பாகம் 1 2 3 4 5
உங்களுக்கு கணினியை தாக்கும் *வைரஸ்* பற்றி தெரியுமா?
‘இதோடா வந்துட்டான்…. வைரஸ் பத்தி சொல்றதுக்கு. கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிச்சதிலிருந்து நான் பார்க்காதா வைரஸா. நான் உபயோகிக்காத anti-virusஆ’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
சரி சரி…. வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். நான் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்காத ஸ்பைவேர் (spyware), அட்வேர் (adware), ட்ரோஜன் ஹோர்ஸ் (trojan horse) அப்புறம் ப்ரௌஸர் ஹைஜேக் (browser hijack) போன்ற மால்வேர் (malware) வகையைச் சேர்ந்த பிற மென்பொருட்களை பத்தி தான் சொல்லவிருக்கிறேன்.
யாரோ “இதெல்லாம் என்ன ஸாஃப்ட்வேர்? எங்கே டௌன்லோட் செய்யலாம்?” என்று கேட்ட மாதிரி சத்தம் கேட்டது. என்னது? யாருமில்லையா? நல்ல வேளை. 🙂
தயவது செய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். இன்றைய தேதிக்கு வைரஸ் எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதே அளவுக்கான பிரச்சனைகளை நான் மேலே குறிப்பிட்ட இந்த (கெட்ட)வகை மென்பொருள்களும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வகை மென்பொருள் பற்றி இது வரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள்.
ஸ்பைவேர் (spyware)
இந்த வகை மென்பொருள் உங்களுக்கு தெரியாத ஒரு மூன்றாம் மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒற்றர் வேலை பார்த்து உங்களை பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பக்கூடியவை.
எந்த மாதிரியான விபரங்களை அனுப்பி வைக்கும்? இதற்கு யாரிடமும் நேரிடையான பதில் கிடையாது. ஏனென்றால் இந்த ஸ்பைவேர் என்பது உங்கள் கணினிக்குள் வந்து விட்டால் அது தான் உங்கள்
பிக் பிரதர். நீங்கள் எந்த மாதிரியான வலைத்தளங்களுக்கு செல்கிறீர்கள் என்பதிலிருந்து நீங்கள் இனையம் மூலம் வாங்கும் பொருட்கள் வரை அனைத்து விபரங்களையும் இது சேகரித்து தன் எஜமானருக்கு அனுப்பிவிடும்.
சரி இதை வைத்து அந்த நிறுவனம் என்ன செய்யும் என்கிறீர்களா. இந்த விபரங்களை அடங்கிய டேடாபேஸ்(database) என்பது எந்த ஒரு வியாபார நிறுவனத்திற்கும் கிடைத்தால் அல்வா சாப்பிட்ட மாதிரியல்லவா இருக்கும். பின்னே.. உங்கள் விருப்பங்கள் தெரிந்தால் அதை வைத்து நீங்கள் இனையத்தில் இனையும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்த மாதிரியான விளம்பரங்களும் நீங்கள் கேட்காமலேயே எரிதமும் (spam) உங்களுக்கு அனுப்பி வைத்து உங்களை தினறடித்து விடமாட்டார்கள்?
ஒன்று மட்டும் உண்மை. நியாமாக வியாபாரம் செய்யம் எவரும் எரிதம் அனுப்பவதில்லை. இதில் ஈடுபடும் அநேகர் திருடர்கள் தான். ஸ்பேம் மெஸ்ஸேஜ் மூலம் உங்களுக்கு வந்த விளம்பரத்தை நம்பி ஏதாவது வாங்குவதற்காக உங்கள் க்ரெடிட் கார்டு விபரங்களை கொடுத்தீர்களானால் தொலைந்தீர்கள்.
அது மட்டும் அல்ல. பல ஸ்பைவேர் மென்பொருட்கள் உங்கள் கணினியில் நீங்கள் நிறுவி விட்டால் அதற்கு பிறகு நீங்கள் அதை நீக்குவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தாக வேண்டும். இந்த ஸ்பைவேர் உங்கள் கணினியிலிருந்து நீங்கள் நீக்க இயலாமல் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யும் கோக்கு மாக்கு வேலைகளால் பல நேரங்களில் உங்கள் கணினி சரி வர இயங்காது. அப்புறம் என்ன விண்டோஸின் BSD தான் (‘Windows Blue Screen of Death’). காலமெல்லாம் நீங்கள் புலம்பிட்டிருக்க வேண்டியது தான்.
Gator மற்றும் Hotbar. இவையிரண்டும் மிகவும் பிரபலமான ஸ்பைவேர்.
அட்வேர் (adware)
நீங்கள் உபயோகிக்கும் மென்பொருள் உங்கள் கணினியின் திரையில் விளம்பரம் செய்கிறதா? அப்படியானால் நீங்கள் உபயோகிக்கும் இந்த மென்பொருள் அட்வேர் வகையை சார்ந்தது.
"ஆனால் நான் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து எனது கணினியில் நிறுவும் போதே எனக்கு தெரியும் இது ஓர் அட்வேர் என்று. குறிப்பிட்ட மென்பொருள் அளிக்கும் பயன்கள் பிடித்திருக்கிறது. மேலும் இந்த விளம்பரங்களை நான் ஒன்றும் தொந்திரவாக கருதவில்லை. டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே திரைப்படத்தையும் பார்ப்பவர்கள் தானே நாமெல்லாம். பிறகு எப்படி இதனை பிரச்சனை என்று சொல்வது" என்று சிலர் கூறலாம்.
நியாயம் தான். ஒரு மென்பொருளை உங்களுக்கு இலவசமாக வழங்குபவர் அந்த
மென்பொருளின் மூலம் பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக இது போன்ற விளம்பரங்கள் வரச் செய்வது நியாமாகப் படலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. அனேகமான அட்வேர் வகை மென்பொருள்கள் ஸ்பைவேர்’ஆகவும் இருப்பது தான் தான்.
ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan Horse)
இது கொஞ்சம் இண்டெரஸ்டிங்கான விசயம். என்னெங்கிறீங்களா. இந்த ட்ரோஜன் ஹோர்ஸ் என்பது வேறொரு பிரபலமான மென்பொருளின் பெயரில் வருவது. பார்ப்பதற்கு வேறொரு உபயோகமான மென்பொருள் மாதிரி இருப்பதால் நாமும் இதை நம்பி நமது கணினியில் சேர்த்துக்கொள்வேம். ஆனால் இது உபயோகமாக எப்படி இருக்கும். இதை இயக்கினால் தெரியும் தான் தெரியும் இது எப்பேர்பட்ட ‘கேடி’ என்று.
உதாரணமா back orifice என்பது system administratorகளுக்கான ஒரு உபயோகமான மென்பொருள். அதே பேரில் ஒரு ட்ரோஜன் ஹோர்ஸ் வந்து அதை நானும் பதிவிறக்கம் செய்து அதை உபயோகிக்க படாத பாடு பட்டது தனி கதை.
ப்ரௌசர் ஹைஜேக் (Browser Hijack)
இது தான் இருக்கதில்லேயே காமெடியான விசயம். இந்த ப்ரௌசர் ஹைஜேக் ஆகி நன்பர்கள் பாதிக்கப் பட்ட போது அவங்க மூஞ்சியை பார்க்க வேண்டுமே 🙂 .
நீங்கள் உங்கள் கணினியில் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறக்கிறீர்கள். வழக்கமாக நீங்கள் வாசிக்கும் ஒரு வலைப்பதிவிற்கு போக நினைத்தால் என்ன இது இது வேறு ஏதோ ஒரு தளத்திற்கு செல்கிறது.
"
அய்யோ இந்த மாதிரி ஸைட்டெல்லாம் நான் பார்க்கிறதே இல்லை. சை…. அபச்சாரம். சரி சரி… வேறு ஏதாவது தள முகவரி குடுத்து பார்ப்போம். அய்யோ… என்ன இது இதுவும் தெரிய மாட்டேன் என்கிறது. அய்யோ மறுபடியும் அதே ஸைட்டா."
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் நீங்களும் என்ன்வெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள் ஆனால் உங்கள் ப்ரௌசர் உங்களை நீங்கள் விரும்பும் இடத்திற்கு போக விடாமல் அதுவா வேறொரு இடத்திற்கு அழைத்து செல்கிறது. சரி தான் உங்கள் ப்ரௌசரை யாரோ ஹைஜேக் செய்திட்டாங்க. காந்தஹாரில் போய் இறங்கிய இந்திய விமான பயனிகள் மாதிரி நீங்களும் சில போராட்டங்களுக்கு பிறகு விடுதலை பெற முடியும்.
யோவ்… போதும்யா… ரொம்ப படம் காட்டேதே. இதெல்லாம் இப்பம் யார் கேட்டா. கம்புயூட்டரை பத்திரமா வைச்சிக்கிறது எப்படிங்கிறதை பத்தி மட்டும் சொல்லு.
அய்யா, கோவப்படாதீங்க. அதை பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி. ஆனா ஏற்கெனவே இந்த பதிவு கொஞ்சம் பெரிதாக அமைந்துவிட்டதால் இது சீக்கிரமே அடுத்த பதிவில் தொடரும்….
]]>
அட, அட, இன்னொரு நவனும் வந்தாச்சா? இந்தப் பேரில்தான் கொஞ்சம் குழப்பம் இல்லாமல் இருந்தது. அதுக்கும் வேட்டா? 😆
சும்மா தமாஷ்தான். உங்கள் பதிவை இன்னிக்குத்தான் நல்லாப் ‘பாத்தேன்’, இன்னும் படிக்கலை. படிக்க நிற்ற்ற்றைய இருக்கும் போலத்தெரியுது. நல்லா எழுதுவீங்கன்னு பட்சி சொல்லுது (அதாவது கொஞ்சம் டெக்னிக்கலான எழுத்து) இன்னொரு முறை ஆர அமரப் படிச்சுட்டு சொல்றேன்.
வர்ட்டா..
Pingback: தாமிரபரணித் தென்றல் » உங்கள் கணினி பாதுகாப்பானதா? - பாகம் 2