புது (சக) ஊழியர்: வணக்கம் நவன். நல்லா இருக்கீங்களா?
நான்: பரவாயில்லை. நீங்க?
புசஊ: நல்லாயிருக்கேன். என் பெயரில் மின்னஞ்சல் கணக்கு திறந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. (இது அலுவலகத்தின் டொமைனில் அவருக்கு உருவாக்கிக் கொடுத்த மின்னஞ்சல் முகவரி). ஆனா அதுக்குள்ளே எப்படி போறதுன்னு தெரியலை.
நான்: அது ஒன்றும் கஷ்டமான விசயமில்லை. நமது இணையதளத்திற்கு வந்தீர்களானால் அங்கே “Webmail” என்று ஒரு சுட்டி இருக்கும். அதன் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் உங்களக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை வாசிக்கவும் முடியும்.
புசஊ: இணையதளத்திற்கு போறதுன்னா? எப்படி போகனும்?
நான்: அதுவா உங்கள் உலாவியில் http://www.example.com என்று தள முகவரியினை முகவரி பெட்டியில் உள்ளிட்டு அதன் பின் ‘Enter’ பட்டனை தட்டினால் போதும்.
புசஊ: ஆமாம். முகவரி பெட்டின்னு ஏதோ சொன்னீங்களே. அது எங்கே இருக்கு?
நான்: உங்கள் சாளரத்தில் மேலே ஒரு பெட்டி இருக்கும் பாருங்க. அதில நான் சொல்ற முகவரியை தட்டச்சுனீங்கன்னா போதும்.
புசஊ: ஒரு நிமிசம் இருங்க. நான் டைப் அடிக்கிறதுல ரொம்ப வீக். மெதுவா தான் அடிப்பேன். (இதற்கிடையில் 4 முறை spellingஐ சரி பார்த்துக் கொண்டார்)
நான்: என்ன ஆச்சா? அடிச்சு முடிச்சாச்சா?
புசஊ: ஆங்.. இதோ ஆச்சு. ஆனா நீங்க சொன்ன “Webmail”ன்னு ஒன்னையுமே காணோமே?
நான்: (ஆஹா.. இன்னைக்கு எவன் முகத்துல முழிச்சேனோ.? இப்படி படுத்துறானே. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்) நீங்கள் என்ன உலாவி உபயோகிக்கிறீர்கள்?
புசஊ: உலாவின்னா?
நான்: (ஆகா.. இவன் அவனே தான்) Internet Explorerஆ? மொசில்லாவா? நெட்ஸ்கேப்பா? என்ன உபயோகிக்கிறீங்கன்னு கேட்டேன்?
புசஊ: ஓ அதுவா. கூகிள்!
நான்: என்னது கூகிளா?
அதற்கப்புறம் ஒரு 5 நிமிசம் மேலும் விளக்கம் கொடுத்து அவரை அந்த Email system பக்கம் கூட்டிட்டு போய் உள்ளே நுழைய வைக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. எல்லாம் முடிஞ்சதும்…
புசஊ: மிக்க நன்றி நவன்.
நான்: உங்களுக்கு உதவ முடிந்ததில் சந்தோசம். உங்கள் அஞ்சல் பெட்டியில் நான் அனுப்பியிருக்கும் வரவேற்பு மடலில் இந்த தொழில் நுட்பத்தை எப்படி உபயோகிப்பது என்ற விபரங்கள் இருக்கும். அதனை வாசித்து பாருங்கள். உங்களுக்கு மேலதிக விபரம் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு என்னிடம் கேட்கலாம். ஹேவ் அ குட் டே.
அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் இண்டர்காம். மீண்டும் அதே நபர்.
புசஊ: நவன். மின்னஞ்சல்களை பார்வையிட முடிகிறது. ஆனால் இதிலிருந்து எப்படி வெளியே வருவது.
நான்: (நற… நற…) மின்னஞ்சல் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த பக்கத்தில் “Logout” என்ற வார்த்தை மேலே தெரியும் பாருங்க. அதனை க்ளிக்கினால் போதும்.
சந்தோசமாக மற்றொரு முறை நன்றி சொல்லி முடிக்கிறார். ஒரு அப்பாவிக்கு உதவிய சந்தோசத்தில் நான் தேநீர் கோப்பையை தேடுகிறேன்.
சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் தொலைபேசி அலறல். இறைவா! மீண்டும் அதே நபராக இருக்க கூடாது.
புசஊ: நவன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நிறைய உதவி செய்கிறீர்கள். மற்றவர்களும் உங்களை பற்றி மிகவும் நல்லபடியாக சொன்னார்கள்.மின்னஞ்சல் செயல்பாடு முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறதாமே. எனக்கு இன்னொரு உதவி செய்ய வேண்டும்.
நான்: சொல்லுங்கள். கட்டாயம் செய்கிறேன். (சே… இவ்வளவு நல்ல மனுசனை தப்பா நினைச்சுட்டேனே)
புசஊ: என்னிடம் ஒரு யாஹூ மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. ஆனால் அதில் நான் உபயோகிக்கும் பயனர் பெயர் எனக்கு பிடிக்க வில்லை. Can you change my yahoo username?
தப்பிச்சேன் – I am not working as a Support professional 😉
நாமெல்லாம் நீதிமன்றங்கள்,வங்கிகள், அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நம்மைப்பற்றி இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள், இருந்தாலும் மனம் விட்டு சிரித்தேன்.
🙂
*/மின்னஞ்சல் செயல்பாடு முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறதாமே. எனக்கு இன்னொரு உதவி செய்ய வேண்டும்./*
*/ Can you change my yahoo username?/*
ரொம்ப அப்பாவியாக கேட்டிருக்கிறார். இணைய தொடர்பே இல்லாதவர் போலும்.
:-)))
நல்ல ஆளு கிட்ட மாட்டினீங்க
அட எந்த ஊரு அந்த புசஊ- க்கு ?
நவனீ ஊருல என்னா சேதி ? எப்போ வந்திங்க ?
//தப்பிச்சேன் – I am not working as a Support professional//
Partha: நிஜமாவே சந்தோசப்படுங்க. இது மாதிரி பல சம்பவங்கள் இருக்கு. ஒரு தொடராவே எழுதலாம். 🙂
//நாமெல்லாம் நீதிமன்றங்கள்,வங்கிகள், அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நம்மைப்பற்றி இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்,//
குழலி: கொஞ்சம் குழப்பமா இருக்கே. தகவல் தொழில் நுட்பத்தில் வேலை செய்யாதவர்களை பற்றி அதில் உள்ளவர்கள் இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவா?
முத்து: நன்றி
//ரொம்ப அப்பாவியாக கேட்டிருக்கிறார். இணைய தொடர்பே இல்லாதவர் போலும்.//
ராஜா: அதெல்லாம் இல்லை. ரொம்ப நாளா இணையம் உபயோகிப்பவராக தான் தெரிகிறார். ஆனால் அதன் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தை பற்றி அறிந்திராமல் பலர் இருக்கிறார்கள்.
இணையம் மட்டும் தான் என்றில்லை. செல்பேசி என்று எடுத்துக் கொண்டால் கூட எத்தனை பேருக்கு Bluetooth, IR போன்றவற்றை உபயோகிக்க தெரிந்திருக்கிறது அல்லது உபயோகிக்கும் தேவையிருக்கிறது. இவ்வளவு ஏன் text message அனுப்ப தெரியாமல் பல ஆண்டுகளாக செல்பேசி உபயோகிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
புதிய தொழில்நுட்பங்களை பல பேர் ஏதோ பூச்சாண்டியை பார்க்கும் பயத்துடன் தான் பார்க்கிறார்கள்.
சமீபத்தில் புதிய செல்பேசி வாங்கியிருந்த ஒரு நண்பர் (மென்பொருள் வல்லுனர்) பழைய கருவியில் சேமித்து வைத்திருந்த தொடர்பு எண்களையும் பெயர்களையும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு புதிய செல்பேசியில் ஒவ்வொன்றாய் manualஆ ஏற்றிக் கொண்டிருந்தார். He did not even know that copying the addressbook through the SIM memory is a possibility. இத என்னென்னு சொல்றது.
பரனீ: தலை தப்பிச்சது தம்புரான் தயவுன்னு ஓட வேண்டியதா போச்சு. 🙂
//அட எந்த ஊரு அந்த புசஊ- க்கு ?//
சங்கர்: அந்த ‘புசஊ’க்கு சொந்த ஊரு இத்தாலி.
//நவனீ ஊருல என்னா சேதி ? எப்போ வந்திங்க ?//
ஊருக்கு மூனு வாரத்துக்கு முன்னாடி போயிட்டு வந்தேன். மே 20,21 ரெண்டு நாள் மட்டும் இருந்தேன். அதுக்கு முன்னாடி டிசெம்பர், ஜனவரில போயிருந்தேன். அப்பம் எல்லா ஃப்ரெண்ட்ஸையும் பார்க்க முடிஞ்சுது. இந்த தடவை யாரையும் பார்க்கலை. நெறைய பேருக்கு நான் வந்துட்டு போன விசயமே தெரியாது. நிதானமா ஒரு நாள் மெயில் போடுறேன்.
என்னோட யாகூ முகவரி எனக்கு பிடிக்கலை. மாத்த முடியுமா? 🙂
புள்ள ஆசப்பட்டு கேக்கு… கூடவோ கொறச்சோ கொஞ்சம் செஞ்சு குடுத்துருங்களேன்…
அப்புறம்… யாகூ மட்டுந்தேன் மாத்துவீங்களா? எனக்கு ஒரு ஜீமெயில் மாத்தி தர முடியுமா??? 😉
நவநீ, எனக்கு சப்போர்ட் மக்களை கலாய்க்கிறதுன்ன ரொம்ப பிடிக்கும். அதுலேயும் பொண்ணுங்க இருந்தாங்கன்னா “அடேடே எனக்கு கீ போர்டு கூட யூஸ் பண்ண தெரியாது. கத்து தாங்கன்னு கேட்க தோனும்.” 😉
நவன், பாண்டி: இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி?
விஜய்: பொன்னுங்களை கலாய்க்கிறதா? வூட்டம்மாக்கு தெரியுமா?
எனக்கு யாகூ மெயிலுக்கு User Name, பாஸ்வேர்டு மாத்த வேண்டாம். ஆனா யாகூ மெசஞ்சருக்கு மட்டும் பாஸ்வேர்டு மாத்தனும். செஞ்சி தர்றிங்களா?!
பயங்கர அப்பாவியாத்தான் இருக்கார் உங்க பு(ச)ஊ .. இவ்ளோ நன்றிகள் சொல்லி கடைசியில் அருமையான உதவிதான் கேட்டு இருக்கார்.. இத்தகைய அனுபவங்கள் அடங்கிய உங்கள் தொடருக்கு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் 😉
Quite interesting…tells exactly the condition of support professionals..:)