“In Italy mum’s affection for her children is measured in calories” – இத்தாலிய நண்பன் ஒருவன் சொன்னது.
‘தனது தாய் அன்பு காட்ட வேண்டாம். ஒரு பார்வையாவது பார்க்கமாட்டாளா?’ என்ற 16 வயது குழந்தையின் ஆதங்கத்தை ‘Stinking Cigar‘இல் பதிவு செய்திருக்கிறார் அருண் வைத்யநாதன். பலர் ஏற்கெனவே சொன்னது போல் படம் நெடுக சின்ன சின்ன விசயங்களை பார்த்துப் பார்த்து செய்திருப்பது தெரிகிறது.
படத்தில் நான் இரசித்த சில விசயங்கள்:
ஊஞ்சலின் சங்கிலியை வருடிக் கொண்டே பழைய நியாபகங்களில் மூழ்கத் தொடங்கும் ஜென்னியின் முகத்தில் சில நொடிகள் எட்டிப் பார்க்கும் innocence கலந்த நளினம், குச்சியால் தரையில் தேய்க்கும் போதும், காலி பிளாஸ்டிக் பாட்டில் உருண்டோடும் போதும் காட்சிக்கு பலம் சேர்க்கும் இயல்பான ஒலிப்பதிவு, interludeஆக(வே) படம் நெடுக ஒலிக்கும் அந்த அற்புதமான இசை என்று இரசித்த காட்சிகள் நிறையவே உண்டு. ஃப்ரிஜ்ஜில் சாப்பாடு இருக்கிறது என்று சொல்லி விட்டு போகும் அம்மாவை ஏக்கம், வெறுப்பு எல்லாம் கலந்திருக்க ஒரு வெற்று பார்வை பார்க்கும் ஜெனியின் நடிப்பு டைரக்டரின் வெற்றி.
படத்தில் ஒரே குறையாக எனக்கு பட்டது டப்பிங்க் தான். சில நேரங்களில் படத்தி்ன் intensityக்கு தகுந்தாற்போல் உணர்ச்சியுடன் வசனங்கள் உச்சரிக்கப் படவில்லையோ என்று தோன்றியது. அதே மாதிரி ஒலிப்பதிவிலும் இன்னும் கொஞ்சம் கவணம் செலுத்தியிருக்கலாமோ?
ஜெனிஃப்ர் வீட்டிற்குள் நுழைந்த பின் நடக்கும் கழியும் கடைசி இரண்டு நிமிடங்களில் மட்டும் வசனத்தை வைத்துக் கொண்டு அதற்கு முன் வசனமே இல்லாமல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்குமோ?. க்ளைமாக்ஸில் அந்த ‘hourglass‘ அருமையான directorial touch (அது தான் படத்தின் ஹைலைட்டே). அப்போது ஜெனியின் மனசுக்குள் ஒலிக்கும் அந்த இரண்டு வசனங்களுடன், ‘போய் வருகிறேன்’ என்று அம்மா சொல்வதும் மட்டுமே போதுமானதாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
கவிதை போன்ற இந்தப் படம் எட்டு நிமிடத்திற்குள் முடிந்து விட்டது. ஆனால் இதனை செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களின் உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்று யோசிக்கும் அருணின் தாகமும் தேடலும் புரிகிறது.
இவரின் முந்தைய படங்களை நான் பார்த்தில்லை. But this movie is clearly a feather in his cap. Well done Arun. வரும் காலங்களிலும் உங்கள் முயற்சிகள் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
(படம் பார்த்து முடிந்ததும் சட்டென்று நினைவுக்க வந்த சிறு வயது நிகழ்வு)
ஒவ்வொரு பரிட்சைக்கும் முந்தின நாள் “என்னடா எப்படி படிச்சிருக்கே? ஒழுங்கா படிச்சியா? எங்கே இந்தக் கேள்விக்கு பதில் சொல் பார்போம்.” என்று எனது அம்மா அல்லது சித்தி கேட்டு சரியாக படிக்காத பகுதிகளை உடன் இருந்து மீண்டும் படிக்க வைப்பது வழக்கம். ஆறாவது படிக்கும் போதென்று நினைக்கிறேன். தேர்வுக்கு முந்தின நாள் வீட்டிற்கு விருந்தினர் வந்து விட என்னை கவனிப்பதை விட்டு விட்டு அனைவரும் வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டே செல்ல, எனக்கு படிப்பதற்கு ஓடவேயில்லை. முட்டிக் கொண்டு அழுகை வருகிறது. என்னை கவனிக்காமல் இப்படி சம்பந்தமில்லாத விசயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்களே. யாராவது என்னையும் கொஞ்சம் பார்க்க மாட்டார்களா என்று கோபம். எதையாவது போட்டு உடைத்தாவது அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று தோன்றியது
ஒரு நாளைக்கே அப்படி. 🙁
அன்புள்ள நவன்,
தங்களின் விமர்சனத்திற்கு மிக நன்றி.
கூடிய விரைவில், எனது அத்தனைக் குறும்படங்களுமே வலையேற்றப்படும்.
தற்போது கூட, எனது NOOSE திரைப்படம், எனது இணையத்தளத்திலேயே
கிடைக்கிறது. மீண்டும் நன்றிகள் பல!
– அருண் வைத்யநாதன்