Thamiraparani Thendral

உள்ளேன் ஐயா!

MK signs attendance register in Assembly

பள்ளிக்கூடத்துல (ப்ராக்ஸி) அட்டென்டென்ஸ் கொடுக்கிற மாதிரில்ல இருக்கு இது.

ரொம்ப நாளா லோக்கல் அரசியல் செய்திகளை பார்க்காமல் இருந்துட்டு இன்னைக்கு பார்த்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருந்துச்சு. இதுக்கு முன்னாடி இந்தியாவின் எந்த சட்டமன்றத்திலாவது இது மாதிரி நடந்திருக்கா? யாராவது விசயம் தெரிஞ்சவங்க சொன்னா என்னோட மண்டை கொடச்சல் கொஞ்சம் நிக்கும். (ஹூம்.. இது என்ன டெஸ்ட் போட்டியில் 1000 ரன் அடிக்கிற மாதிரி ரெகார்டா? சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த!) சும்மா கொஞ்சம் general knowdgeஐ வளர்த்துக்கலாமேன்னு தான்.

சட்டமன்றத்து போய் எதிர்த்தால உட்கார்ந்து விவாதங்களில் கலந்துக்கலைன்னா பதவியை ராஜினாமாவாது செய்திருக்கலாமே? என்னத்தை சொல்ல… :(


Posted by நவன் பகவதி on March 16th, 2005 :: Filed under பொது

இன்னுமொரு விக்கி

தமிழ் மொழியில் ஏற்கெனவே சில விக்கிகள் இயங்கி வருவதை அறிந்திருப்பீர்கள். விக்கி என்பது ஒரு கட்டுப்பாடற்ற இணையதள வடிவம்.

விக்கி பற்றி அறிந்திராதவர்களுக்காக:

விக்கி என்பது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு இணைய தள வடிவம். விக்கி கொண்டு தகவல்களை பதித்து வைக்கும் போது ஒருவர் எழுதியதில் இருக்கும் பிழைகளை இன்னொருவர் திருத்துவதோ அல்லது அதனை மேம்படுத்துவதோ சாத்தியமாகிறது. மேலும் சிறு சிறு பதிவுகளாக கட்டப்படும் இத்தகைய தளங்கள் நாளடைவில் என்சைக்ளோபீடியோக்களை போல ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையை எட்டும் சாத்தியம் உள்ளது.

தமிழ் மொழியில் இயங்கும் சில விக்கிகள்:

  • தமிழ் லினக்ஸ் விக்கி
    தமிழில் லினக்ஸ் மற்றும் திறமூல செயலிகளைப் பயன்படுத்தவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ள விக்கி. தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் இயங்கும் இந்த விக்கியில் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
  • வலைப்பதிவர்களுக்கான விக்கி
    தமிழ் வலைப்பதிவர்களுக்காக இயங்கும் இந்த விக்கியில் வலைப்பதிவு தொழில்நுட்பங்களையும், வலைப்பதிவர்கள் சந்திக்கும் சவால்களையும் சேகரிக்கிறார்கள்.
  • விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள்
    விக்கிபீடியாவின் தமிழ் பகுதியில் அனைத்து தலைப்புகளின் கீழும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அன்மைக் காலங்களில் விக்கிபீடியா தளம் வேகப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தளம் பல நேரங்களில் மிக மெதுவாக இயங்கலாம்.


Posted by நவன் பகவதி on March 5th, 2005 :: Filed under பொது