Thamiraparani Thendral

பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்

பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் குழம்பிய ஒரு ஜீவனை சந்தித்திருக்கிறீர்களா? இது என்ன சின்ன புள்ளைத்தனமா இருக்குங்குறீங்களா.

அந்த ஜீவன் வேற யாரும் இல்லை நான் தான். குழப்பம் ஆரம்பித்தது 6ஆம் வகுப்பிற்கான சேர்க்கையின் போது.

அது வரைக்கும் எங்கள் குடும்பம் நடத்தி வந்த பள்ளியில் (பாட்டி ஆரம்பித்த
மழலையர் பள்ளி) படித்து வந்த எனக்கு, 6ஆம் வகுப்பில் சேர்வதற்காக நெல்லை
சாஃப்டர் மேல்நிலை பள்ளிக்கு சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.


Posted by நவன் பகவதி on August 31st, 2004 :: Filed under கணினி,பொது

ஈராக் போரும் இணைய குறும்பர்களும்

இந்த முறை மிரட்டுவது பேரழிவினை உருவாக்கும் ஆயுதங்கள் அல்ல. எதேச்சையாக ஒரு ஃபோரத்தின் பாதுகாப்பை இந்த குறும்பர்கள் உடைத்தெரிந்து உள்ளே நுழைந்திருப்பதை பார்த்த பின் கூகள் தேடுபொறியில் தேடியதில் கிட்டியவை.


Posted by நவன் பகவதி on August 30th, 2004 :: Filed under பொது

கோடையின் கடைசி குதூகலம்

இந்த வாரம் இலண்டனின் மிகப்பெரிய வருடாந்திர திருவிழாவான ‘நாட்டிங் ஹில் கார்னிவல்’ நடைபெறுகிறுது. ரியோடி ஜெனரோவின் கார்னிவலுக்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய கார்ணிவல் இந்த நாட்டிங் ஹில் கார்னிவல் (Notting Hill Carnival) தான்.

நமது தேர் திருவிழா போல கார்னிவல் நாட்களில் நகரமே களை கட்டிவிடும். மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களில் தெருக்களுக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் அகஸ்து மாதத்தின் கடைசி வாரயிறுதியில் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 40 வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், கோடையின் இறுதி திருவிழா இது.


Posted by நவன் பகவதி on August 30th, 2004 :: Filed under பொது

கனவு கலைந்தது?

இன்றைய போட்டியில் அஞ்சு பாபி ஜியார்ஜினால் ஆறாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. ஆனாலும் இது அவர் பெருமை பட கூடிய வகையில் அமைந்தது என்றே சொல்லலாம். இன்றைய போட்டியில் 6.83 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். பாராட்டுகள் அஞ்சு.


Posted by நவன் பகவதி on August 27th, 2004 :: Filed under விளையாட்டு

ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மோகினி பரத்வாஜ்

கடனில் தத்தளித்த ஒரு ஒலிம்பிக்ஸ் வீரங்கனைக்கு ‘நடிகை ரம்பா’ பண உதவி செய்து, அந்த உதவியால் அந்த வீராங்கனை ஒலிம்பிக் பதக்கம் வென்று வந்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா?


Posted by நவன் பகவதி on August 25th, 2004 :: Filed under விளையாட்டு

விவஸ்தை கெட்ட வைரஸ்

"பகல்ல பக்கம் பாத்து பேசு. இராவுல அதுவும் பேசாதேம்பாங்க." இப்பம் புதுசா வந்திருக்க Rbot-GR வைரஸா பத்தி படிச்சதுக்கப்புறம் பேசுறது என்ன மூச்சு விடுறதுக்கு முன்னாடி கூட ரொம்ப யோசிக்கனும் போல இருக்கு. ஆசையாக ‘வெப் கேம்’ வாங்கி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கிலி உண்டாக்குகிறது இந்த வைரஸ்.


Posted by நவன் பகவதி on August 24th, 2004 :: Filed under கணினி

எஸ்கேப்…

நானும் ரெண்டு வருஷமா டிமிக்கி கொடுத்திட்டு வர்ரேன். இன்னைக்கு எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டேன்.

ஊரிலே இருந்து அம்மா ஃபோன். ஃபோன் அடிக்கும் போதே பட்சி சொல்லுச்சு ஆஃபிஸ் நேரத்திலே ஃபோன் வந்துச்சுன்னா ஏதாவது வில்லங்கமா தான் இருக்குமுன்னு.


Posted by நவன் பகவதி on August 23rd, 2004 :: Filed under வாழ்க்கை

ஒலிம்பிக்ஸில் இந்தியா

வெள்ளி பதக்கம் வென்று இந்தியர்களை களிப்படைய செய்த மேஜர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு வாழ்த்துகள் மற்றும் ஆயிரம் கோடி நன்றிகள். இந்தியாவின் மற்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் எவ்வளவு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு குறிப்பு இது.

ஹாக்கி வீரர்களிடையே கோஷ்டி பூசல்

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் வீரர் ‘ககன் அஜித் சிங்’ பந்தை தனக்கு பாஸ் செய்யவில்லை என்று தனராஜ் சிங் கத்துகிறார். ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் போது தனிப்பட்ட விரோதங்களை காட்டும் அளவிற்கு நம் வீரர்கள் ஒழுக்கம் கெட்டுப் போனார்களா?


Posted by நவன் பகவதி on August 22nd, 2004 :: Filed under விளையாட்டு

Linux Technical Resource Kit

லினக்ஸ் ஆர்வலர்களுக்கு ஒரு செய்தி. நாவல் கம்பெனி ‘லினக்ஸ் டெக்னிகல் ரிசோர்ஸ் கிட்‘டை இலவசமாக வழங்குகிறது.

இந்த ‘ரிசோர்ஸ் கிட்’ 3 டிவிடிகளில் 10GB அளவிற்கான மென்பொருட்களுடன் வருகிறது. இதனுடன் வரும் மென்பொருட்களின் விபரம்:


Posted by நவன் பகவதி on August 21st, 2004 :: Filed under கணினி

இரட்டையர் டென்னிஸ் – லேட்டஸ்ட் ஸ்கோர்

அதென்ஸில் இன்று இரட்டையர் டென்னிஸ் வெங்கல பதக்கத்திற்கான மேட்ச் நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு இந்தியா ஒலிம்பிக்ஸிலிருந்து இரண்டு மெடல்களுடன் திரும்புமா?

‘இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ v க்ரொயேசிய இரட்டையர்கள்

8:30 pm:
தற்போதைய ஸ்கோர் – 6-7(5-7), 5-4
முதல் செட் க்ரொயேசியா.


Posted by நவன் பகவதி on August 20th, 2004 :: Filed under விளையாட்டு