முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்

இத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.

முரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.

சகிப்பு vs கோபம்

நம் கூடவே இருப்பவர்கள் சில சமயங்களில் "இவனக்கு எங்கே தெரிய போகிறது" என்று நினைத்தோ அல்லது "இதை கண்டுபிடிக்கும் அளவிற்கு இவனுக்கு எங்கே திறமை இருக்கிறது" என்று நினைத்தோ சில காரியங்களை செய்யும் போது முன்பெல்லாம் கெட்ட கோபம் வரும் எனக்கு. அது சரி கோபத்தில் நல்ல கோபம் என்று இருக்கிறதா என்ன?

எந்த வகையிலாவது அவர்கள் செய்த துரோகத்திற்கு பாடம் புகட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் செயவது எனக்கு தெரியாமல் இல்லை என்று அவர்களுக்கு தெரியவைப்பதற்காகவாவது முயல்வேன்.

ஆனால் இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. காலம் கற்றுக்கொடுத்த பாடங்கள், மனதிற்கு அமைதியை ஓரளவு வழங்கியிருக்கிறது. யார் என்ன செய்தாலும் மனசுக்குள் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்கும் வந்துவிட்டதாய் தான் தோன்றுகிறது. அவர்கள் அவ்வாறு செய்ய காரணமான சூழ்நிலையை சிந்திக்க முடிகிறது. ஆனாலும் ஏன் என்னிடம் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

விஷயம் என்னான்னு சொன்னா புரிஞ்சுக்க போறேன். அதுக்கு எதுக்கு ஆயிரம் பொய் சொல்லனும்.

பின் குறிப்பு-1: ஆனாலும் இந்த கூடவே பிறந்த கோபம் அப்பப்பம் வந்து இந்த மாதிரி கிறுக்க வைத்து விடுகிறது.

பின் குறிப்பு-2: Sorry. நல்ல கோபம்-கெட்ட கோபம் என்று புளிச்சு போன ஜோக் சொன்னதற்கு .

நியூக்கிளியஸ்

நியூக்கிளியஸ் உபயோகித்து ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேனே தவிர தமிழ் எழுத்துருவங்களை சரியாக தெரிய வைப்பதற்கு stylesheets மற்றும் டெம்ப்ளேட் எல்லாம் இன்னமும் சரி செய்யவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் stylesheets எல்லாம் சரி செய்ய முடிந்தது.

கோவிந்தா கோவிந்தா

ஏரத்தாள 3000 வலைப்பதிவுகளுக்கு இது வரை அளித்து வந்த சேவையை ஒரே நாளில் நிறுத்தியுள்ளது weblogs.com. இது சரியா தவறா என்று இனையத்தில் பல்வேறான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது.

எனக்கு தெரிந்தவரை இது போன்று இலவச சேவை அளித்து வரும் நிறுவனங்கள்
எதுவும் தொடர்ந்த இடர்பாடில்லாத சேவைக்கு எந்த ஒரு உத்திரவாதமும்
அளிப்பதில்லை. எந்த நேரத்திலும் தங்கள் பதிவுகளை இழக்க நேரிடும் அபாயம்
உள்ளது என்பதை இது போன்ற இலவச சேவைகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டியதை இந்த செய்தி மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திகிறது.

அதற்காக இலவச சேவைகள் எதையுமே உபயோகிக்க
கூடாது என்று அர்த்தமில்லை. இலவச சேவையோ இல்லையோ உங்கள் வளை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவைகளை அவ்வப்போது பாதுகாப்பான இடத்தில் பின்சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் பாதிக்கபட்ட 3000 weblogs.com வாடிக்கையாளர்களில் இது வரை 158 பேர் மற்றுமே தங்கள் பதிவுகளை திருப்பி தருமாறு வேண்டியிருக்கிறார்கள். 3000 வளைப்பதிவுகளில் ஆர்வத்தோடு வளை பதித்து வந்தவர்கள் வெறும் 158 நபர்கள் மட்டும் தானா? அல்லது பெறும்பாலானோர் ஏற்கெனவே backup எடுத்திருந்தார்களா? தெரியவில்லை.

யாஹூ

யாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. "அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே!" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு.

Continue reading “யாஹூ”

இங்கேயும் ஒரு தேர்தல்

இங்கே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நம்ம ஊர் பஞ்சாயத்து தேர்தல் மாதிரியான local bodies election இது.

இலண்டனில் கென் லிவிங்ஸ்டன் மறுபடியும் மேயராக வந்திருகிறார். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் பிரதமர் டோனி ப்ளேரின் தெழிலாளர் கட்சிக்கு (Labour Party) இந்த தேர்தல் தேர்தல் முடிவுகள் மரண அடியாக அமைந்திருக்கிறது. கென் லிவிங்ஸ்டனின் இந்த வெற்றி கூட மிக குறைவான் வாக்குகள் வித்தியாசத்திலேயே அமைந்திருக்கிறது.

முக்கியமாக நியூ காஸில் (New Castle), லீட்ஸ் (Leeds) போன்ற நகரங்கள் இக்கட்சிக்கு எப்பொழுதுமே ஒரு கோட்டையை போன்று பலமான இடங்கள். இந்த முறை இந்த இடங்களை கூட லேபர் பார்ட்டியினால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

அரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கைகளும்,ஈராக் தேர்தலில் இங்கிலாந்தின் பங்களிப்பே இந்த தோல்விக்கு பிரதான காரணமாக கூறுகின்றனர்.

அப்புறம் முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன புள்ளி விபரம். இலண்டனில் இந்த முறை 37% ஓட்டு பதிவாகியுள்ளது . சென்ற மேயர் தேர்தலின் போது இது வெறும் 33.5% தானாம். அனைத்து நாட்டு மக்களுமே இப்படி தானோ. எந்த நாட்டிலாவது 80%-90% polling நடந்திருக்கிறாதா தெரியவில்லை.

எவன்டா அது பெரியண்ணா

தலைப்பை பார்த்து ஏதோ தெலுங்கு டப்பிங் படத்திற்கு விமர்சணம் என்று நினைத்து விடாதீர்கள். ஏற்கெனவே நான் ஏக கடுப்பிலே இருக்கேன் இந்த பெரியண்ணாவினால்.

இவன் தொல்லை தாங்க முடியலை. போன வருஷத்தை நினைத்து பார்த்தால் இந்த வருஷம் இவன் தொல்லை எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் தாங்க முடியலை. இதுக்கெல்லாம் காரணமானவன் மட்டும என் கையிலே கிடைக்கட்டும் அன்னைக்கு இருக்கு ஒரு பெரிய பஞ்சாயத்து.

Continue reading “எவன்டா அது பெரியண்ணா”

உனக்கு வேணும்டா இது

எனக்கே கேவலமா இருக்கு. வடிவேல் சொல்ற மாதிரி என்னை பார்த்து நானே "உனக்கு வேணும்டா இது. உனக்கு வேணும்" என்று புலம்பி கொண்டிருக்கிண்றேன். "ஏன்டா நல்லா தானடா இருந்தே? ஏன் திடீர்னு இப்படி ஆகிட்டே?" என்று கண்ணாடி என்னை பார்த்து கேட்பது தெரிகிறது.

பெரிய மனிதன் மாதிரி வலையில் பதிய ஆரம்பித்து விட்டு இப்படி "வெறும் கடையை" திறந்து வைத்திருப்பதற்கு தான் கேவலமா இருக்கு. சும்மா ஒரு வேகத்தில் வலை பதிய ஆரம்பித்துவிட்டேன்.

நான் எப்பொழுதுமே இப்படி தான். ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசிப்பது என்ற பழக்கமே கிடையாது. எதிலாவது காலை விட்டு விட்டு திரு திருவென முழிப்பதே வாடிக்கையாகிவிட்டது. ஏதோ எல்லாரும் வலை பதிவு போடுகின்றார்களே என்று நானும் ஒன்றை ஆரம்பித்து விட்டேன். ஆனா எதை பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை.

முதலில் என்னவெல்லாமோ எழுதலாம் என்று கை பரபரத்தது. நெடுங்காலமாய் நன்பர்களோடு உட்கார்ந்து பேசிய விடயங்கள் பலவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன். சமுதாயம், உளவிவியல், அறிவியல், ஆண்மீகம், அரசியல், வாழ்க்கை என்று எழுதுவதற்கு விடயங்களா இல்லை. ஆனால் எழுதுவதற்கு தான் கை ஓட மாட்டேன் என்கிறது. குணா கமல் மாதிரி "அதை எழுதனும்னு உட்கார்ந்தா வார்த்தை தான் வர மாட்டேங்குது".

ஏன் இந்த குழப்பம்? நினைத்து பார்க்கையில் இந்த குழப்பம் என் வாழ்க்கையில் அனைத்து கால கட்டத்திலும் என்னை தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

வீட்டிற்கோ, நண்பர்களுக்கோ கடிதம் கூட இது வரை எழுதியதில்லை. ஏன் personal E-Mails எழுதவது கூட எனக்குக கடினமான விடயம் தான். கடிதம் எழுத உட்கார்ந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகு அதற்கு பதிலாக தொலைபேசி மூலமாக பேசி விடலாம் என்று பல முறை பேசியிருக்கிறேன். இவ்வளவு ஏன்? எழுதிய கடிததை தபாலில் சேர்க்காமல் கையிலேயே வைத்திருந்து பிறகு அந்த நண்பரை நேரில் சந்திக்கும் போது கையில் கொடுத்திருக்கிறன்.

சரி. இப்போது என்ன தான் செய்வதாக உத்தேசம். சத்தம் போடாம இப்படி கிறுக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்திவிடலாமா? ஆகா நல்லா இருக்கே. கிறுக்க தான் ஆரம்பித்தாகிவிட்டதே. சிறு பிள்ளை போல் கிறுக்கி தள்ளுவோம். இன்னும் சில நாட்களுக்குள் தெளிவாக இது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று தெரிந்துவிடாதா என்ன?

ஆனால் அதற்கு தினமும் ஏதாவது எழுதி பழக வேண்டும். மேலும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.

சித்திரமும் கை பழக்கம் தானே.

அந்த காலத்தில்

என் தம்பி இந்த வருஷம் +2 எழுதிருந்தான். போன வாரம் ரிசல்ட் வந்து பார்த்தால் 1101 மார்க் எடுத்திருக்கான். டேய் நல்ல மார்க்குடா. அடுத்து என்ன படிக்கலாம்னு இருக்கேன்னு கேட்டால், இது ரொம்ப கம்மியான மார்க் engineering, medical! எதுவும் கிடைக்காது அப்படிங்காங்க.

Continue reading “அந்த காலத்தில்”

பிள்ளையார் சுழி

கடந்த ஒரு வாரமாக நான் வாசிக்க நேரிட்ட சில இனைய பக்கங்களின் பாதிப்பு தான் இது. சென்ற வாரம் பொழுது போகாத ஒரு சனிக்கிழமை அன்று நவன் என்ற எனது புனைப்பெயரில் பிரபலமான தமிழர்கள் எவரேனும் உள்ளனரா என்று கூகிள் இனைய தளத்தின் மூலமாக தேடினேன்.

அப்போது தான் இந்த இனைய பக்கத்தினை பார்க்க நேரிட்டது http://navan.jokealot.net/index.php?m=200404#post-111. ஆஹா! நம்மை போலவே ஒருவர் வெளி நாட்டுக்கு வந்து நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை ‘நவன்’ என்று மாற்றி வைத்துள்ளதை நினைத்து வியந்த அதே வேளையில் தமிழில் படைக்கப்பட்டுள்ள பல வலைப்பூக்களுக்கு (weblogs) அது வழி காட்டியது. அதன் விளைவு (மற்றும் எனது ஆர்வக்கோளாறு தான் இந்த கிறுக்கல்.

Continue reading “பிள்ளையார் சுழி”