அந்த காலத்தில்

நானெல்லாம் படிக்கும் போது எப்படியாவது 1000 மார்க் வாங்குடா. அப்போது தான் professional college சீட் கிடைக்கும்னு வீட்டிலே எல்லாரும் சொல்லி சொல்லி (விரட்டி விரட்டி) நானும் நல்ல பிள்ளையாக படிக்க முயற்சித்தும் கிடைத்த மார்க் என்னமோ 830 தான். அப்புறம் நானும் என்ன என்னலாமோ டகால்டிதனம் செய்து ஒரு மாதிரியா ஒரு வேலையில உக்கார்ந்த்தேன். ஆனா இவனை கேட்டால் 1101 மார்க் மோசமான மார்க்காம். என்ன competetive world. எனக்கு தான் எதுவும் புரிய மாட்டேங்குது. சரி private enginerring college அல்லது மெடிகல் காலேஜ்ல சேர வேண்டியது தானே அப்படின்னா, நல்ல காலேஜிலே சீட் கிடைக்க தொடக்கத்திலேயே 3 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவலிக்கனுமாம் (donation என்று வாசிக்வும்). அந்த காலத்தில எல்லாம் ஒரு பவுன் தங்கம் 20 ரூபாய் தான் தெரியுமா என்று எனது பூட்டி (பாட்டியின் அம்மா) சொன்ன போது கிண்டல் செய்தது தான் நினைவு வருகிறது. ]]>

One thought on “அந்த காலத்தில்

Comments are closed.