பின்னூட்டங்களில் எரிதங்கள்

ரிதங்களின் அகோரத்தாக்குதல் பற்றி சில நாட்களுக்கு முன்பு காசி தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அது தொடர்பாக சில சிந்தனைகள்.

மின்னஞ்சல்களில் எரிதங்களை அனுப்புவதை விட இன்றைய தேதிக்கு வலைப்பதிவுகளில் எரிதங்களை நுழைப்பது அதிக பயன் தருவதால் இன்னும் சில நாட்களுக்கு இந்த போராட்டம் தொடரும்.

பலரும் இதில் ஈடுபட காரணம் பேஜ் ரேங்க் (PageRank) தான். கடந்த வாரம் Google, Yahoo, MSN (புதிய தேடல் இயந்திரத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது) அனைத்தும் இணைந்து இதனை தடுப்பதற்காக தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றம் செய்திருக்கின்றன. rel=”nofollow” என்று ஒரு attribute சேர்ப்பதன் மூலம் இதனை தடுத்த நிறுத்த கூகிள் முடிவு செய்திருப்பதாக கூகிளின் வலைப்பதிவில் செய்தி வந்திருந்தது.

Continue reading

இந்த நாள்

வேலைப்பளு குறைவாக இருக்கும் சில நாட்களில் என்ன செய்றதுன்னு தெரியாம தலைமுடியை பிய்க்கத் தோனும். வேறு சில நாட்கள் மதிய உணவுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் கழியும். இன்று அப்படி ஒரு நாள்.

Continue reading

புதிய அவதார்

இந்த வலைப்பதிவில் Gravatar சொருகு நிரலை நிறுவியுள்ளேன். Gravatar கணக்கு உள்ளவர்கள் மறுமொழி அளிக்கும் போது இனி அவர்கள் எடுக்கும் அவதாரமும் படமாய் தெரியும்.

மேலதிக விபரங்களுக்கு பார்க்க: Gravatar website @ http://gravatar.com/

கீழே உள்ள மறுமொழியில் தெரிவது என்னுடைய Gravatar. (என்ன கண்றாவி படம்டா இதுன்னு நீங்க சொல்றது கேட்குது. அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க.)

Picasa 2 launched

கூகிள் சமீபத்தில் கையகப்படுத்திய பிகாஸா(Picasa) வின் புதிய வெளியீடு இன்று வெளிவந்துள்ளது.

பிகாஸா பற்றி அறிந்திராதவர்களுக்கு: கணினியில் படங்களை ஒருங்கு படுத்தி சேமிப்பதற்கும், படங்களை எடிட் செய்வதற்கும், படங்களின் தரத்தை கூட்டுவதற்குமான ஒரு மென்பொருள் இது.

மேலும் புகைப்படங்களை எடிட் செய்யவும், படங்களை குறுந்தகடுகளில் பதிவு செய்யவும் முடியும். பிகாஸா கொண்டு உருவாக்கிய ஒரு கொலாஜ் இங்கே

பிகாஸா மூலமாக உங்கள் வலைப்பதிவுகளுக்கு படங்களை அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.