நான் இப்படி கோபமாய் இருக்கேன்னு யாரவது நிஜமாகவே போய் என் அண்ணனிடம் சொல்லி தொலைத்து விடாதீர்கள். அப்படியே நீங்க முயற்சி செய்தாலும் முடியாது. ஏனென்றால் எனக்கு எந்த அண்ணனும் கிடையாது. நான் தான் வீட்டிலே தலைச்சான் பிள்ளையாக்கும். அப்படியானால் எந்த பெரியண்ணாவை பத்தி சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? ஐயோ சத்தியமா நம்ம புரட்சி கலைஞரை பத்தி சொல்லலைங்க. இது நம்ம ஆங்கில அண்ணாச்சி. BIG BROTHER. இந்த பாழாய் போன ரியாலிடி TV show, "BIG BROTHER"ஐ பற்றி தான் சொல்லிட்டிருக்கேன். இது போன்ற "ரியாலிடி டிவி" (reality tv) நிகழ்ச்சிகளை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த பிரகஸ்பதி யாருன்னு தெரியலை. எந்த நேரத்தில் எவர் மூளையில் இந்த அற்புதமான idea உதித்ததோ தெரியவில்லை, என்னை மாதிரி அப்பாவிகள் படாத பாடு பட வேண்டி இருக்கு. இந்த Bigbrother பத்தி தெரியாதவர்களுக்காக அதை பத்தி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். மொத்தம் 12 பேரை கொண்டு போய் ஒரு பெரிய வீட்டுக்குள் போட்டு அடைத்து விடுவார்கள். 71 நாட்கள் அவர்கள் கொட்டாவி விடுவதிலிருந்து கெட்ட விஷயங்கள் பேசுவது வரை 24 மணி நேரமும் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வார்கள். நம்மை (என்னை) மாதிரி பொழுது போகாதவர்கள் அதை பார்த்து விட்டு ஓட்டு போட்டு பிடிக்காதவரை வெளியேற்றுவார்கள். வாரம் ஒருவரை வெளியேற்றியபின் கடைசியில் மீதம் இருப்பவருக்கு வெற்றி பெற்றதற்கு பரிசாக £1,00,000 வரை கிடைக்கும். அதுக்கு நடுவிலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பல் துலக்குவதிலிருந்து ஆரம்பித்து அன்றாட செயல்கள் அனைத்தையும் "Big brother" வீட்டிலிருந்து கேமிராக்கள் படம் பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு இரசிகர் கூட்டம். நம்ம ராதிகாவோட சித்தி எல்லாம் வேஸ்ட் இதனுடன் கம்பேர் செய்தால். இந்த திங்கட்கிழமை எனது அலுவலக நண்பன் ஒருவன் வழக்கத்தை விட மிகவும் வருத்தமாக இருந்தான். சரி வழக்கம் போலே girl friend கூட சண்டையாக இருக்கும். இவனிடம் இப்பொழுது பேச்சு குடுத்தால் அவ்வளவு தான். ஒரு வேளையும் நடக்கது என்று மெதுவா அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செயகையில் மாட்டி கொண்டேன். நான் எதிர் பார்க்கவேயில்லை. இப்படி கிட்டனை (‘kitten’ஐ) வெளியேற்றிவிடுவார்கள் என்று வாயை திறந்தான். நானும் ஏதோ "பூனையை" பற்றி சொல்கிறான் என்று நினைத்து பதிலுக்கு ஏதேதோ என் பங்கிற்கு உளறி வைத்தேன். அவனுடன் kitten சம்பந்தமாக 10 நிமிடம் பேசிய பிறகு தான் புரிந்தது அவன் Big Brother நிகழ்ச்சியிலிருந்து Kitten என்ற பெண் வெளியேற்றபட்டதை பற்றி பேசுகிறானென்று. இந்த மாதிரி ஆட்களிடம் எனக்கும் கொஞ்சம் பொது அறிவு இருப்பதாக காட்டவேண்டி இந்த அறுவையை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. சரி இது ஒரு 2 மாசம் தானே அப்புறம் நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது. Big brother இல்லையென்றாலும் "Pop Idol", "I’m A Celebrity…Get Me Out Of Here!", "Celebrity Big Brother", "Saloon", "Paradise Island" என்று வருடம் பூராவும் இது போல் ஏதாவது ஒரு ரியாலிடி டிவி ஷோ வந்து கொண்டு தான் இருக்கிறது. எங்க ஓரு பக்கம் சொல்லுவாங்க, "கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை" அப்படின்னு. அது மாதிரி இதோ "Hells Kitchen" ஆரம்பித்து விட்டது. அதை முதலில் பார்க்க வேண்டும். நாளைக்கு அலுவலகத்தில் நண்பர்களுடன் பேச வேண்டுமே!:twisted: ]]>
Hi Navan
I’m having the same problem for the last 3 years!! But Thank God, the current team with who I’m working doesn’t show interest on these!!
I think this will be a big hit, if someone do the same in India…
Hats off to you. Keep the good work..