவுகள் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறோம்.//
ஆஹா பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு. உங்கள் ‘வலை வலத்தில்’ எனது கிறுக்கல்கள் குறித்து எழுதியிருந்ததையும் படித்தேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
Very good navan. Romba usefull’a irukku ennai maathiri 0’kku 😀
Pingback: தாமிரபரணித் தென்றல் » உங்கள் கணினி பாதுகாப்பானதா? - பாகம் 2
Pingback: தாமிரபரணித் தென்றல் » Blog Archive » உங்கள் கணினி பாதுகாப்பனதா? - பாகம் 5