லினக்ஸ் டெக்னிகல் ரிசோர்ஸ் கிட்‘டை இலவசமாக வழங்குகிறது. இந்த ‘ரிசோர்ஸ் கிட்’ 3 டிவிடிகளில் 10GB அளவிற்கான மென்பொருட்களுடன் வருகிறது. இதனுடன் வரும் மென்பொருட்களின் விபரம்: Continue reading
இரட்டையர் டென்னிஸ் – லேட்டஸ்ட் ஸ்கோர்
அதென்ஸில் இன்று இரட்டையர் டென்னிஸ் வெங்கல பதக்கத்திற்கான மேட்ச் நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு இந்தியா ஒலிம்பிக்ஸிலிருந்து இரண்டு மெடல்களுடன் திரும்புமா?
‘இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ v க்ரொயேசிய இரட்டையர்கள்
8:30 pm:
தற்போதைய ஸ்கோர் – 6-7(5-7), 5-4
முதல் செட் க்ரொயேசியா.
உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 3
பாகம் 1 2 3 4 5 உங்கள் கணினி ஸ்பைவேர்/ஆட்வேர்’ஆல் தாக்கப்பட்டால் அதனை மீட்பதற்கு சில மென்பொருட்கள் இருக்கின்றன. அடுத்த சில இடுகைகளில் இதற்கு உதவும் சில மென்பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அந்த வரிசையில் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருளான ஆட்-அவேர் (adaware) பற்றி இன்று பார்ப்போம் . நீங்கள் ஸ்பைவேர்/ஆட்வேர் பற்றி இன்னமும் அறிந்திருக்கவில்லை என்றால் இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம். Continue reading
Testing the w.bloggar
about, this is a tool that use the XML-RPC for publishing from an external tool and w.bloggar is available here .]]>
முற்றுப்புள்ளி
Continue reading
உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 2
பாகம் 1 2 3 4 5
சமீபத்தில் ஒரு நன்பர் என்னிடம் வந்தார் .
"எனது கணினி அடிக்கடி மெதுவாக இயங்குகிறது. அது கூட பரவாயில்லை. முக்கியமான நேரங்களில் வேலை செய்யாமல் தகராறு செய்கிறது. நேற்று கூட இப்படி தான். அலுவலகத்தில் முக்கியமான ஒரு சந்திப்பின் போது எனது புதிய திட்டத்தினை விளக்கி காட்டுவதற்காக ஒரு பவர்பாயிண்ட் ப்ரெஸண்டேசன் செய்து வைத்திருந்தேன். சரியான நேரம் பார்த்து காலை வாரி விட்டது. கொஞ்சம் என்ன ஏதுவென்று பார்த்து சொல்லுங்களேன்" என்றார்.
உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 1
பாகம் 1 2 3 4 5 உங்களுக்கு கணினியை தாக்கும் *வைரஸ்* பற்றி தெரியுமா? ‘இதோடா வந்துட்டான்…. வைரஸ் பத்தி சொல்றதுக்கு. கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிச்சதிலிருந்து நான் பார்க்காதா வைரஸா. நான் உபயோகிக்காத anti-virusஆ’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி சரி…. வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். நான் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்காத ஸ்பைவேர் (spyware), அட்வேர் (adware), ட்ரோஜன் ஹோர்ஸ் (trojan horse) அப்புறம் ப்ரௌஸர் ஹைஜேக் (browser hijack) போன்ற மால்வேர் (malware) வகையைச் சேர்ந்த பிற மென்பொருட்களை பத்தி தான் சொல்லவிருக்கிறேன். யாரோ “இதெல்லாம் என்ன ஸாஃப்ட்வேர்? எங்கே டௌன்லோட் செய்யலாம்?” என்று கேட்ட மாதிரி சத்தம் கேட்டது. என்னது? யாருமில்லையா? நல்ல வேளை. 🙂 தயவது செய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். இன்றைய தேதிக்கு வைரஸ் எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதே அளவுக்கான பிரச்சனைகளை நான் மேலே குறிப்பிட்ட இந்த (கெட்ட)வகை மென்பொருள்களும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வகை மென்பொருள் பற்றி இது வரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள். Continue reading
விண்டோஸ் அப்டேட் – II
< << முதல் பாகம் >>>> சென்ற பதிவில் விண்டேஸ் அப்டேட் செய்வதன் அவசியத்தையும் செய்முறையையும் பார்த்தோம். இன்று இந்த விண்டோஸ் அப்டேட் செயவதை தானியங்கி முறை படி இயங்க செய்வது எப்படி என்று பார்ப்போம். Continue reading
விண்டோஸ் அப்டேட்
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று இந்த பேட்ச்கள் வெளிவருகின்றன. இந்த மாசம் இது வரை நீங்கள் உங்கள் கணினியை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்களேன். பொதுவாக உங்கள் கம்புயூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த "விண்டோஸ் அப்டேட்" செய்து புதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் கம்புயூட்டரை தாக்கும் வைரஸ் மற்றும் வேறு சில/பல வகையான தாக்குதல்களில் இருந்தும் உங்களையும் உங்கள் கம்புயூட்டரையும் காப்பாற்றிக்கொள்ள உதவும். சரி. இந்த விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா. யாரும் தயவது செய்து இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் விளக்கம் குடுத்து உங்கள் நேரத்தின் மதிப்பையோ, அல்லது உங்கள் பொது அறிவையோ நான் குறைவாக மதிப்பிட்டதாக நினத்திவிட வேண்டாம். நான் தினசரி சந்திக்கும் நன்பர்களில் பலரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்தவில்லை. அல்லது பெரும்பாலோனருக்கு இந்த சின்ன விடயங்கள் கூட தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த விளக்கம். அப்புறம் இன்னொரு முறை யாரும் Saser மாதிரி வைரஸினால் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள். Geeks மற்றும் கணினி வல்லுனர்கள் தயவு செயது மன்னித்துக்கொண்டு Slashdotடுக்கு செல்லலாம். Continue reading
கூகிளில் யுனிகோடுடன் தேடல்
ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் "வலைப்பூ" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு சேர்த்துவிடுகிறது. "காசி தமிழ்" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது. வாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.]]>