ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று இந்த பேட்ச்கள் வெளிவருகின்றன. இந்த மாசம் இது வரை நீங்கள் உங்கள் கணினியை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்களேன். பொதுவாக உங்கள் கம்புயூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த "விண்டோஸ் அப்டேட்" செய்து புதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் கம்புயூட்டரை தாக்கும் வைரஸ் மற்றும் வேறு சில/பல வகையான தாக்குதல்களில் இருந்தும் உங்களையும் உங்கள் கம்புயூட்டரையும் காப்பாற்றிக்கொள்ள உதவும். சரி. இந்த விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா. யாரும் தயவது செய்து இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் விளக்கம் குடுத்து உங்கள் நேரத்தின் மதிப்பையோ, அல்லது உங்கள் பொது அறிவையோ நான் குறைவாக மதிப்பிட்டதாக நினத்திவிட வேண்டாம். நான் தினசரி சந்திக்கும் நன்பர்களில் பலரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்தவில்லை. அல்லது பெரும்பாலோனருக்கு இந்த சின்ன விடயங்கள் கூட தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த விளக்கம். அப்புறம் இன்னொரு முறை யாரும் Saser மாதிரி வைரஸினால் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள். Geeks மற்றும் கணினி வல்லுனர்கள் தயவு செயது மன்னித்துக்கொண்டு Slashdotடுக்கு செல்லலாம்.
முறை 1: ஸ்டார்ட் மெனு
உங்கள் ஸ்டார்ட் மெனுவில் "Windows Update" என்பதை க்ளிக் செய்யவும். இதற்கான படவிளக்கம் கீழேமுறை 2: இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரிலிர்ந்து
இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரிலிருந்து மேலுள்ள மெனு பாரில் "Tools" என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து "Windows Update" என்பதை கிளிக் செய்யவும். இதற்கான படவிளக்கம் கீழே இருக்கின்றது.
