அமைதியான ..

என்றாவது ஒரு நாள் யாராவது கேட்பதற்கு முன்பாக சொல்லி விடுவது நல்லது. நான் தமிழ்மணம் திரட்டியிலிருந்து எனது பதிவுகளை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டு விலகியுள்ளேன்.

இதற்கான காரணம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை . சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ்மணம் வந்ததிலிருந்து வலைப்பதிவுகளுக்கு வாசகர் வட்டம் கூடியுள்ளது. ஆனால் வலைப்பதிவுகளுக்கான அடிப்படை தன்மைகளை பல வலைப்பதிவுகள் இழக்கத் தொடங்கியுள்ளன . Tamil blogs have now started to look like a forum. One big Tamizmanam forum.

கொஞ்ச நாட்கள் சந்தடியிலிருந்து விலகியிருக்கலாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்து விலகியுள்ளேன். வலைப்பதிவுகள் மற்றும் தாங்கள் உபயோகிக்கும் சேவைகள் பற்றிய புரிந்துணர்வு கூடிய விரைவில் பயனர்களுக்கு வரும் என்று நம்புகிறேன்.

இன்னமும் தமிழ்மணம் RSS feedஐ எனது திரட்டிகளிலிருந்து தூக்கிவிட கை பரபரக்கிறது, தினசரி செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம் மிச்சமாகும். அதற்கு முன் நான் இரசிக்கும் சிலரின் எழுத்துக்களை படிப்பதற்காக எனக்கான ஒரு OPML உருவாக்க வேண்டும்.

நம்ம மக்களுக்கு பரபரப்பா ஏதாவது ஒன்னு இருந்து கிட்டே இருக்கு. இப்போதைக்கு காசியும் தமிழ்மணமும் எல்லார் வாயிலும் அவலாகிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த சந்தடியில் நானும் மூழ்கியிருந்தால் வாழ்க்கையின் கால்வாசி நேரத்தை இந்த பரபரப்புகளை பார்வையிடுவதிலேயே முடிந்து விடும். கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்து இந்த திரும்பி இந்த பக்கம் திரும்பி பார்த்தால் காசி செஞ்சது ‘சரிXதப்பு’ன்னு ஒவ்வொருத்தரும் விடுற அறிக்கையை ஓடி ஒடி படிக்கதுலேயே இரண்டு மூனு நாளா முழு நேரமும் போயிடுச்சு. தமிழ்மணம் சேவையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்டுப்பாடுகள் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல ஒவ்வொருததரும் விடுற அறிக்கையை படிச்சு என் BP ஏறாம இருக்க நானாவே இதை விட்டு ஒதுங்கிக்கிடுறது நல்லது இல்லை .

3 thoughts on “அமைதியான ..

  1. Hi,
    Your Webblog and article presentation are very good and if you wish to join with us to work on http://www.digitalq.net you are most welcome and your linux.navakrish.com website has problem with tamil font and if you send your technical article to us, we would like to post in our website as well as hardcopy of our magazine.if you really interest please mail to me
    vivek@digitalq.net

  2. நவன், இப்போது தான் உங்களின் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். உங்களின் கருத்தும் ஆதங்கமும் மிகவும் உண்மை. பல வலைப்பதிவுகள் ஒரு forum போலத் தான் செயல்படுவதாய்ப் படுகிறது. சமீப காலங்களில் அதை அதிகமாகவும் உணர்கிறேன். நானும் கூட ஒரு தனி OPML செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Comments are closed.