வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்

வலைப்பதிவர் மன்றத்தில் சமீபத்தில் வலைப்பதிவுகளை வகை பிரித்தல் பற்றிய விவாதத்தை படித்தேன்.

இது பற்றி சில சிந்தனைகள் எழ, சில திறமூல நிரலிகளை பயன்படுத்தி எனது மடிக்கணினியில் ஒரு சோதனை செய்து பார்த்தேன். WordPressஇற்குள் இயங்குமாறு ஒரு திரட்டியினை நிறுவி, தமிழ் வலைப்பதிவுகளை திரட்டி WordPressஇற்குள் பதிக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன்.

WordPress, Nucleus, Moveable Type போன்றவை கொண்டு இயங்கும் வலைப்பதிவுகளில் பதிவுகளை ‘வகை பிரிக்கும்’ செயல்பாடு இருப்பதால் வலைப்பதிவர்களே தங்கள் பதிவுகளை ஒரு தலைப்பின் கீழ் வகை படுத்த முடியும். ஆனால் ப்ளாக்கரில் இந்த செயல்பாடு கிடையாது என்றே நினைக்கிறேன். பதிவுகளை வகைப்படுத்தும் ஒரு முயற்சியாக Technorati tags இப்போது பிரபலமடைந்து வருவதையும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எனது சோதனை மனற்தொட்டிக்கான உரல் இதோ. இங்கே ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட பதிவுகள் அந்தந்த தலைப்புகளின் கீழ் தானாக திரட்டப் பட்டிருப்பதை காணலாம். ஆனால் பிளாக்கர் பயனர்களின் பதிவுகள் அனைத்தும் பொதுவான தலைப்பின் கீழ் மட்டும் தான் கிடைக்கும்.

இந்த சோதனை செய்து பார்த்ததில் தோன்றிய இன்னொரு சிந்தனை. தமிழ்மணத்தில் ஒரு வலைப்பதிவர் எழுதிய அனைத்து பதிவுகளையும் பட்டியலிடும் ஏற்பாடு இருந்தால் சௌகரியமாக இருக்கும்.

இந்த தளம் is Just a proof of concept. இதில் நேற்றும் இன்றும் மட்டும் திரட்டிய பதிவுகள் இருக்கின்றன. WordPress போன்று ஏற்கெனவே முதிர்ச்சியடைந்திருக்கும் ஒரு மென்பொருளுடன் MagpieRSS போன்ற மென்பொருட்களை பொருத்துவதில் பல அனுகூலன்கள் இருக்கின்றன. தேடுதல், வகைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் WordPressஇன் உள்ளேயே அமைந்திருப்பதால் தனித்தன்மையுடைய வேறு பல செயல்பாடுகளை அறிமுகப்படுத்த நேரத்தை உபயோகிக்க முடியும்.

காசியே பல முறை சொல்லியிருப்பதை போன்று இனி வரும் காலத்தில் தமிழ் வலைப்பதிவுகளுக்காக தமிழ்மணம் போன்று வேறு பல சேவைகள் வரக்கூடும். ஆங்கிலத்தில் Technorati, Blogsnow போன்ற தளங்களை போன்று தமிழ் வலைப்பதிவுகளையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் அனுக வகை செய்யும் தளங்கள் வர வேண்டும். எனது இந்த சோதனை கூட எவருக்கேனும் உத்வேகமாக அமைந்து ஒரு புதிய சேவை பிறக்கலாம்.

இந்த சோதனை தளம் இன்னும் ஒரு நாள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

19 thoughts on “வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்

 1. An afterthought:

  1. Sorry tamil bloggers, for republishing your feeds without your consent.
  2. Sorry to Kasi for stealing your OPML list.

  This is just an experiment and will be taken down shortly and I hope that you won’t mind.

 2. நவன், நன்றாக இருக்கிறது. இதைப் பற்றி எனக்கு சில யோசனைகள் இருக்கின்றன. இப்போது நேரமில்லை. விரைவில் எழுதுவேன். முயற்சிகளுக்குப் பாராட்டுகள்

 3. நவன், நல்ல முயற்சி. நேரமில்லாத்தால் இப்போது என் யோசனைகளி எழுதவில்லை. விரைவில் செய்கிறேன். (வண்ணக் கலவை அழகு)

 4. //2. Sorry to Kasi for stealing your OPML list.//
  It is OK navan, you don’t have to mention this. No sorry, be happy!

 5. நன்றி காசி. Technorati tags பார்த்தீர்களா? தமிழ் வலைப்பதிவர்களை அது போன்ற tagsகளை உபயோகிக்க வைக்கும் சாத்தியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

 6. From my limited experience, technorati search does not work well in Unicode tamil; while it is great for english searches for current happenings in blog.

  And the following might be stupid question; but let me ask. How a tamil blogger can add tags to his posts in blogspot? i.e. whether it should be in tamil (unicode) or english or thanglish? Also, should I have a separate page with tags and my post URLs or is it more like a meta tag?

  குட்டி அறிமுகம் மாதிரி ஒரு போஸ்ட் போட்டு விடுங்களேன்… வ.கே.கே. எல்லாம் துழாவாமல், எளிதாகப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் 🙂 முன்கூட்டிய நன்றிகள்!

 7. Technorati யுனிகோடு தேடல்களில் தடுமாறுகிறது. இது பற்றி ஏற்கெனவே அவர்களுக்கு தெரிவித்திருக்கிறேன். இதனை சரி செய்ய முயல்வதாக கூறியிருக்கிறார்கள்.

  இதுவும் வேலை செய்யா விட்டால், technorati தளத்திற்கு சென்று ‘tag:வலைப்பதிவர்’ என்று தேடி பாருங்கள்.

  அல்லது இதனை வெட்டி ஒட்டுங்கள்

  http://www.technorati.com/tag/வலைப்பதிவர்

 8. நவன்,

  சென்ற மாதம் technorati பார்த்தேன். பல காரணங்களால் நமக்கு அந்த முறை அப்படியே சரிவராது என்ற எண்ணம்
  காரணங்கள்:

  1. ப்ளாக்கரில் உள்ள கட்டுப்பாடுகள், நம் மக்களின் ஆர்வம், ஈடுபாடு.
  2. தமிழில் எழுதப்படும் விஷயங்களும் எண்ணிக்கைகளும்
  3. நாம் பயன்படுத்தும் சொற்களின் துல்லியமின்மை, பன்மை, புணர்ச்சி விதிகள்
  4. யுனிகோடுக்கென்ற சில பிரச்னைகள்

  நான் செய்ய எண்ணியிருப்பது இதுதான்.

  தற்போதுள்ள 20 நிமிடத்துக்கொரு முறை தானாக தெருவெங்கும் வேட்டை நாயாக சுற்றி ஒன்றிரண்டு ரொட்டிகளைப் பொறுக்குவத்ற்குப்பதிலாக (இதனால் தேவையில்லாமல் bandwidth வீணாகிறது.) ரொட்டி தயாராக இருப்பவர் தானே மணியடித்து நாயைக் கூப்பிடுவார். இதனால் இருபது நிமிட இடைவெளிகூட காணாமல் போகும். பதிப்பித்த உடனேயே தமிழ்மணத்தில் காட்டமுடியும். அவர் இப்படி தானே தமிழ்மணத்தில் இற்றைப் படுத்தும்போது கூடவே அங்கே ஏற்கனவே இருக்கும் வகைகளில், இது எதன் கீழ் வரும் என்றும் ஒரு சொடுக்கில் சொல்லிவிடுவார். அவ்வளவுதான்.

  இன்னும் மண்டையிலேயே இருக்கிறது, செய்யவில்லை. இதில் சில கேள்விகள் உங்களுக்கு வரலாம், அதையிம் கேட்டு பதிலும் தயாரித்துவைத்திருக்கிறேன்.

  உங்களுக்கு நிரலெழுதி எனக்கு உதவ நேரமும் விருப்பமும் இருக்கிறதா? (php/mysql/javascript அறிவு தேவைப்படும், நானே செய்கிறேனே, உங்களுக்கென்ன?)

  அன்புடன்,
  -காசி

 9. //உங்களுக்கு நிரலெழுதி எனக்கு உதவ நேரமும் விருப்பமும் இருக்கிறதா? (php/mysql/javascript அறிவு தேவைப்படும், நானே செய்கிறேனே, உங்களுக்கென்ன?)//

  ஆஹா காசி. வசமா மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே.

  * விருப்பம் இருக்கிறதா-> ஆம்.
  * நேரம் இருக்கிறதா -> ஏற்படுத்திக் கொள்ளலாம்.
  * php/mysql/javascript அறிவு -> சுத்தமாக கிடையாது 🙁

  அடிப்படையில் நான் ஒரு systems administrator/security analyst. Servers/networks இவற்றுடன் மட்டும் தான் எனக்கு பழக்கம். அது தவிர எனக்கு தேவையான வேலைகளை செய்து முடிப்பதற்கு தேவையான Unix Shell scriptingஉம், Perlஉம் தெரியும்.

  “நானே செய்கிறேனே, உங்களுக்கென்ன?”ன்னு சாதாரணமா கேட்டுட்டீங்களே. இப்பம் என்ன சொல்றது. MySQL மட்டும் ஓகே. உங்களுக்கு உதவனும்னா மத்த ரெண்டையும் கத்துக்கிட்டு மறுபடியும் இன்டெர்வியூவுக்கு வர்ரேன். அல்லது ‘லேசான வேலை’ ஏதாவது இருந்தா இந்த பக்கம் தள்ளி விடுங்க. முயற்சி செய்து பார்க்கிறேன்.

 10. பாலா: tagvertising பற்றிய தகவலுக்கு நன்றி.

  காசி: tagging தமிழுக்கு ஒத்து வராது என்று நீங்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் ஆங்கிலத்துக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.

  உதாரணமாக “சொற்களின் துல்லியமின்மை, பன்மை, புணர்ச்சி விதிகள்” தமிழை விட ஆங்கிலத்தில் கொஞ்சம் தெளிவாக இருப்பதாக தோன்றினாலும் இறுதியில் எந்த tag உபயோகிப்பது என்பது எழுதுபவரின் கையில் தான் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் ஒரே பொருளில் அமைந்த பல வார்த்தைகள் (blog, weblog, journal) இருக்கத் தான் செய்யும்.

  நமக்கென்று ஒரு புதிய முறையை இப்படி உருவாக்குவதால் நீங்கள் சொன்ன குழப்பங்கள் குறையலாம். ஆனால் வருங்காலத்தில் தமிழ் வலைப்பதிவை அறிந்திருக்காத ஒருவர் வேறு தளங்களின் (like technorati) மூலம் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் தேடும் வாய்ப்பு கிடைக்காது அல்லவா.

  (என்னத்தையோ உளறிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். உருப்படியா ஏதாவது ஐடியா வந்துச்சுன்னா சொல்றேன்.)

 11. நவன்,

  நான் சொல்லவந்தது technoratiக்கு மாற்றோ, பதிலியோ அல்ல. இன்னுமொரு முறை. அது இன்றைய நிலைக்கு, தமிழ்மணம் போன்ற தளத்துக்குப் பொருத்தமான ஒன்று. technorati tags தாராளமாக நான் சொன்னதுடன் எந்தக் குழப்பமும் இல்லாமல் இயங்கும். ஆனால் தமிழ்மணம் இப்போதைக்கு அந்த முறையைக் கடைப்பிடிக்காது எண்ணிக்கையும், வலைப்பதிவர்களின் நுட்ப அறிவு/வசதிகளும் ஒத்துவரும்போது technorati tags முறை தானாக பிரபலமாகும். அதை யாரும் தடுக்க முடியாது. I believe in the appropriate technology, not necessarily the latest technology.

 12. காசி,

  நீங்க சொன்னது எனக்கு (முதன் முறையிலேயே) தெளிவாக புரிந்தது. தமிழ்மணத்துக்கு பொருத்தமான முறை என்பதில் முழுவதும் உடன் படுகிறேன்.

  //technorati tags தாராளமாக நான் சொன்னதுடன் எந்தக் குழப்பமும் இல்லாமல் இயங்கும்.// ஏற்கெனவே பெரும்பாலானோர் தமிழ்மணத்துக்காகவே எழுதிட்டிருக்க மாதிரி ஒரு ஃபீலிங்க். அவர்கள் இது சம்பந்தமான நுட்ப அறிவை தேடிப் போவது நடக்குமா என்று தெரியவில்லை. மேலும் technorati tags போன்ற குழப்பங்களும் அவர்களுக்கு தேவைப்படாது. Chinese, Japanese போன்று தமிழும் எல்லா இடத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சொன்னது தான் எனது கருத்து.

  அதே நேரத்தில் இந்த tagging முறையும் ‘meta tags’ போன பாதையில் தவறாக பயன்படுத்துவோரால் வெற்றி பெறாமல் போகவும் கூடும்.

  //I believe in the appropriate technology, not necessarily the latest technology.// நானும் தான்.

  சொல்வது தேவையில்லை என்றாலும் சொல்கிறேன். You are already doing an excellent job and I am sure that you will build many more wonderful services based upon the platform you already have.

 13. //ஏற்கெனவே பெரும்பாலானோர் தமிழ்மணத்துக்காகவே எழுதிட்டிருக்க மாதிரி ஒரு ஃபீலிங்க். //

  இதௌ எனக்குமே நல்லதாகப் படவில்லை. அதனாலேயே சண்டைகளும் சச்சரவுகளும் கூட அனாவசியமாக பெரிதுப்டௌத்தப்படுகின்றன. என்ன செய்வது. multi-polar, multi-lateral, co-existence, personal choice/freedom/liberty இதெல்லாம் நம் சமூகத்தில் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று என் அனுமானம்.

  சும்மா ஒரு கேள்வி. மறுமொழி நிலவரம் காட்டுவடை விட்டுடலாமா?

 14. //ஏற்கெனவே பெரும்பாலானோர் தமிழ்மணத்துக்காகவே எழுதிட்டிருக்க மாதிரி ஒரு ஃபீலிங்க். //

  இது எனக்குமே நல்லதாகப் படவில்லை. அதனாலேயே சண்டைகளும் சச்சரவுகளும் கூட அனாவசியமாக பெரிதுபடுத்தப்படுகின்றன. என்ன செய்வது. multi-polar, multi-lateral, co-existence, personal choice/freedom/liberty இதெல்லாம் நம் சமூகத்தில் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று என் அனுமானம்.

  சும்மா ஒரு கேள்வி. மறுமொழி நிலவரம் காட்டுவதை விட்டுடலாமா?

  (எக்கச்சக்க தட்டுப்பிழை, எனவே இன்னொருமுறை!)

 15. //சும்மா ஒரு கேள்வி. மறுமொழி நிலவரம் காட்டுவதை விட்டுடலாமா?//

  என்னை மாட்டி விட்டு அடி வாங்க வைக்கிறக்கான சதித் திட்டமா? 🙂

  பலருக்கு எழுதும் ஆர்வத்தை தூண்டுகின்ற இந்த ஏற்பாடு இருந்து விட்டு போகட்டுமே. அதனால் எந்த மாற்றமும் வந்து விடும் என்று நான் நம்பவில்லை. எதற்கும் இந்த கேள்வியினை வலைப்பதிவர் மன்றத்தில் கேட்டுப் பாருங்கள்.

 16. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நவன். நானும் வலைப்பதிவர் மன்றத்தில் பதிந்துகொள்கிறேன், மேலும் ஆலோசிப்போம்

  அன்புடன்,
  இர.அருள் குமரன்

Comments are closed.