என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்? – போஸ்ட் மார்டம்

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்களுக்காக சைக்கோ ஜோசியம் மாதிரி ஒரு கணிப்பு நடத்தியிருந்தேன். பலரும் முடிவுகள் ‘குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.

சிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம்.

நான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது இந்த சோதனையின் முடிவுகள்:

Continue reading

மன்னித்து விட்டோம்

முதலில் sorry சொல்லும் சில புகைப்படங்களை பார்க்கையில் ‘அட!!! வித்தியாசமாக இருக்கிறதே’ என்று தோன்றியது. அடுத்த சில நாட்களிலேயே ‘எதற்கு வருந்த வேண்டும். நாம் செய்தது நியாயமே’ என்று சிலர் கிளம்ப ‘சபாஷ் சரியான போட்டி’ன்னு சொல்ல தோன்றாவிட்டாலும், இந்த போட்டியின் போக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது.

இப்போது ‘appologies accepted‘ (மன்னித்து விட்டோம்) என்று ஒரு தளம் துவக்கப்பட்டுள்ளது. வருத்தம் தெரிவித்த அமெரிக்கர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் இங்கே சில புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.

apologies accepted

இந்த தொடர் இயக்கம் ஒரு விதத்தில் ஒரு பார்வையாளனாக எனக்கு சுவாரசியமாக இருந்தாலும் இது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. எங்கும் இருப்பது போல் போல் இரு தரப்பிலும் கொள்கை பிடிப்புடைய சிலர் இருக்கவே செய்வார்கள்.

ஆனால் இதுக்கு பின்னாடி வியாபார எண்ணங்கள் யாரும் இருக்கிறது என்று ஒரு சின்ன சந்தேகம்.

sorryeverybody.com டி-சர்ட்களை பார்க்கையில் இந்த சந்தேகம் கொஞ்சம் வலுக்கவே செய்கிறது.

அடுத்து என்ன? sorry சொல்லும் Coffe mugs, pens, paper weights, வாழ்த்து அட்டைகள் என்று வரிசையாக வந்தாலும் வரலாம்.

தீராத விளையாட்டு OS

இன்றைக்கு காலையில் அலுவலகத்தில் நுழையும் போதே எனது கணினி எனக்காக ஒரு ஆச்சரியத்தை வைத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு முன்பாகவே நான் Windows XP SP2 நிறுவியிருந்ததை பற்றி எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட சமர்த்தாக இந்த புதிய சேவைப்பொதி வேலை செய்ததில் எனக்கு பெரிய ஆச்சரியம்.
Continue reading

வணக்கம் WordPress

கிட்டத்தட்ட ஆறு மாதமாக கட்டி மேய்த்து வந்த Nucleus/Blog:CMS க்கு குட் பை சொல்லி விட்டேன்.

சில/பல தொழில் நுட்ப காரணங்களாலும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் எனது தமிழ் வலைப்பதிவையும் WordPressக்கு மாற்றியிருக்கிறேன். பதிவுகளை நியூக்கிளியஸில் இருந்து WordPressக்கு கடத்தி வந்ததில் இன்னமும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வதாக உத்தேசம்.

புதிய தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.

நவன் பகவதி

பொங்கலோ பொங்கல்

நாளைக்கு காலையில் எழுந்து வாழ்த்து சொல்வதற்கு மறந்தாலும் மறந்து விடுவேன். (அந்த அளவிற்கு என் மேல் எனக்கு நம்பிக்கை). இன்னும் அரை மணி நேரம் காத்திருந்து இன்று இரவே வீட்டுக்கு பேசி விட்டு பின் தூங்கலாம் என்று இன்னமும் விழித்திருக்கிறேன்.

அப்படியே உங்களக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

என்னது? இன்னைக்கு தீபாவாளியா…!!? பொங்கல் இல்லையா…?

அட போங்கப்பா. இங்கே இருக்கையிலே தீபாவளி பொங்கல் எல்லாம் ஒரே மாதிரி (சாதாரணமா) தான் இருக்கு.

சரி… சரி… சரியா சொல்லிடுறேன்…

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

(ம்ம்.. சீக்கிரமே ஊருக்கு ஒரு விசிட் அடிக்கனும்.)

அன்புடன்
நவன் பகவதி

ஊருக்கும் வெட்கமில்லை…

வருத்தமில்லை


“ஒரு தப்பு நடந்துட்டுங்க எசமான்”னு அமெரிக்கர்கள் நிறைய பேர் அங்கே வருந்தினால், எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை
என்று (கொஞ்சமே) கொஞ்சம் பேர் இங்கே கூடியிருக்கிறார்கள்.

அரை வேக்காட்டுத்தனமாய் அமைக்கப்பட்டுள்ள http://www.werenotsorry.com/ தளத்தில் உள்ள புகைப்படங்கள் எதிலும் கொஞ்சம் கூட ஜீவன் இருப்பதாய் தெரியவில்லை. புகைப்படங்களில் மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் என்னுடைய சாய்ஸ் http://www.sorryeverybody.com/ தான்.

சூடா என்ன ஓடுது?

We are sorry

அமெரிக்க தேர்தல் முடிஞ்சு ஒரு வாரம் ஆன பின்னும் ‘தேர்தல்’ங்கிற வார்த்தை தான் வலைப்பதிவுகளில் சூடா ஓடிட்டிருக்கு. என்னோட பங்குக்கு நானும் இன்னொரு பதிவு போட்டு வைக்கலாமேன்னு … 🙂
Continue reading

என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்?

கேள்வி??????

வலைப்பதிவர்களுக்கு ஏழு கேள்விகள்!!!. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.

சோதனைக்கு நீங்கள் தயாரா?

Continue reading