Bhutan – World’s largest book

‘இது வரை பிரசுரமானதிலேயே பெரிய புத்தகம் இது தான்’ என்ற சாதனையை படைத்திருக்கும் புத்தகம் – ‘Bhutan’. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் இந்த புத்தகம், பூட்டான் நாட்டின் கலாசாரத்தை காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.

எம்மாம் பெரிய புக்
புத்தகத்தை காணோமேன்னு தேடாதீங்க.
சுவத்தில ஆளுசரத்துக்கு சாத்தி வைச்சிருக்கு பாருங்க.
அது தான் நான் சொன்ன புக்.

நானும் ஒரு பிரதி வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள் யாராவது வாங்கி் பரிசளிக்கும் போது நான் வாங்கி வைச்சிருக்கிற காப்பி வேஸ்டாயிடுமேன்னு விட்டுட்டுட்டேன் (ஹி.. ஹி.. விலை $10,000 தான் :( ).

நன்றி: http://www.kottke.org/04/10/bhutan-book

தேர்தல் இயந்திரங்கள்

அமெரிக்க ஓட்டெடுப்பு இயந்திரம் இந்திய வாக்கெடுப்பு இயந்திரம்திருவிழா
ஜோரா நடந்திட்டிருக்கும் போது எப்போதோ படித்த ஸ்லாஷ்டாட்
(Slashdot) பதிவு இன்று நியாபகத்திற்கு வந்து ‘இந்த முறை எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியை எழுப்பியது.

அமெரிக்காவில் வாக்கெடுக்க பயன்படும் இயந்திரங்கள் (Diebold, ES&S, Sequoia என்ற முக்கிய தயாரிப்புகள்) அனைத்தும் விண்டோஸ் இயக்குதளத்தை கொண்டு இயங்குபவை. இதில் Diebold இயந்திரத்தில் கடந்த சில வருடங்களில் பல பிரச்சனைகள் நேர்ந்திருக்கின்றன. Diebold இயந்திரங்களால் கடந்த சில வருடங்களில் நேர்ந்த குளறுபடிகளை www.computerworld.com பட்டியலிட்டிருக்கிறது.

techtarget.com நேற்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மையினை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.

techtarget.com தளத்தில் இருந்து

The most popular tabulation software — GEMS, made by Diebold –came under scrutiny in 2002 when Bev Harris, an investigative journalist, found a copy of the source code on an unsecured Diebold Web site. The application runs on a standard Windows PC and requires a password to access vote data. Harris discovered vote data tored in an unprotected
Microsoft Access database where anyone with physical access to the machine could tamper with the results — no password needed.

ஏற்கெனவே இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு நடக்கிற இந்த தேர்தலில் தொழில்நுட்பத்தால் ஏதும் பிரச்சனை நடக்காமல் இருந்தால் சரி.

நான் குறிப்பிட்ட ஸ்லாஷ்டாட் பதிவில் பெரும்பாலானோர் கேட்டிருந்த கேள்வி – “இவ்வளவு குழப்பாமான/பாதுகாப்பில்லாத இயந்திரத்திற்கு பதில் இந்தியா செய்திருப்பது போல ஒரு எளிமையான, அதே நேரம், பாதுகாப்பான இயந்திரத்தை அமெரிக்காவால் ஏன் சிந்திக்க முடியவில்லை?” அங்கேயே ஒருவர் செல்லியது போல அமெரிக்காவின் விண்வெளி பேனாவும் ரஷ்யாவின் பென்சிலும் தான் நியாபகத்திற்கு வருகிறது.

அமெரிக்காவில் ஜியார்ஜ் புஷ் அதிருப்தியாளர்களை விட இங்கே அதிகமாக டோனி பிளேர் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவுகள் விரைவிலேயே வரவிருக்கும் இங்கிலாந்து தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று.