எரிதங்களின் அகோரத்தாக்குதல் பற்றி சில நாட்களுக்கு முன்பு காசி தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அது தொடர்பாக சில சிந்தனைகள். மின்னஞ்சல்களில் எரிதங்களை அனுப்புவதை விட இன்றைய தேதிக்கு வலைப்பதிவுகளில் எரிதங்களை நுழைப்பது அதிக பயன் தருவதால் இன்னும் சில நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும். பலரும் இதில் ஈடுபட காரணம் பேஜ் ரேங்க் (PageRank) தான். கடந்த வாரம் Google, Yahoo, MSN (புதிய தேடல் இயந்திரத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது) அனைத்தும் இணைந்து இதனை தடுப்பதற்காக தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றம் செய்திருக்கின்றன. rel=”nofollow” என்று ஒரு attribute சேர்ப்பதன் மூலம் இதனை தடுத்த நிறுத்த கூகிள் முடிவு செய்திருப்பதாக கூகிளின் வலைப்பதிவில் செய்தி வந்திருந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே வலைப்பதிக்க பயன்படும் பல மென்பொருட்களுக்கும் இந்த புதிய attributeஐ நுழைக்கும் சொருகு நிரல்கள் வெளிவந்து விட்டன. நியூக்கிளியஸ் உபயோகிப்பவர்கள் பார்க்க: http://www.rakaz.nl/nucleus/item/40 WordPressஇற்கான சொருகு நிரல்: http://alex.halavais.net/news/index.php?p=1021 அனைத்து வலைப்பதிவு சேவைகளும் இந்த புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்தால் விரைவிலேயே மறுமொழிகளில் எரிதங்களை சேர்ப்பதில் ஆதாயமில்லை என்று புரிந்து இதில் ஈடுபடுவோர் சோர்ந்து விடுவர் என்று நம்புவோம். ஏனெனில் எரிதங்களை அனுப்புவோரின் இலக்கு search engineகளின் spiderகள் தானே அன்றி வலைப்பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் அல்ல. PageRank என்னும் ஆதாயம் கிடைக்காத பட்சத்தில் எரிதங்கள் குறையலாம். கூகிள் முன்னின்று மேற்கொள்ளும் இந்த முயற்சி முழுவதுமாக வெற்றியடையும் என்றும் மனது நம்ப மறுக்கிறது. மொத்தத்தில் இந்த கேள்விக்கான விடையில் தான் இந்த யுத்தத்தின் முடிவு இருக்கிறது. Why do they spam me? Because they can. மேலே சொன்ன ஒற்றை வரி தான் இந்த கேளிவிக்கு பொருத்தமான விடையாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த “nofollow tag” போன்ற முயற்சிகள் வெற்றியடையுமா இல்லையா என்பது இன்னும் சில நாட்கள் கழித்து தான் புலனாகும். இப்போதைக்கு Nucleus, WordPress போன்ற மென்பொருட்கள் கொண்டு சொந்த வழங்கிகளில் வலைப்பதிவுகளை நடத்துபவர்கள் எரிதங்கள் புக விடாமல் தடுப்பது ஒன்று தான் வழி. Otherwise they will continue to spam you as long as they can. BlogCMS உபயோகித்த வரை எனக்கு எரிதங்களால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. WordPressக்கு மாறிய பின் இரு முறை எரிதங்களின் தாக்குதல் நடந்தது. ஆனால் அதனை “Block-lists anti-spam measures” என்ற சொருகு நிரல் கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளேன். இந்த சொருகு நிரலை நிறுவிய பின் ஒரு எரிதம் கூட வரவில்லை. WordPress உபயோகிப்பவர்களுக்கு இந்த சொருகு நிரலை தயக்கமின்றி பரிந்துரைக்கிறேன். அடுத்த முறை எரிதங்கள் தாக்கினால் தான் தெரியும் எனது எரிதங்களை எதிர்க்கும் எனது பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையா என்று. இன்னொரு நவன் சொந்தமாக captcha உருவாக்கி இதனை சமாளிக்கிறார். இது தவிர நான் கவனித்த இன்னொரு விசயம். சில மென்பொருட்கள் புதிய பதிவுகளை இணைக்கும் போது http://rpc.pingomatic.com/ போன்ற தளங்களை ping செய்து புதிய பதிவுகள் நிகழ்ந்துள்ளதை அறிவிக்கும். தமிழ் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டுவது போன்று ஆங்கிலத்தில் பல தளங்கள் புதிய பதிவுகளை அறிவிக்கும் வேலையை செய்கின்றன. தமிழ்மனம் செய்வது போன்று இந்த தளங்கள் பதிவுகளை திரட்டுவது கிடையாது. மாறாக வலைப்பதிவுகள் அனுப்பும் ping ஆணைகள் மூலமாக தான் புதிய பதிவுகள் நேர்ந்துள்ளதை தெரிந்து கொள்ளும். எரிதங்களை பரப்பும் பல robotகள் இந்த தளங்களில் புதிய பதிவுகளின் அறிவிப்பு நிகழ்ந்த உடன் சம்பந்த பட்ட வலைப்பதிவிற்கு சென்று எரிதங்களை இணைக்க தொடங்குகிறது. நான் கவனித்த வரையில் பல நேரங்களில் நான் publish செய்த அடுத்த சில நிமிடங்களில் எரிதங்களின் தாக்குதல் தொடங்குகிறது. தமிழ் வலைப்பதிவுகளை இந்த தளங்களுக்கு அறிவிப்பதால் பெரிய இலாபம் ஏதும் இல்லையென்பதால் உங்கள் மென்பொருளில் இந்த செயல்பாட்டினை நிறுத்தி வைக்கலாம். வேறு ஏதும் நினைவுக்கு வந்தாலோ இது தொடர்பாய் புதிய செய்திகள் கிடைக்கப் பெற்றாலோ பகிர்ந்து கொள்கிறேன். அப்புறம் காசி… இந்த சின்னத்திரை, பெரிய திரைன்னு இரண்டுக்குமே தனித்தனி உடுப்பு தைத்து வைத்திருப்பது நன்றாயிருக்கிறது.]]>
என்னுடைய வோர்ட்பிரஸ் தளத்தில் இப்போது தான் Spaminator நிறுவினேன். அதற்குப் பிறகு எரித வரவு குறைந்து போய்விட்டது.
முதலிலேயே SpamWords முறைத் தடுப்பு இருந்தது. ஆனால் குறியீட்டு முறையை மாற்றி அதைத் தாண்டியும் எரிதங்கள் வந்து கொண்டிருந்தது தான் பிரச்சினை. இப்போது இரண்டுமாய்ச் சேர்ந்து ஒரு வழியாய் வேலை செய்கிறது.
செல்வராஜ்,
சில நாட்கள் நானும் spaminator உபயோகித்து பார்த்தேன். ஆனால் அதையும் தாண்டி எரிதங்கள் வந்துக் கொண்டே தான் இருந்தன. http://www.tamba2.org.uk/wordpress/spam/
. எரிதங்களை தடுக்கும் முறைகளை பட்டியிலிட்டிருக்கும் இந்த தளத்தை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நவன், அந்தத் தளத்தைப் பார்த்திருக்கிறேன். அங்கு பார்த்துத் தான் ஸ்பாமினேட்டர் நிறுவினேன். அதன்பிறகு எரிதம் ஒன்றும் வரவில்லை (வந்த ஒன்றை மடக்கு பட்டியலில் சேர்த்து விட்டேன்).
உங்கள் பக்க மாற்றங்கள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாய்த் தலைப்புப் படம் அருமை.
மின்மடல் கொடுக்காவிட்டால் (கருத்துப் பெட்டியில்) தோன்றும் பிழைச்செய்திப் பக்கக் குறியீடு UTF-8ல் இல்லை. அதோடு மீண்டு வந்தால் முன்பு இட்டிருந்தவை மறைந்துவிட்டன. கவனியுங்கள்.
நன்றி செல்வராஜ். இன்னும் முழுவதும் மாற்றங்கள் செய்து முடிக்கவில்லை. மேலும் கடந்த வாரம் WP 1.5(Nightly build)க்கு மாற்றினேன்.
நீங்கள் சொன்ன குறைகளையும் கவனிக்கிறேன்.